28-07-2023, 09:02 PM
(This post was last modified: 06-10-2024, 12:12 PM by Geneliarasigan. Edited 6 times in total. Edited 6 times in total.)
Episode -6
ராஜா உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விசயம் பேசணும்
சொல்லு சுஜி,என்ன விசயம்.
நம்ம லவ்வ நாம் break up பண்ணிக்கலாம்.
ராஜா அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.
ஹே சுஜி எப்ப பார்த்தாலும் உனக்கு விளையாட்டு தானா?
இல்ல ராஜா நான் நிஜமா தான் சொல்றேன்.எனக்கு வீட்டில் மாப்பிளை பார்த்துட்டாங்க,மாப்பிளை ஐடி கம்பனியில் வேலை.மாசம் 1.5 லட்சம் சம்பளம்.நீ வெறும் 25000 ரூபா சம்பளம் வாங்குற.அதுவும் ஒரு தங்கை கல்யாணத்துக்கு வாங்கிய கடன் இன்னும் நீ முடிக்கல,இன்னொரு தங்கை கல்யாணம் வேறு நீ பண்ண வேண்டி இருக்கு.நீ வாங்கும் சொற்ப சம்பளத்தில் உன் வீட்டுக்கும் செலவு செய்து கொண்டு என்னை எப்படி வைத்து உன்னால் வாழ முடியும்?
இதை எல்லாம் தெரிஞ்சு தானே சுஜி நீ என்னை லவ் பண்ணே,
ஆமாம் லவ் பண்ணும் போது எதுவும் தெரியல.ஆனால் கல்யாணம் என்று வரும் போது தான் பயமாக இருக்கு.எனக்கு இப்போ கிடைக்க போகும் லைஃப் ஸ்டைல் கண்டிப்பாக உன்னால தர முடியாது.சரி உனக்காக வேணா நான் இறங்கி வரேன்.
நீ உங்க அப்பா,அம்மா,தங்கைகளை அப்படியே விட்டு விட்டு என்னுடன் வருவீயா சொல்லு.நான் என் அப்பாகிட்ட உன்னை பற்றி பேசறேன்.
ராஜா மௌனமாக இருந்தான்.
பின் அவளிடம் "இல்லை சுஜிதா யாருக்காகவும் என் தங்கைகளை நான் விட்டு விட்டு வர முடியாது"
"அப்ப நீ என்னை மறந்துடு"
"நீ சொல்வது சரி தான் சுஜி,கண்டிப்பாக உனக்கு கிடைக்க போகும் சொகுசு வாழ்கையை என்னால் தர முடியாது தான்.நீ எடுத்த முடிவு சரி தான்.Advance congratulations to your marriage.உனக்கு விருப்பம் இருந்தால் கல்யாண பத்திரிக்கை அனுப்பு.
"சுஜி என்னை விட்டு போகாதே"என்று அவன் மனம் மட்டும் கத்தி கொண்டே இருந்தது. அவள் போகும் திசையை மட்டும் கண்களில் கண்ணீரோடு நீண்ட நேரம் வெறித்து பார்த்து கொண்டு நின்று இருந்தான்.
அவன் மொபைல் ஃபோன் ரிங் ஒலித்து கொண்டே இருக்க அதன் சப்தத்தில் கண் விழிக்க கனவு கலைந்தது.ச்சே என்ன இது கனவிலா இவ்வளவு நேரம் கத்தி கொண்டு இருந்திருக்கிறேன்?
நான்கு வருடம் முன்பு நடந்த நிகழ்ச்சி நீண்ட நாட்கள் கழித்து இன்று ஏன் கனவாக வந்தது?புரியாமல் குழம்பினான்.ஒருவேளை நேரில் இது போல் கத்தி கூப்பிட்டு இருந்தால் சுஜி என்னை விட்டு விலகி இருக்க மாட்டாளோ?.அப்பொழுது அவளுக்கு வாழ்த்து மட்டும் கூறி விலகி வந்தது தப்போ?
மொபைல் மீண்டும் மீண்டும் ஒலிக்க தூக்கம் கலைந்து " ஹலோ யார் பேசறது" என்று கொட்டாவி விட்டு கொண்டே கேட்டான்.
சுஜிதா கனவின் வழியே வெளியே அவன் மனதில் இருந்து வெளியே செல்ல,இப்பொழுது அந்த இடத்தை பிடிக்க சஞ்சனா வந்து விட்டாள்.
