♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
#82
Episode -10

என்ன மச்சான்,சாயங்காலம் இங்கிலீஷ் பாடமா இல்லை காதல் பாடமா?ராஜேஷ் கேட்டான்.

டேய் ராஜேஷ் ரொம்ப கிண்டல் பண்ணாதே,இவ தினமும் டிபன் கட்டி கொடுப்பதை பார்த்தால் என்னை ரொம்பவே விரும்பறா போல் இருக்கு,

நான் தான் நேற்றே சொன்னேனே மச்சான்,அவ உன் பொண்டாட்டியா ஏற்கனவே சார்ஜ் எடுத்தாச்சு.இதற்கு மேல் டெய்லி sms வரும்,சாப்பாடு வரும்.என்ஜாய்

எனக்கு தான் ராஜேஷ்,இதை ஏற்று கொள்வதில் கொஞ்சம் சங்கடமாக இருக்கு.இப்ப மதியம் என்ன sms அனுப்பி இருக்கா தெரியுமா?நாளைக்கு என்ன சமைச்சு எடுத்து வரட்டும் என்று கேட்கிறா ! நான் என்ன ரிப்ளை பண்ணுவது?

ஏன் மச்சான் சாப்பாடு சரி இல்லையா என்ன?

சாப்பாடு எல்லாம் சூப்பரா தான் இருக்கு,ஆனா எனக்கு தான் இதை ஏற்று கொள்வதில் தயக்கமா இருக்கு.

இங்க பாரு,நீ இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது.எப்படியும் தாலி கட்டிக்கட்டு பின்னாடி செய்ய போறதை இப்போவே அட்வான்ஸா அவ செய்யறா அவ்வளவு தான்.இதை எல்லாம் கண்டுக்காதே,அவகிட்ட காதலை சொல்லி சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆகிற வழியை பாரு.அவ பாடம் சொல்லி கொடுக்கும் போது இப்பவே அங்கே இங்கே என்று தொட்டு பழகு.பள்ளி பாடத்தோடு கொஞ்சம் பள்ளியறை பாடத்துக்கும் இப்பவே ட்ரைனிங் எடுத்துக்கோ.எதிர்காலத்தில் உனக்கு வசதியாக இருக்கும்.

டேய், நீ சொல்ற மாதிரி எல்லாம் பண்ண முடியாது.கல்யாணம் ஆகிற வரை அவளை நான் தொட கூட மாட்டேன்.

ம்ஹீம் நீ வேலைக்கு ஆக மாட்டே,நானே அவகிட்ட பேசிக்கிறேன்.

நீ என்ன அவகிட்ட பேசுவே,

அதை ஏன் நீ கேட்கிற,அண்ணன் தங்கச்சிக்குள்ள ஆயிரம் விசயம் இருக்கும்.

யாரு நீ அண்ணனா,மாமா வேலை பார்த்துக்கிட்டு இருக்கிற இப்போ நீ.

சரி சரி விடு,எல்லாம் என் நண்பனுக்காக தானே.அப்புறம் நாளைக்கு மீன் குழம்பு செய்ஞ்சு கொடுத்து அனுப்ப சொல்லு.

டேய் அல்ரெடி நான் ரிப்ளை பண்ணிட்டேன்.உன் விருப்பம் எதுவாக இருந்தாலும் ஓகே என்று.என்னை பற்றி உனக்கே தெரியும்,என்ன கிடைக்குதோ அதை அப்படியே ஏற்று கொள்வேன்.பிடிச்சது,பிடிக்காதது என்று எனக்கு எதுவும் இல்லை.

நீ வேலைக்கு ஆக மாட்டே,அவனவன் பாரு சின்ன gap கிடைச்சாலும் விமானமே ஒட்டறான்.நீ என்னடான்னா அவ பை பாஸ் ரோடே போட்டு கொடுக்கிறா,ஆனா நீ சைக்கிள் கூட ஒட்ட மாட்டேங்கிற.இன்னிக்கு ஒரு நாள் போகட்டும்,அப்புறம் நானே கோதாவுலே இறங்கறேன்.

