08-06-2019, 09:33 AM
சினிமா பிரியர்கள் இனி 24 மணிநேரமும் தியேட்டர்களுக்கு செல்லலாம்!
சுமாராக ஓடக் கூடிய படங்களையே 3 நாட்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கி விடுகிறார்கள்.
தமிழகத்தில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸாகும் முதல் நாள் அதிகாலையில் திரையிடப்படும்.
மற்ற படங்கள் பெரும்பாலும் காலை 8 மணிக்கு பிறகு தான். இதில் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் இறுதி காட்சி இரவு 10 – 10.30-க்குள் திரையிடப்படும்.
இந்நிலையில் திரையரங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. இதனால் எந்த பரபரப்புமின்றி, ரசிகர்கள் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் தியேட்டருக்கு செல்லலாம்.
குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் ரிலீஸாகும் போது முதல் நாளில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திணறுவார்கள். இனி அந்தப் பிரச்னை இருக்காது. 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் ரசிகர்கள் படம் பார்த்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் 24 மணி நேரம் தியேட்டர் திறந்திருப்பது சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வார நாட்களிலும் ஒர்க் அவுட் ஆகாது. தற்போதெல்லாம் சுமாராக ஓடக் கூடிய படங்களையே 3 நாட்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கி விடுகிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த மாதிரியான படங்களுக்கு லைஃப் டைம் வெறும் 24 மணி நேரம் மட்டுமே கிடைக்கும்.
இருப்பினும் இது அமலுக்கு வந்து ஓரிரு மாதங்கள் கழித்தே, இதன் வெற்றி தோல்வியை கணக்கிட முடியும்.