♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
#34
Episode -5

ஹாய் பல்லவி ,எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா,?

ம் ,நீ new joinee சஞ்சனா தானே,என்ன உங்க leads எதாவது,எங்க டீம் பசங்க யாராவது எடுத்துட்டுங்களா?

இல்ல பல்லவி,நான் ஒருத்தருக்கு நன்றி சொல்லணும்,அதுக்கு கொஞ்சம் என்னை அவர்கிட்ட introduce பண்ணி வைக்க முடியுமா?

யாரு?

North zone டீம்  ராஜா தான்.

ராஜாவா ! சரி வா ,நான் உன்னை அறிமுகம் பண்ணி வைக்கிறேன்.

பல்லவி ராஜாவிடம் செல்ல,சஞ்சனா பின் தொடர்ந்து சென்றாள்.என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் உடல் தந்தி அடிக்க தொடங்கியது.அதுவும் இத்தனை பேர் நடுவில் எப்படி என்ன பேசுவது?வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

ஹலோ ராஜா எப்படி இருக்கீங்க ,

ஹாய் பல்லவி,நானே பங்ஷன் முடிஞ்சதும் உங்களை வந்து பார்க்கலாம் என்று நினைச்சேன்.நீங்களே வந்துட்டீங்க

என்ன ராஜா,ஸ்டார் அவார்ட் ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு போல,

ஆமா பல்லவி,கடைசி நிமிடத்தில் ஒரு ஆர்டர் மிஸ் ஆயிடுச்சு.விடுங்க அடுத்த மாதம் பார்த்துக்கலாம்.

சரி,இவங்க பேரு சஞ்சனா,telesales டீம் உங்களை பார்க்கணும் என்று சொன்னாங்க

அப்பொழுது தான் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சஞ்சனாவை பார்த்தான்.

முதல் பார்வையிலேயே என்னை, நீ கொள்ளை அடித்தாயே..!
என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே..!
நீ மலரில் பிறந்தவளா..!
இல்லை நிலவில் வளர்ந்தவளா..!
அந்த காமன் வீட்டுக்கு புது ஜன்னல் திறந்தவளா..!


அவளின் பொன்னனிற மாசுமருவற்ற நிலவு முகத்தை பார்த்தவுடன் ஒரு நிமிடம் நிலைதடுமாறி தான் போனான்.அழகு என்றால் நிச்சயம் ஆண் கிடையாது,பெண் தான்.பெண்ணின் மொத்த அழகையும் அல்லவா இவள் குத்தகைக்கு எடுத்து கொண்டு வந்து இருக்கிறாள்.மூச்சு விடும் ரோஜா பூவை இன்று தான் முதன்முதலில் பார்க்கிறான்.யுகம் யுகமாய் தொடர்ந்து வந்த உறவு மீண்டும் சந்திப்பது போல இருவரும் ஒருவரையொருவர் மெய்மறந்து பார்த்து கொண்டே  இருக்க, பல்லவி தான் இருவரையும் நனவுலகுக்கு கொண்டு வந்தாள்.

ஹலோ ராஜா,ஹலோ சஞ்சனா என்ன ரெண்டு பேரும் சும்மா பார்த்துட்டே இருக்கீங்க

ராஜா தடுமாறி"சாரி பல்லவி இவங்க பேர் என்ன சொன்னீங்க"

ம் சஞ்சனா என்று சொன்னேன்.உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கு போல.ஞாபகம் எல்லாம் வேறு எங்கேயோ இருக்கு.

"அது ஒண்ணுமில்ல பல்லவி"பேச்சை திசைமாற்ற விரும்பி ராஜா சஞ்சனாவை பார்த்து "ஹாய் சஞ்சனா,உங்க டீமில் ஏதோ ஒரு நியூ ஜாயினி. பேர் தெரியல,போன மாசம் கால் பண்ணிச்சு எனக்கு.ஏன் அந்த பொண்ணுக்கு தமிழ் பேச தெரியாதா?அப்படியே கொஞ்சி கொஞ்சி பேசுது.ஒழுங்கா தமிழ் பேச தெரியாதா,யார் அது?

