25-07-2023, 10:42 PM
(This post was last modified: 06-10-2024, 12:03 PM by Geneliarasigan. Edited 12 times in total. Edited 12 times in total.)
Episode -3
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா,
நேரம் வரும் பார்த்து இருந்து பாடு ராஜா ,
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா,
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
என்ற பாடல் தன் ear phone இல் ஒலிக்க,அதை ஹம்மிங் பண்ணி கொண்டு ஜாலியாக வண்டி ஓட்டி கொண்டு இருந்தான் இந்த கதையின் நாயகன்.மாநிறம், அகன்ற நெற்றி,சற்றே கூரான நாசி, சதுர முகம்,விரிந்த மார்பு,உயரம் 6 அடிக்கு 1" குறைவு.மீசை ஒன்றிரண்டு நரைத்து அவன் வயது 31 முடிந்து 32 என கட்டியம் கூறியது.பெயரும் ராஜா தான்.
தன் வண்டியை ஒரு டீக்கடையின் முன்பு நிறுத்தினான்.அங்கு ஏற்கனவே அவனின் நண்பர்கள் வாசு,ராஜேஷ்,சீனிவாசன், முத்து இருந்தனர்.
என்ன ராஜா இன்னிக்கி லேட்,ராஜேஷ் கேட்க
இல்ல மச்சான்,ஊருக்கு போய்ட்டு அப்படியே direct field வரேன்.அதான் லேட்.
டேய் அப்போ எனக்கு ஷூ வாங்கிட்டு வந்தீயா?ராஜேஷ் ஆர்வத்துடன் கேட்க
மறப்பேனா மச்சான்.ஆம்பூரில் இருந்து ஒரிஜினல் லெதர் ஷூ வாங்கி வந்து இருக்கேன்.சரியா இருக்கா என்று போட்டு பாரு?
ராஜேஷ் போட்டு பார்த்து விட்டு,சூப்பர்டா சரியா இருக்கு.எவ்வளவு விலை இது?
800 ரூபா மச்சான்.
ஓகே நான் gpay பண்ணி விடறேன்.
சீனிவாசன் அதை வாங்கி பார்த்து விட்டு "டேய் இதே பிராண்ட் husk puppies ஷூ தான் போன வாரம் வாங்கினேன்டா.என்கிட்ட 1400 ரூபா ஷோரூம்காரன் புடுங்கிட்டான்."
மச்சான் ஆம்பூரில் எனக்கு தெரிந்த ப்ரெண்ட் கடை இருக்கு .அங்கே வாங்கினா நமக்கு விலை கம்மியா கிடைக்கும்.நெக்ஸ்ட் டைம் வேணும்னா சொல்லு,நான் என்னோட சொந்த ஊருக்கு போகும் போது வாங்கிட்டு வரென்.
ராஜா வாசுவை பார்த்து"அப்புறம் வாசு,காலையில் உன் பொண்டாட்டி துணியை எல்லாம் துவைச்சிட்டு வந்துட்டியா"
அதற்கு சீனிவாசன் "நீ வேற ராஜா பொண்டாட்டி துணி மட்டும் இல்ல,வீட்டை கழுவி தெருபெருக்கி கோலம் போடறது முதற்கொண்டு அய்யா தான்."
வாசு உடனே "டேய் சீனி நானாவது பொண்டாட்டி துணியை மட்டும் தான் துவைக்கிறேன்.ஆனா மாமியாரோட உள்பாவாடை,ஜாக்கெட் முதற்கொண்டு துவைக்கிற நீ என்னை பற்றி பேசலாமா? என்று சொல்ல அங்கு பலத்த சிரிப்பு அலை எழுந்தது.
"அவர்களாவது பரவாயில்லை,நம்ம முத்து நிலைமை இன்னும் மோசம்.காலையில் அவன் பொண்டாட்டிக்கு bed காஃபி கொடுப்பது முதற்கொண்டு சமையல் செய்வது வரை எல்லாமே வீட்டில் தலைவர் தான் என்று ராஜேஷ் சொல்ல அந்த இடமே கலகலப்பானது.
அப்ப எல்லோர் வீட்டில் நடப்பது மதுரை ராஜ்ஜியம் என்று சொல்லுங்க .நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆகல.நான் தப்பிச்சேன் என்று ராஜா சிரிக்க
அதற்கு வாசு"டேய் performer ராஜா,ஜாலியா இருக்கிறேன் என்ற நக்கலா உனக்கு.கூடிய சீக்கிரம் உனக்கும் கல்யாணம் ஆகும்.அப்ப இருக்குடா உனக்கு"
அதெல்லாம் நடக்கும் போது பார்த்துக்கலாம் வாசு,சரி இன்னிக்கு மாசத்தோட கடைசி நாள்.நம்ம டீமில் எல்லோரும் incentive target achieve பண்ணி ஆச்சா?