ராஜேஷ்,ராஜா இருவரும் பார்க்கில் காத்து கொண்டு இருக்க,ராஜேஷ்  சஞ்சனா நடந்து வருவதை பார்த்து விட்டான்.

மச்சான்,சஞ்சனா வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்கு,அதுக்குள்ள சஞ்சனா பற்றி ஒரு கவிதை சொல்லேன்.

இப்ப எதுக்குடா அது,

சொல்லு மச்சான்,உன் மனதில் அவளை பற்றி என்ன நினைச்சு இருக்கே என்று பார்க்கலாம்.

ராஜா அவள் பின்னாடி வந்து நிற்பதை கவனிக்காமல், அவளை பற்றி வர்ணிக்க
"அவள் முகம் தாமரையா
இல்லை தாமரைதான் அவள் முகமோ
அவள் விழிகள் கயலா
இல்லை கயல்தான் அவள் விழியா
பிறை அவள் நுதலா
இல்லை நுதல் பிறையா
பவளம் அவள் இதழா
இல்லை அவள் இதழ்கள் பவளமோ
பவளக்கொடி அவள் இடையா
இல்லை அவள் சிற்றிடை
பவளக்கொடியா
எனை கொல்லும் இனிய கவிதையே!
எனை கெஞ்ச விடாமல் என் முன் வந்துவிடு!"

வந்து ரொம்ப நேரமாச்சு மச்சான்,முன்னாடி இல்ல உன் பின்னாடி தான் நின்னுட்டு இருக்கா,

அடப்பாவி இப்படி மாட்டி விட்டுட்டுட்டீயே,

சரி மச்சான் நீ கிளாஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் கூப்பிடு,நான் ஒரு ரவுண்ட் போய்ட்டு வரேன்.

டேய் ஒரு நிமிஷம் நில்லுடா,ராஜேஷ் போகாதே,

காதலர்களுக்குள் ஆயிரம் இருக்கும்,நடுவில் நான் எதுக்குப்பா?

ராஜா சஞ்சனாவிடம் "சாரி சஞ்சனா,அவன் ஏதோ உளறிட்டு போறான்."

"அவர் சரியாக தான் சொல்றார்.நீங்க தான் சரியான tube light.கவிதை எல்லாம் பலமா இருக்கே"

அதுவந்து அதுவந்து,

என்னை பற்றி தானே கவிதை சொன்னீங்க,

ராஜா தலை கவிழ்ந்து ஆமோதித்தான்.

"கவிதையில் வர்ணிப்பது,கனவில் கட்டி பிடிப்பது,எல்லாம் உள்ளுக்குள் ஆசைய வைச்சுக்கிட்டு நேராக பார்த்தா மட்டும் ஒன்னும் சொல்றது கிடையாது" என்று முணுமுணுத்தாள்.

"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சஞ்சனா,ஆனா அது காதலா என்று தெரியல.அது வெறும் ஈர்ப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு.அதுவும் நீயும் என்னை காதலிப்பதாக உணர்கிறேன்.

"அப்படியா,நான் உன்கிட்ட வந்து எப்பவாது காதலிக்கிறேன் என்று சொன்னேனா"

இல்லை தான்.ஆனா தினமும் என்னை விழுங்கிற மாதிரி பார்க்கிற பார்வைக்கு என்ன அர்த்தம்,எனக்கு உணவு கொடுப்பதற்கும்,எனக்கு மெஸேஜ் அனுப்புவதற்கும் என்ன அர்த்தம்?

அது பாவம் எப்பவுமே ஓட்டலில் சாப்பிடுகிறானே என்ற கவலை,அப்புறம் ஒரு சின்ன அக்கறையின் வெளிப்பாடு மட்டும் தான்.உங்களுக்கு உண்மையில் என் மேல் காதல் இருந்தால் நேராக என் கண்ணை பார்த்து சொல்லுங்க.நான் அதுக்கு அப்புறம் என் முடிவை சொல்றேன்.

