03-08-2023, 09:30 PM
(This post was last modified: 06-10-2024, 01:02 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode -13
ராஜா மூக்கில் வழியும் ரத்தத்தோடு பெவிலியன் திரும்ப,சஞ்சனா ஓடி எதிர்வரவும் சரியாக இருந்தது.அவன் மூக்கில் வழிந்த இரத்தத்தை சஞ்சனா தன் துப்பட்டாவில் துடைக்க துடைக்க அது வழிந்து கொண்டே இருந்தது.அவள் துப்பட்டா முழுக்க அவன் இரத்தம் நனைந்து ஈரமாக்கியது. ஜார்ஜ்ஜை மனதிற்குள் சபித்தாள்.
பதறி அழுது கொண்டே, தன் மொத்த கோபத்தையும் ராஜேஷ் மீது காட்டினாள்.
"அவர் தான் விளையாடி ரொம்ப நாள் ஆச்சு என்று சொன்னார் இல்ல,இப்போ பாருங்க என்னாச்சு" என்று கத்தினாள்.
"சஞ்சனா அமைதியா இரு,எனக்கு ஒன்னும் ஆகலை,அவன் மேல எந்த தப்பும் கிடையாது."
ராஜா சென்று பெவிலியனில் உட்கார,வாசு பேட்டிங் ஆட களத்திற்கு வந்தான்.
ராஜேஷ் வாசுவை பார்த்து"மச்சான் ஒரு புல்டாஸ் போட்டு அவன் warning வாங்கிட்டான்.எப்படியும் பந்து கீழே பட்டு ஸ்லோவாக தான் வரும்.எப்படியாவது தட்டி விட்டு ஒரு ரன் மட்டும் எடுத்து கொடு போதும்.
டேய் அவன் பந்தை உருட்டி விட்டா கூட எனக்கு அடிக்க தெரியாதுடா.ஒரு நல்ல டீமுக்கு அழகு என்ன தெரியுமா?கடைசி பேட்ஸ்மேனை களத்தில் இறங்கவே விட கூடாது.நீங்களும் இருக்கீங்களே.
சரி சரி மச்சான் பார்த்து ஆடு.இந்த ஓவரில் இன்னும் மூன்று பால் தான் இருக்கு.
அந்த மூன்று பந்தையும் வாசு ஒன்றை மார்பிலும்,இன்னொன்றை சூத்திலும்,கடைசி பந்தை முதுகிலும் வாங்கி ராஜேஷிடம் வந்தான்.
என்னடா வாசு முகம் எல்லாம் வேர்த்து கொட்டி இருக்கு.
மச்சான் நல்லா பாருடா ,அது வியர்வை இல்ல,என் கண்ணீர்.அவன் என்னடா பந்து அவ்வளவு வேகமா வீசுறான்.கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் பந்து வந்து உடம்பு மேல படுது.
நீ ஏண்டா கண்ணை மூடற.பந்து வரும் போது பேட்டை வை போதும்.
அடி வாங்கினது கூட பரவாயில்லை மச்சான்,அங்க பாரு பந்தை எங்கே கொண்டு தேய்க்கிறான்.அவன் பந்தில் தேய்த்த எச்சில் எல்லாம் என் சட்டையில் தான்டா இருக்கு.இதை நான்தானேடா வீட்டுக்கு போய் துவைக்கணும்.
சரி சரி,HALF சும்மா வருமா,ஆடு.
அடுத்த ஓவரின் முதல் பந்தில் ராஜேஷ் இரண்டு ரன் எடுக்க முயல,ஆனால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.மீண்டும் வாசு களத்தில் பேட்டிங் செய்ய வேண்டி வந்தது.அதுவும் இரண்டாவது ரன் எடுக்கும் போது ஒரு குட்டி கலாட்டாவே நடந்தது.ஏய் வா வா....இல்லை வராதே வராதே என்று ராஜேஷ் சொல்ல வாசு முற்றிலும் குழம்பி இரண்டாவது ரன்னை எடுக்காமல் திரும்ப ஸ்ட்ரைக்கர் பக்கமே ஓட வேண்டியதாகி விட்டது .
வாசு,எப்படியாவது ஒரு ரன் மட்டும் எடுத்து கொடு போதும்.
நடக்கிறத பேசு,நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டேடா.முதல் பந்தில் அதுவும் சிங்கிள் எடுத்து விட்டு இப்படி safe ஆ போய் நின்னுகிட்டேயே.
சரி சரி ஆடு.அடுத்த பந்தை வாசு கண்ணை மூடி கொண்டு சுத்த,பந்து எங்கே எங்கே என்று அனைவரும் தேட அது safe ஆக கீப்பரிடம் சென்று இருந்தது.ஆனால் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க , நான் அடிச்ச பந்து ஒருவேளை வெளியில் போய் விட்டதோ என்று ஒரு நிமிஷம் வாசு நினைத்தான்.
"டேய் லூசு வெளியில் போ,நீயே ஸ்டம்பை தட்டி விட்டு அவுட் ஆயாச்சு."