சஞ்சனா இடுப்பில் கை வைத்து முறைக்க,

பல்லவி உடனே "டேய் லூசு,அது இவதான்டா ,உன்கிட்ட thanks சொல்ல தான் வந்தா"

அய்யயோ இவதானா இது, அழகான பொண்ணுங்ககிட்ட மொக்கை வாங்குவதே நம்ம பொழைப்பா போச்சு என்று ராஜா மனதில் முணுமுணுத்து "அது வந்து சஞ்சனா நீ பேசும் போது நெட்வொர்க் பிராப்ளம் என்று நினைக்கிறேன் அதனால் தான் அந்த மாதிரி கேட்டது" என்று அசடு வழிந்தான்.

மச்சான் ரொம்ப அசடு வழியது,தயவு செய்து துடைச்சிக்கோ என்று ராஜேஷ்,ராஜா காதில் கிசுகிசுத்தான்.

அப்பொழுது வாசு,பல்லவி கண்ணில் அகப்பட,டேய் வாசு நில்லுடா,ஒரு வாரமா லீட் feedback கொடுக்காமா ஏமாத்திட்டு இருக்க,நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க,நான் அவனை கொஞ்சம் கவனிக்கனும் என்று பல்லவி அவனை நோக்கி ஓடினாள்.

ம், ராஜா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.கொஞ்சம் pantry வர முடியுமா?

ம் வரலாமே,award பங்ஷன் முடியட்டும்,pantry போகலாம்.

"ம் ஓகே" சஞ்சனா அவன் பக்கத்தில் நின்று கொண்டாள்.

அப்போது மேடையில் telesales பிரிவில் performer award ஜார்ஜ் பெயரை அறிவிக்க ஜார்ஜ் மிடுக்குடன் மேடை ஏறினான்.

பரிசு வாங்கும் போது பெருமையுடன் அவன் கண்கள் சஞ்சனாவை தேட அப்பொழுது அவள் ராஜாவுடன் சிரித்து பேசி கொண்டு இருப்பதை பார்த்ததும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

சார் கொஞ்சம் சிரிங்க போட்டோகிராபர் கேட்க கடமைக்கு ஜார்ஜ் சிரித்து வைத்தான்.

அவார்ட் பங்ஷன் முடிய ,ராஜாவும், சஞ்சனாவும் pantry செல்ல, ஜார்ஜ்ஜும் பின்தொடர்ந்து சென்றான்.

அப்போ அவன் டீம்மேட் சாதனா அருகில் வந்து"ஜார்ஜ் உன்னை அவசரமா பிரியா மேடம் கூப்பிட்டாங்க"என்று கூற ஜார்ஜ் வேண்டா வெறுப்புடன் பிரியா மேடம் கேபின் சென்றான்.ஒரு கைகலப்பு நிகழ இருந்தது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டது.

ஏற்கனவே ராஜாவுக்கும்,ஜார்ஜுக்கும் இரண்டு முறை வார்த்தை போர் வெடித்துள்ளது.இருவருக்கும் ஒருவரையொருவர் கண்டாலே ஆகாது.முறைத்து கொண்டு தான் கடந்து போவர்.இன்னும் கொஞ்ச நாளில் சஞ்சனாவிற்காக இருவரும் அடித்து கொள்ள போகிறார்கள்.

உங்களுக்கு காப்பியா இல்லை டீயா சொல்லுங்க ராஜா,

எது இருந்தாலும் ஓகே,இல்லை ரெண்டு கலந்து கொடுத்தாலும் ஓகே

சஞ்சனா சிரித்து கொண்டே,"லக்ஷ்மி அக்கா ரெண்டு காஃபி கொடுங்க"

லக்ஷ்மி அக்கா காஃபி எடுத்து கொண்டு வந்து கொடுக்க ,சஞ்சனா லக்ஷ்மி அக்காவை பார்த்து"என்ன அக்கா உங்க பொண்ணோட ஸ்கூல் ஃபீஸ் கட்டி ஆச்சா?.

ஆச்சு சஞ்சுகுட்டி நீ மட்டும் சரியான நேரத்தில் உதவி பண்ண வில்லை என்றால் எனக்கு ரொம்ப கஷ்டமா போய் இருக்கும்.சம்பளம் வந்தவுடன் உனக்கு நான் திருப்பி கொடுத்துடறேன் கண்ணு,

பரவாயில்லைக்கா,நீங்க பொறுமையா கொடுத்தா போதும்.