சஞ்சனா மனதிற்குள்"ம்ம் சொல்லுடா சீக்கிரம்,நானும் உன்னை லவ் பண்றேனு சொல்ல தயாராக இருக்கிறேன்"அவனையே நினைத்து கொண்டு குறுகுறுவென்று உற்று பார்க்க

ராஜா அவளிடம்,"ஓகே சஞ்சனா நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.சாரி, நல்லவேளை நீயே சொல்லிட்டே.எனக்கும் உன் மேல இருப்பது வெறும் ஈர்ப்பு தான்.காதல் இல்ல.வந்தால் நானே சொல்றேன்.நீ பாடத்தை ஆரம்பி?"

சஞ்சனாவிற்கு சப்பென்று ஆகி விட்டது.என்மேல உள்ள காதலால் தான் இதை எல்லாம் நீ செய்கிறாய் என்று என்னுடன் சண்டை போடுவான் என சஞ்சனா எதிர்பார்த்தாள்.அதை வைத்தே அவன் வாயாலேயே அவன் காதலை சொல்ல வைக்கலாம் என நினைத்தால் டக்கென்று back அடித்து விட்டானே.மண்டு மண்டு என மனதில் அவனை திட்டி கொண்டாள்.அடுத்த அடி எடுத்து வைக்கும் போது மிகவும் கவனமாக வைக்க வேண்டும் என எண்ணி கொண்டாள்.ஆனால் அவன் அடுத்த உயரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பு மட்டும் அவளுக்கு உறுதியாக இருந்ததால் சொல்லி கொடுப்பதில் அவள் எந்த தவறும் செய்யவில்லை.ராஜாவும் அவள் சொல்ல சொல்ல எளிதில் புரிந்து கொண்டான்.

அவள் கூந்தலில் வைத்து இருந்த மல்லிகை வாசமும்,நெற்றியில் வைத்து இருந்த சந்தனத்தின் வாசமும்,உடலில் இருந்து கிளம்பிய வியர்வை நறுமணமும் அவள் பக்கம் அவனை காந்தம் போல ஈர்த்தாலும்,அவள் நமக்காக தான் மெனக்கெட்டு வந்து சொல்லி கொடுக்கிறாள் என்று புரிந்து கொண்டு பாடத்தில் கவனம் செலுத்தினான்.இருவர் விரல்கள் அவ்வப்போது உரசும் போது தடுமாறி போனான்.

சரி ஓகே ,இன்னிக்கு அவ்வளவு தான்.வீட்டுக்கு போய் நான் சொல்லி கொடுத்ததை பிராக்டீஸ் பண்ணி பாருங்க,நாளைக்கு நீ வரும் போது என்னிடம் ஆங்கிலத்தில் தான் உரையாடனும்‌.சரியா?

ஓகே சஞ்சனா.

ராஜேஷ் வந்து"என்னம்மா தங்கச்சிதாரகை இன்னிக்கு பாடம் ஒரு வழியாக முடிந்து விட்டதா?"

ராஜா அவனிடம்"டேய் நீ இன்னும் போகலையா?"

"நான் எங்கடா போனேன்.இங்கே தான் வெளியே உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.என்ன சஞ்சனா,பையன் எப்படி பாடம் எல்லாம் ஒழுங்கா கத்துக்கிறானா?

"பாடம் கற்று கொள்வதில் எல்லாம் செம sharp தான்,ஆனா மற்ற விசயத்தில் தான் ஜீரோ.உங்க ப்ரெண்ட் தேறுகிறா என்று போக போக பார்ப்போம்."

டேய் ராஜா, நம்ம sales டீம் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஜெயிச்சு semifinal qualify ஆகி ஆச்சு.ஞாயிற்றுகிழமை semi final and final நடக்க போகுது.நீ கண்டிப்பாக வரணும்.