நடுவர் ராஜேஷிடம் என்னப்பா அவ்வளவு தானா உங்க டீம் என்று ராஜேஷிடம் கேட்க
அப்பொழுது ராஜா மீண்டும் சஞ்சனாவின் கெஞ்சுதலையும் மீறி களத்தில் இறங்குவதை பார்த்து சந்தோசம் அடைந்தான்.
ராஜேஷ் ராஜாவிடம் வந்து ,மச்சான் இன்னும் 28 பந்து மீதம் இருக்கு,அதுவரை நாம் களத்தில் நின்றால் போதும்.வேற எதுவும் தப்பா பண்ணிட வேணாம்.
சரி ராஜேஷ்.
ராஜேஷ் ,ராஜா இருவரும் single தட்டி கொண்டே இருக்க,ராஜேஷ் மட்டும் அவ்வப்போது 4 ரன்களை அடிக்க ரன் உயர்ந்து கொண்டே வந்தது.14 ஓவர் வரை 75 ரன்கள் எடுத்து வந்து விட்டனர்.கடைசி ஓவரை ஜார்ஜ் வீச வந்தான்.
அவன் வீசிய பந்துகளை இருவருமே லாவகமாக கையாண்டு 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தனர்.கடைசி பால் ராஜா களத்தில் நிற்க ராஜேஷ் அவனிடம் அடித்து ஆடு சைகையில் கூறினான்.
ஜார்ஜ் வேண்டுமென்றே பவுன்சர் வீச,இந்த முறை ராஜா தயாராக இருந்து ,அந்த பந்தை பவுண்டரி எல்லை கோட்டை தாண்டி சிக்சர் அடித்தான்.
நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் sales அணி 89 ரன்களை எடுத்தது.
ராஜேஷ் ராஜாவிடம் "எப்படியோ ராஜா ஓரளவு கௌரவமான ஸ்கோரை எடுத்து விட்டோம்,இதற்கு மேல் தோற்றாலும் பரவாயில்லை."
அடுத்து telesales அணி பேட்டிங் செய்ய வந்தது. ஜார்ஜ்ஜும் , சதிஷும் களம் இறங்கி அடித்து ஆடினர். முதல் நான்கு ஓவரில் 44 ரன்களை குவித்தனர்.
ராஜேஷ் ராஜாவை அழைத்து ,எப்படியும் யார் போட்டாலும் ரன் போயிட்டு தான் இருக்கு so நீயே வந்து பந்து போடு என்றான்.
ராஜா பந்து வீச முதல் இரண்டு பந்துகளும் wide ஆக சென்றது.
அதைப் பார்த்து ஜார்ஜ் "டேய் சதிஷ் நாம ரன்னே அடிக்க தேவையில்லை. இவனுங்களே ரன்னை வாரி வழங்கிடுவாங்க.இந்த ஒவரிலேயே மேட்ச்சை முடிச்சு விடு.
சதீஷ் அடுத்த பந்தை கவனக்குறைவாக எதிர்கொள்ள பந்து inswing ஆகி காலுக்கும் பேட்டுக்கும் நடுவில் நுழைந்து ஸ்டம்பை தெறித்தது. முதல் விக்கெட் 46 ரன்களுக்கு விழுந்தது.
ராஜேஷ் சந்தோஷத்தில் ஓடி வந்து ராஜாவை கட்டி பிடித்தான்.
எப்படி மச்சான் என்னால நம்பவே முடியல
ரொம்ப சிம்பிள் ராஜேஷ் ,அவன் சைக்காலஜியில் விளையாடினேன். வேண்டும் என்று முதல் இரண்டு பந்தை வைடாக வீசினேன். மூன்றாவது பந்தும் வெளியில் தான் வரும் என்று அவன் ஏமாந்த சமயம் பந்தை உள்நோக்கி வீச அவன் அவுட் ஆகி விட்டான்.அதுவும் நான் பவுலர்டா.inswing,outswing ரெண்டும் எனக்கு வீச தெரியும்.
சூப்பர்டா, அப்போ கடைசி ஓவரையும் நீ தான் வீச போற
ராஜா அதற்கு "போடா முட்டாள் இன்னும் 44 ரன்கள் தான் அவர்கள் எடுக்க வேண்டும் 65 பந்துகள் மீதம் உள்ள நிலையில் 9 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.இந்த மேட்ச் கடைசி ஓவர் வரை போகாது.
இல்ல மச்சான்,என் உள்மனது சொல்லுது.இந்த மேட்ச் கண்டிப்பாக கடைசி ஓவர் வரை போகும்.
அந்த ஓவரிலேயே ராஜா மேலும் ஒரு விக்கெட் எடுக்க telesales அணி ஐந்து ஓவர்களில் 48 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது.
விக்கெட் விழுந்த உற்சாகத்தில் அடுத்தடுத்து sales அணியினர் பந்தை கட்டுக்கோப்பாக வீச டெலிசேல்ஸ் அணியும் ரன்னை குவிக்க திணறினர்.சீரான இடைவெளியில் விக்கெட் வேறு விழுந்து கொண்டே இருந்தது. ஆனால் ஜார்ஜ் மட்டும் ஒரு பக்கம் நங்கூரம் போல் நின்று கொண்டு இருந்தான். ஒவ்வொரு தடவை சேல்ஸ் அணி விக்கெட் எடுக்கும் பொழுது சஞ்சனா துள்ளி குதித்து தன் நாயகனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்.