ராஜா அவளை பார்த்து "சஞ்சனா,நீங்க உருவத்தில் மட்டும் அழகு இல்ல,உள்ளத்திலும் ரொம்ப அழகு தான்."

ரொம்ப புகழாதீங்க ராஜா,நான் அவங்களுக்கு கடனா தான் கொடுத்து இருக்கேன்.

அதற்கும் ஒரு மனசு வேணும் சஞ்சனா.

அவள் காஃபி அருந்தும் அழகை கண் கொட்டாமல் ராஜா பார்த்து கொண்டே இருக்க,சஞ்சனா அவன் முகத்தின் முன் கையை ஆட்டி என்ன என்று கேட்க,

ராஜா அவளை பார்த்து"இல்லை சஞ்சனா உங்களை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்கு"என்று சொல்ல அவள் வெட்கத்தில் சிரித்து தலை குனிந்தாள்.அவள் புன்னகைக்கும் போது அவள் கண்களும் சேர்ந்து புன்னகைக்க அதை பார்த்து ராஜா முற்றிலும் மயங்கி போனான்.சில பேருக்கு மட்டுமே அந்த கொடுப்பினை இருக்கும்.அவர்கள் புன்னகைக்கும் போது கண்களும் சேர்ந்து புன்னகைக்கும்.அது அவர்களுக்கு பல மடங்கு அழகை கூட்டும்.இயற்கையாகவே சஞ்சனாவிற்கு அப்படி ஒரு அழகு கிட்டி இருந்தது.

சஞ்சனா அவனிடம் "ராஜா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?".

எங்கங்க sales executive என்றாலே பொண்ணுங்க reject பண்ணி விடுறாங்க.அதுவும் நாங்க 90's கிட்ஸ் வேறயா,பொண்ணே கிடைக்க மாட்டேங்குது.

சஞ்சனா உள்ளூர மகிழ்ச்சி அடைந்து ,"பொண்ணு கிடைச்சாச்சு"என்று கூற

என்னது?

"இல்லை கூடிய சீக்கிரம் பொண்ணு கிடைச்சிடும் என்று சொன்னேன் என சஞ்சனா"சமாளித்தாள்.

ஆமா ஆபீஸில் வேலை பார்ப்பது சாதகம் தானே,எப்ப வேணாலும் வந்து ஃப்ரீயா வந்து டீ,காஃபி குடிக்கலாம் இல்ல.

இங்க வந்து வேலை செய்ஞ்சு பாருங்க அப்ப தெரியும் எங்க கஷ்டம்.அப்புறம் நான் உங்களுக்கு thanks சொல்ல தான் கூப்பிட்டேன்.
நாளைக்கு என்னோட week off,நீங்க ஃப்ரீயா? எங்கேயாவது வெளியே போகலாமா?

உங்களுக்கு நாளை week off ஆக இருக்கலாம்.ஆனா என்னோட week off புதன்கிழமை தான்.so நான் free கிடையாது.

அப்போ ஒன்னு பண்ணலாம்.நான் நாளை உங்களோட வண்டியில் ஒண்ணா வர்றேன்.அப்படி என்ன தான் நீங்க பீல்டில் வெட்டி கிழிக்கீறிங்க  என்று பார்க்கலாம்.

"ரியலி"ராஜா ஆச்சரியமாக கேட்டான்.

"நிஜமா தான் இது என்னோட ஃபோன் நம்பர் ,நான் எங்கே வர வேண்டும் என்று லொகேஷன் அனுப்புங்க.அங்கே சரியா 9 மணிக்கு வரேன்."

அதற்குள் ராஜாவின் நண்பர்கள் உள்ளே நுழைய சஞ்சனா அவனிடம் "நாளை பார்க்கலாம்"என்று ஓடி விட்டாள்.

ராஜேஷ் வந்து"என்ன ராஜா,ஏதோ நாளை பார்க்கலாம் என்று காதில் விழுந்துச்சு"

ஒண்ணுமில்ல ராஜேஷ் அந்த பொண்ணுக்கு direct field பற்றி தெரியனுமாம்.அதுக்கு நாளை கூட வரேன் என்று சொல்லிச்சு.

என்னது  அந்த பொண்ணோட நாளை ஊர் சுற்ற போறீயா

டேய் டேய் ஊர் எல்லாம் சுற்ற போல,ஜஸ்ட் appointment மட்டும் தான் கூட்டி போக போறேன்.