ஹலோ நான் சஞ்சனா பேசறேன்.என்ன இப்ப தான் தூங்கி எந்திரிச்சிங்களா?
ஆமாம் சொல்லு சஞ்சனா,என்ன விசயம்?
என்ன விஷயமா?நான் தான் உங்ககிட்ட சொன்னேனே இன்னக்கி உங்க கூட வரேன் என்று.லொகேஷன் நீங்க அனுப்பவே இல்ல
சஞ்சனா நீங்க விளையாட்டா கேட்டீங்க என்று நினைச்சேன்.சீரியஸா ஃபோன் பண்றீங்க.அதுவும் காலங்காத்தால.
என்னது காலங்காத்தாலயா சோம்பேறி,மணி ஏழு ஆச்சு.உனக்கு இன்னிக்கி மீட்டிங் 8.30 மணிக்கு.அதாவது ஞாபகம் இருக்கா,
என்னது மணி ஏழா !,அய்யயோ நீ போனை வை நான் குளிச்சிட்டு கிளம்பனும்.
சரி நான் எங்கே வர வேண்டும் என்று லொகேஷன் அனுப்பு.
சஞ்சனா,உனக்கே வாரம் ஒருமுறை தான் லீவ் கிடைக்கும்.ஜஸ்ட் என்ஜாய் பண்ணுங்க.எதுக்கு பாவம் என்கூட வெயிலில் சுற்றனும் என்று ஆசைப்படறீங்க.
இங்க பாருங்க,நீங்க எனக்கு லொகேஷன் அனுப்ப வில்லை என்றால் அப்புறம் நான் மீட்டிங் நடக்கும் இடத்திற்கே வந்து விடுவேன்.
வேற வினையே வேண்டாம் தாயே ,நீங்க நம்ம ஆபீஸ் பக்கத்தில் உள்ள தெருவில் ஒரு டீ கடை இருக்கும்.அங்க 9.30 மணிக்கு வாங்க.நான் உங்களை மீட்டிங் முடித்து விட்டு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.போதுமா?
"ஓகே அப்படி வாங்க வழிக்கு"
வெயிட் சஞ்சனா எனக்கு மீட்டிங் இருப்பது உனக்கு எப்படி தெரியும்?இந்த மீட்டிங் நடப்பது எங்க டீமை தவிர வேறு யாருக்கும் தெரியாதே!
"அது சஸ்பென்ஸ் நான் சொல்ல மாட்டேன் "என்று சஞ்சனா போனை வைத்தாள்.
என்ன இது இவளை பார்த்தாலே என் மனம் அலைபாயுதே,இவளிடம் பேசும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உருவாகிறதே!வேண்டாம் ராஜா,ஏற்கனவே ஒரு தடவை காதலித்து பட்ட அவஸ்தை போதாதா?நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
எப்படியாவது இன்று ஒருநாள் மட்டும் கூட்டி போய் வந்துவிட்டு ,அவளை தவிர்க்க பார்.அது தான் உனக்கு நல்லது.இன்னக்கி எனக்கு மீட்டிங் இருப்பது எங்க north சேல்ஸ் டீம் தவிர வேற மற்ற sales டீமுக்கும் கூட தெரியாதே.இவளுக்கு எப்படி தெரிந்தது.?எவனோ ஒருத்தன் உளவாளி நம்ம டீமில் இருந்து அவளுக்கு துப்பு கொடுக்கிறான்.அவன் யார் என்று முதலில் கண்டுபிடிக்கனும்.என்று மனதில் எண்ணினான்.
ஹலோ சஞ்சனா,என்ன நான் சொன்ன மாதிரி செய்ஞ்சியா,அவன் ஓத்துகிட்டானா?
ராஜேஷ் அண்ணா,நீங்க சொன்ன மாதிரியே தான் என்னென்னவோ சொல்லி என்னை கழட்டி விட பார்த்தார்.அப்புறம் மீட்டிங் நடக்கிற இடத்திற்கு வருவேன் என்று மிரட்டினதும் தான் ஒத்துக்கிட்டார்.