அய்யோ என்னால முடியாது.நீ பிளேயர் ,உனக்கு HR பெர்மிஷன் இருக்கு.நான் சும்மா பார்வையாளர் மட்டும் தான்.நான் வந்தேன் என்று தெரிந்தால் அந்த மேனேஜர் என்னை சும்மா கூட விட மாட்டார்.அதுவும் இல்லாம அந்த மேனேஜர் எனக்கு ரெண்டு முக்கியமான அப்பாயின்ட்மெண்ட் வேற என் தலையில் கட்டி இருக்கார்.அதனாலே கண்டிப்பாக வர முடியாது.

டேய் இந்த முறை sales டீம் vs telesales டீம் ஃபைனல் வரும் போல இருக்கு.உனக்கே தெரியும் நாமும்,அவங்களும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி.அவங்க பக்கம் support பண்ண எல்லோரும் வருவாங்க.கொஞ்சமாவது நம்ம டீமில் சப்போர்ட் யாருனா வாங்கடா.சஞ்சனா நீயே கொஞ்சம் எடுத்து சொல்லு.

ஆகா அருமையான சந்தர்ப்பம்.இந்த மர மண்டைக்கு நம்மோட காதலை புரிய வைக்க இன்னொரு சந்தர்ப்பம் வருகிறது.இதை தவற விடவே கூடாது."பொண்ணுங்க நாங்களே மைதானத்திற்கு வரோம்.உனக்கு என்ன?சும்மா வேலை வேலை என்று ஓடி கொண்டே இருக்க கூடாது.மூளை மழுங்கி விடும்.இந்த மாதிரி அப்பப்போ பொழுது போக்கிலும் பங்கெடுத்து கொள்ள வேண்டும்.அப்ப தான் மூளை sharp ஆக இருக்கும்"

சரி சஞ்சனா,அந்த ரெண்டு appointment முடிச்சிட்டு வரேன்.எப்படியும் வர மதியம் ஆகி விடும் என்று நினைக்கிறேன்.

அது போதும் மச்சான்,எப்படியும் ஃபைனல் தொடங்க மதியம் 3 மணி ஆகி விடும்.அது தான் நமக்கு முக்கியமான match.அப்போ நீ இருந்தா கூட போதும்.

YMCA ground தானே மச்சான்.

ஆமா அதே தான்.

மூன்று பேரும் பிரிந்தார்கள்.

இரவு சஞ்சனா,ராஜேஷ் மொபைலுக்கு அழைத்தாள்.

என்ன அண்ணா,உன் ப்ரெண்ட் இவ்வளவு தத்தியா இருக்கார்,ஒரு பொண்ணு லவ் பண்றத கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்.

ஏன் ,அவனுக்கு தெரியுமே சஞ்சனா, நீ அவனை லவ் பண்ற விசயம்.

ம்ம் ,அதை அவரே சொன்னாரு,நான் சும்மா தான் அவரிடம் விளையாடினேன்,நான் அவரை லவ் பண்ணல என்று,உடனே அவரும் அப்படியே back அடித்து விட்டார்.அவருக்கு புரியாதா ,ஒரு பொண்ணு பழகும் போதே அதில் லவ் இருக்கா இல்லையா என்று.

அய்யோ சொதப்பிட்டீயே சஞ்சனா,

ஏன் என்ன ஆச்சு அண்ணா,

அவன் ஏழு வருஷம் முன்னாடி இங்கே எப்படி வந்தான் தெரியுமா?ஒரு லேடீஸ் கஸ்டமரை பார்த்தா கூட அவன் கை கால் நடுங்கும்.இப்போ தான் நான் அவனை ஓரளவு tune பண்ணி வைச்சு இருக்கேன்.

ஏன் அப்படி ?