டெலிசேல்ஸ் அணி 13 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டை இழந்திருந்தது.14 வது ஓவரில் முதல் 5 பந்துகளில் 1,0,2,1,0 என்று மட்டுமே ரன்கள் வந்தது.கடைசி பந்தை கண்ணை மூடி கொண்டு பதினோராவது வீரர் சுற்ற அது பேட்டில் பட்டு கீப்பருக்கு பின் 4 ரன்கள் சென்றது.
அதை பார்த்து ராஜேஷ், டேய் வாசு நீயும் இந்த மாதிரி ஒரு சுற்று சுற்றி இருந்தா நம்ம டீமுக்கு ஒரு நாலு ரன் வந்து இருக்குமில்ல.
நானும் சுத்தினேன் மச்சான்,ஆனா பேட்டில் பந்து படாம ,பேட் தான் ஸ்டம்பில் பட்டு விட்டது.நானெல்லாம் விளையாட வந்ததே பெரிய விசயம் பார்த்துக்க.
ராஜா VS ஜார்ஜ்
கடைசி ஓவர் 6 பந்துக்கள் 6 ரன்கள் TELESALES அணி வெற்றி பெற தேவை.
SALES அணி ஒரு WICKET எடுத்தால் வெற்றி என்ற நிலை.STRIKER முனையில் நிற்பது முதல் ஓவரில் இருந்து களத்தில் இருக்கும் ஜார்ஜ்.
கடைசி ஓவரை ராஜா வீச, ஜார்ஜ் எதிர்கொண்டான்.
முதல் பந்து ஸ்டம்பை நோக்கி யார்க்கராக வீச அந்த பந்தை GEORGE DEFENCE செய்ய மட்டுமே முடிந்தது.
இரண்டாவது பந்தை ஜார்ஜ் ஒரு ஸ்டெப் முன்னாடி வந்து யார்க்கரை புல்டாசாக மாற்றி, ராஜாவின் தலைக்கு மேல் அடிக்க அது நேராக பவுண்டரி லைனுக்கு முன் விழுந்து தொட்டது .இப்பொழுது இலக்கு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே. நான்கு பந்துகள் மீதம் இருந்தது.
ராஜா ஓடி வந்து அதே லென்த் அதே லைனில் ஆனால் வேகம் வெகுவாக குறைத்து வீசினான். ஜார்ஜ் அடித்து முடித்த பின் பந்து பேட்டை மெதுவாக கடந்து சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது.கடைசியில் sales அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
sales அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் சஞ்சனாவும் கலந்து ஆடி கொண்டு இருந்ததை பார்த்து ஜார்ஜ் கோபம் அடைந்தான். ஏற்கனவே தன் பரம எதிரியிடம் தோற்றது ஒருபுறம் ,சஞ்சனா ஆடிக்கொண்டிருந்தது மறுபுறம் என கோபத்தில் அவன் கண்கள் சிவந்தது.
ஜார்ஜ் தன் teammate சங்கீதாவை பார்த்து,அவ ஏன் நம்ம எதிர் அணி பக்கம் போனாள் என்று கேட்க,
அதற்கு சங்கீதா,அவ ராஜாவை காதலிக்கிறா ஜார்ஜ்.போன மாசம் அவ Target முடிக்க அவன் உதவி பண்ணினானம்.உடனே அவன் மேல இவளுக்கு காதல் வந்து விட்டது.
ச்சே,நான் கிரிக்கெட் பிராக்டீஸ் சென்ற இந்த ஒரு வாரத்தில் என்னென்னமோ நடந்து விட்டதே,சஞ்சனா எங்கே போய் விட போகிறாள் என்று நான் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் இந்த ராஜா முந்தி கொண்டு விட்டானே.வெறும் ஃபீல்டு டிரெய்னிங் ஒருநாள் தானே என்று கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய பிசகு. ஜார்ஜ்ஜின் மனதில் சஞ்சனாவை கவிழ்க்க திட்டங்கள் உதயம் ஆயின. உன்னிடம் நான் தோற்று கொண்டே இருக்கிறேன் ராஜா.ஆனால் இந்த தடவை அவளை உன்னிடம் இருந்து பிரித்து என்னை காதலிக்க வைத்து உன்னை வாழ்க்கை முழுக்க அழ வைக்க போகிறேன்.இதுவரை நான் உன்னிடம் தோற்ற அனைத்துக்கும் நான் உனக்கு கொடுக்கும் சரியான தண்டனை இது தான் என மனதில் சபதம் எடுத்தான்.
ஜார்ஜ் வீசும் வலையில் சஞ்சனா சிக்குவாளா? சஞ்சனாவிடம் ராஜா தன் காதலை சொல்ல முடிந்ததா? காத்திருங்கள்.