இல்ல ராஜா,உன்னோட சேர்த்து நம்ம டீமில் ரெண்டு பேர் மட்டும் தான் target achieve பண்ணி இருக்கோம்.ஆமா இந்த மாசமும் நீ star award வாங்கிடுவே இல்ல.
பத்து மாசம் தொடர்ந்து வாங்கிட்டேன் வாசு.இந்த மாசமும் நேற்று வரை கரெக்ட்டா ontrack இல் தான் இருந்தது.ஆனா நேற்று நான் லீவ்.south zone பையன் ஒரே நாளில் நாலு நம்பர் போட்டு என்னை விட ஒரு நம்பர் முந்தி விட்டான்.இன்னிக்கு அவன் பண்ற நம்பரை விட நான் ரெண்டு நம்பர் ஜாஸ்தி பண்ணா மட்டும் தான் நான் star அவார்ட் வாங்க முடியும்.
சரி ஓகே ராஜா.என்னால் முடிந்த அளவு இன்னிக்கு உனக்கு நம்பர் நான் support பண்றேன்.
ரொம்ப தாங்க்ஸ்டா வாசு.
சேட்டா 5 டீ 3 வடை காசு எடுத்துக்கோங்க ,ராஜா காசு கொடுக்க
அப்போ ஒரு முதிய பெண்மணி வந்து அவனிடம் "அய்யா ரொம்ப பசிக்குது சாப்பிட ஏதாவது வாங்கி கொடுங்க"என்று கேட்டாள்.
சேட்டா அப்படியே நாலு இட்லி ஒரு வடைக்கும் சேர்த்து காசு எடுத்துக்கோங்க.அம்மா நீங்க வாங்கிக்கங்க
நீ நல்லா இருக்கணும் ராசா என்று அந்த பெண்மணி வாழ்த்த
அவன் பேரே ராஜா தாம்மா என்று ராஜேஷ் கூவினான்.
அப்படியே நான் அடிச்ச சிகரெட்டுக்கும் சேர்த்து காசு கொடுக்கலாம் இல்ல என்று சீனிவாசன் அங்கலாய்த்தான்.
சாரி சீனு, ஒரு சில விசயங்களுக்கு கண்டிப்பா நான் காசு செலவு பண்ண மாட்டேன்.அது உனக்கே தெரியும்.
ராஜேஷ் சீனுவிடம்"டேய் சீனு அவனும் சிகரெட்,தண்ணி எதுவும் அடிக்க மாட்டான்.மற்றவருக்கு வாங்கியும் கொடுக்க மாட்டான் என்று உனக்கு தெரியும் தானே.சும்மா திரும்ப திரும்ப அதையே அவன் கிட்ட கேக்குற.அவன் நமக்கு டீ வாங்கி கொடுக்கறதே போதும் விடு"
சரி ஓகே ஃப்ரெண்ட்ஸ் எனக்கு appointment உடனே இருக்கு . சாயங்காலம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு ராஜா பறந்தான்.
மதிய வேளைக்குள் மூன்று ஆர்டர் எடுத்து விட்டான்.அடுத்து ஒரு appointment சென்று கொண்டு இருக்க அவனது ஃபோன் ஒலித்தது.
வண்டி ஓட்டி கொண்டே Ear phonai அழுத்தி "ஹலோ யார் பேசறது?"
மறுமுனையில் ஒரு அழகிய பெண்ணின் குரல் கேட்டது.
"ஹலோ ராஜாவா,ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும்.கொஞ்சம் வண்டியை நிறுத்த முடியுமா"
நான் ear phone இல் தான் பேசுகிறேன்.என்ன விசயம் சீக்கிரம் சொல்லுங்க.நான் அவசரமாக appointment போய் கொண்டு இருக்கிறேன்.
"அதை பற்றி தான் நான் உங்களிடம் பேச வேண்டும் மிஸ்டர்" என்று அந்த பெண் சொன்னாள்.
முதல் முறை இந்த கதையின் நாயகியும்,நாயகனும் போனில் பேசுகிறார்கள்.யார் என்று அறியாமலேயே இருவருக்கும் இடையே மோதல் ஆரம்பிக்கறது.