எங்களுக்கு ரெண்டும் ஒன்னு தான்.என்ன மச்சான் லவ்வா?

டேய் மாமா சும்மா உளராத,அவ சிரிச்சு பேசறது அவள் இயல்பா கூட இருக்கலாம்.அதை எல்லாம் லவ்வா எடுத்துக்க கூடாது.

இல்ல மச்சான் இது கண்டிப்பாக லவ் தான்.ஒரு பொண்ணு நம்பிக்கை வைச்சு தனியா  உன் கூட வரேன் என்று சொன்னா அது கண்டிப்பா லவ் தான்.

இல்ல மாமா இது தப்பு,அவளுக்கும்  எனக்கும் கண்டிப்பாக 10 வயசு வித்தியாசம் இருக்கும்.அழகு,படிப்பு,வயது எதிலுமே நான் அவளுக்கு ஈடு கிடையாது.அதுவும் இல்லாம மீண்டும் ஒருமுறை காதலில் சிக்க நான் தயாராக இல்லை.

டேய் ராஜா இன்னும் நீ அந்த பொண்ணு சுஜிதாவை நீ மறக்கவில்லையா?

எப்படிடா மறக்க முடியும்,அவ ஏற்படுத்திய  ரணம் வேண்டுமானால் ஆறி போய் இருக்கலாம்.ஆனா அந்த வடு இப்பவும் என் மனதில் அப்படியே தான் இருக்குது.

சரிடா,சுஜிதா போனதிற்கு அப்புறம் எந்த பொண்ணுங்ககிட்ட ஒழுங்காவே பேச மாட்டே,இந்த பொண்ணு கிட்ட மட்டும் எப்படி சிரிச்சு சிரிச்சி பேசினே !

அது தான் எனக்கும் புரியல மச்சான்.ராஜாவின் நினைவுகள் பின்னோக்கி பறந்தது.

சஞ்சனா தன் இருக்கைக்கு சென்றவுடன் துர்கா அவளை பார்த்து " என்ன சஞ்சனா சந்தோஷத்தில் முகம் பூரிச்சு போய் இருக்கு".

துர்கா நான் சொன்னேன் இல்ல,"ஏழு வருடத்திற்கு முன் எங்க அப்பாவின் உயிரை காப்பாற்றியது  ஒருத்தர் என்று.அது வேறு யாருமில்லை இந்த ராஜா தான்."

அப்போ அந்த விசயத்தை ராஜாகிட்ட சொல்லிட்டு மோதிரத்தை கொடுத்து விட்டாயா?

இல்லை என்று சஞ்சனா தலையாட்டி விட்டு மோதிரத்தை பேகில் இருந்து வெளியே எடுத்து "இதற்கு மேல் இந்த மோதிரத்திற்கு சொந்தக்காரி நான் தான் " என்று விரலில் போட்டு கொண்டாள்.

ஏய் என்னடி விரலில் போட்டுகிட்ட,லவ் ஏதாச்சும் அவனை பண்றீயா என்ன?

இது லவ்வா என்று சொல்ல தெரியல துர்கா,முதலில் அவரை பார்த்து இந்த மோதிரத்தை மட்டும் கொடுத்து விட்டு thanks சொல்லலாம் என்று  காத்துகிட்டு இருந்தேன்.ஆனா இவ்வளவு வருடம் அவருக்காக காத்து அந்த நினைவே காதலா மாறிடுச்சு என்று நினைக்கிறேன்.அவரை நேரில் பார்த்த பிறகு மோதிரத்தை திருப்பி கொடுக்க மனசே வரல.

சரி லவ்வையாவது சொல்லி தொலைய வேண்டியது தானே

இல்ல துர்கா,அப்புறம் என் அப்பாவை காப்பாற்றியதால் தான் நான் அவரை லவ் பண்ணுகிறேன் என்று நினைத்து கொள்வார்.கொஞ்ச கொஞ்சமாக அவரை என்பக்கம் ஈர்த்து அவர் வாயாலேயே என்னை காதலிப்பதாக சொல்ல வைக்க போகிறேன்.

நினைவுகள் சிறகடித்து பறக்க தொடங்கும்.

[Image: images-47.jpg]
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 27-07-2023, 10:34 PM



Users browsing this thread: 18 Guest(s)