எல்லாம் அவங்க அப்பா பண்ண வேலை சஞ்சனா,சின்ன வயசில் இருந்து கூட படிக்கிற பொண்ணு கூட பேசினா போதும் உடனே அவனை அடி பொளந்து கட்டி விடுவார்.போற இடத்தில் எல்லாம் எல்லோர் முன்னாடியும் அவனை அசிங்கப்படுத்தி கொண்டே இருப்பார்.அவன் தினமும் அடி வாங்காத நாளே கிடையாது.ஒரு போலீஸ் ,குற்றவாளியை நடத்துவது போல தான் நடத்துவார்.இப்போ அவன் அப்பா இறந்து விட்டால் கூட டேய் உன் அப்பாடா என்று சொன்னால் போதும் ஒரு நிமிஷம் பயந்து விடுவான்.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எம்டன் மகன் படம் பார்த்தீயா,அதில் வரும் நாசர் கேரக்டர் போல தான் அவன் அப்பா.அவன் வீட்டை விட்டு வெளியே வந்து 14 வருஷம் ஆச்சு.மாசம் ஒருமுறை தான் வீட்டுக்கு போவான்.அதுவும் ஒரு நாள் தான் அங்கு இருப்பான்.அவன் பெரிய தங்கச்சி ஆரம்பத்தில் இருந்தே அவ்வளவு ஓட்டுதலே கிடையாது.அவன் அம்மா அவங்க அப்பாவுக்கு பயந்து பொட்டி பாம்பா இருந்தாங்க.அவனோட வாழ்க்கையில் சந்தோஷமே எப்போ தெரியுமா முதன் முதலில் வந்தது?அவனோட சின்ன தங்கை பிறந்த பிறகு தான்.அதுவும் எப்போ இவனோட பதினைந்தாவது வயதில்.

அப்போ இவனுக்கும்,இவன் சின்ன தங்கைக்கும் 15 வயது வித்தியாசமா?

ஆமா சஞ்சனா,அந்த பொண்ணு தான் முதன் முதலாக இவனை அண்ணன் என்று கூப்பிட்டுச்சு.அவனோட சின்ன தங்கையை தவிர வேறு எந்த பொண்ணோட அவன் பழகியதே இல்ல.சுஜிதா கூட அவன் வாழ்கையில் வந்து மின்னல் போல் போய் விட்டாள்.இந்த சூழ்நிலையில் வளர்ந்த ஒருத்தன் எப்படி இருப்பான் என்று நினைச்சு பாரு.அவன் வாழ்க்கையில் சந்தோசம் கிடைப்பதே ரெண்டே பேர் மூலமாக தான்.ஒன்னு நான்,இன்னொன்னு அவன் சின்ன தங்கை.இப்போ புதுசா அவன் வாழ்வில் நீ வந்து இருக்கே,அவன் களிமண்ணு தான் கல் கிடையாது சஞ்சனா, அதை அன்பு என்னும் தண்ணீர் கலந்து அழகான பொம்மையாக எளிதில் செதுக்க முடியும்.என்ன தான் தங்கை மேல் பாசம் இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிறகு தள்ளி நின்று தான் அன்பு காட்ட முடியும்.ஆனா மனைவியாக வரும் பெண்ணிடம் மட்டும் தான் ஒரு ஆண் முழுமையாக அன்பை வெளிப்படுத்த முடியும்.ஒரு ஆண் முழுமை பெறுவது அவன் மனைவியுடன் மட்டும் தான்.அவன் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வர முடியும் என்றால் அது உன்னால் மட்டும் தான் முடியும்.

சாரி அண்ணா,இப்போ தான் புரியுது.நான் பண்ண தப்பு என்னவென்று.கொஞ்ச கொஞ்சமாக என் காதலை அவருக்கு புரிய வைத்து ஓணம் பண்டிகை அன்னிக்கு கண்டிப்பாக என் காதலை சொல்லி விடுகிறேன்.

ரொம்ப சந்தோசம் சஞ்சனா.சீக்கிரம் அவன் வாழ்வில் ஒளியேற்று.நீங்கள் இருவர் இணையும் நாளே எனக்கு தீபாவளி.

ஆனால் கிரிக்கெட் முடிந்த பிறகு அவள் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ போகின்றன.ஓணம் பண்டிகை அன்று எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்து இருவரையும் பிரிக்க போகிறது. 
[Image: IMG-20230731-WA0011.jpg]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 01-08-2023, 10:21 PM



Users browsing this thread: 22 Guest(s)