08-06-2019, 09:50 AM
சிஷ்யனை மிஞ்சிய குரு! நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!
1996 ஆம் ஆண்டு இனிய உதயம் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் ஜுகிபா என்ற கதையை எழுதினார். இதனைத்தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது.
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் வெளியான, இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எந்திரன் வெளியான பிறகு படத்தின் கதையை அறிந்த ஆரூர், தன்னுடைய கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்துவிட்டதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாறியது. இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது எனக்கூறிய நீதிமன்றம் கதை ஒரே மாதிரி இருப்பதால் காப்புரிமை மீறல் தெரிகிறது.
அதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், திருட்டுக் கதை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இயக்குநர்களில் இயக்குநர் ஷங்கர் இணைந்துள்ளார்.
மேலும், ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி மீதும் இதுபோன்ற பல்வேறு முறை திருட்டுக் கதை குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சம்பந்தமான தகவல் வெளியானதில் இருந்து, சிஷ்யனை மிஞ்சிய குரு என்று பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.