சஞ்சனா,இந்த ஏழு வருஷமா அவன் கூட நான் நெருக்கமாக பழகி கொண்டு இருக்கிறேன்.அவனின் ஒவ்வொரு அங்க அசைவுகளிலேயே அவன் என்ன நினைக்கிறான் அடுத்து என்ன செய்வான் என்று கண்டுபிடித்து விடுவேன்.நான் உறுதியாக சொல்றேன்,முதல் பார்வையிலேயே நீ அவனை சாய்ச்சுட்ட.என்கிட்ட எந்த ஒரு விசயத்தையும் அவன் மறைச்சது இல்ல ,முதல் காதல் உட்பட.அவன் எனக்கு சிறந்த நண்பன்.அவன் முதல் காதல் ரணத்தில் இருந்து இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா மீண்டு வந்து இருக்கான்.மீண்டும் அந்த ரணத்தை கீறி காயத்தை பெரிசாக்கி விடாதே.
என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க,உங்களுக்கு அவரை சென்னை வந்த பிறகு தான் தெரியும் என்றால் ,எனக்கு அவரை சென்னை வரும் முன்பே தெரியும்.கடந்த ஏழு வருடத்தில் ஒரு நாள் கூட அவரை நினைக்காமல் இருந்தது கிடையாது.அந்த நினைவு தான் இப்போ காதலா வளர்ந்து இருக்கு.நான் கண்டிப்பா அவர் காயத்தை ஆற்றும் மருந்தாக தான் இருப்பேன்.நீங்க கவலைபடாதீங்க.
"சரி சஞ்சனா,அவனை பற்றி ஒவ்வொரு தகவலும் அப்பப்ப தரேன்.உன் காதல் வெற்றி பெற எல்லாவகையிலும் உதவி செய்ய நானாச்சு.என் கண்ணையே நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன் சஞ்சனா,அதில் எப்பவும் நான் ஆனந்த கண்ணீரை தான் பார்க்கணும்" என்று ராஜேஷ் கிண்டல் பண்ண
"ச்சீ போங்கண்ணா" என வெட்கத்துடன் போனை வைத்தாள்.
சஞ்சனா தன் அப்பாவிடம் "அப்பா நான் வெளியே போய்ட்டு வரேன்."
என்ன சஞ்சனா இன்னிக்கு லீவ் என்று சொன்னே
ஆமாப்பா இன்னிக்கு லீவு தான்.நான் முக்கியமான ஒருத்தரை பார்க்க போறேன்.
ஒரு நிமிஷம் சஞ்சனா,என்ன இன்னிக்கு உன் தோற்றத்தில் மாற்றம் தெரியுது.
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே அப்பா
இல்ல என் பொண்ணை பற்றி எனக்கு தெரியாதா?உன் உள்ளத்தில் பொங்கி வரும் மகிழ்ச்சி தான் உன் முகம் நன்றாக காட்டி கொடுக்குதே
சஞ்சனா அவள் அப்பா அருகில் வந்து அமர்ந்து"நீங்க சொன்னது உண்மை தான்ப்பா,உங்களுக்கே நல்லா தெரியும்,எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு சொல்லாமல் நான் செய்ய மாட்டேன்.கூடிய விரைவில் நான் உங்களுக்கு ஒரு நல்ல விசயம் சொல்ல போறேன்.அது வரை கொஞ்சம் பொறுமையா இருங்க"என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்து விட்டாள்.
அவருக்கா விசயம் தெரியாமல் போகும்.அவரும் பருவ வயதை கடந்து வந்தவர் தானே. தன்னோட பெண் ஒருவனிடம் காதல்வயப்பட்டு இருக்கிறாள் என்று உணர்ந்து விட்டார்.கண்டிப்பாக ஒரு நல்லவனை தான் தேர்ந்தெடுப்பாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.அவள் வாயாலேயே வந்து சொல்லட்டும் என்று சிரித்து கொண்டார்.
ராஜா சொன்ன இடத்தில் சஞ்சனா காத்து இருக்க,ராஜாவும் கொஞ்ச நேரத்தில் தூரத்தில் வருவது தெரிந்தது.
"ஹே சஞ்சனா இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க"என்ற குரல் கேட்டு ஒரு நிமிடம் திரும்பினாள்.Royal enfield bike இல் ஒயிலாக அமர்ந்து இருந்தவனை பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டாள்.
சஞ்சனா முன் முதல் மோதல் ஆரம்பிக்குமா ?