08-06-2019, 09:26 AM
தண்ணீர் இல்லை என்கிற முழக்கங்களும், அதற்கான போராட்டங்களும் இந்தியா முழுவதுமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதைக் காரணமாக வைத்து காசு பார்க்கிற சம்பவங்களும் நிகழாமல் இல்லை. சாலையில் தென்படுகிற லாரிகளில் பாதிக்கு மேல் தண்ணீர் டேங்கர் லாரிகளாகவே இருக்கின்றன. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு லாரி மீண்டும் மெட்ரோ நிலையங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் லாரிகள் செல்ல முடியாத குறுகிய தெருக்களுக்கு ஆட்டோக்களில் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. நிமிடத்திற்கு நான்கு லாரிகள் மெட்ரோ நிலையங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு கிளம்புகின்றன. லாரிகள் என்று இருந்த வணிகம் தண்ணீர் ஆட்டோக்கள், தண்ணீர் வேன்கள் என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
சென்னையின் இன்னொரு பக்கமான ஓ.எம்.ஆர் சாலையின் தண்ணீர்ப் பிரச்னை முக்கியமான பிரச்னையாக உருமாறியுள்ளது. ஓ.எம்.ஆர் என்பது ஓல்டு மாமல்லபுரம் சாலை என்றாலும் இன்று அது சென்னையின் நவீன அடையாளங்களுள் ஒன்று. பூஞ்சேரி கூட்டு ரோட்டில் தொடங்கி மத்திய கைலாஷ் வரை நீண்ட நெடிய சாலையாக இருக்கும் இது, சிலவருடங்களுக்கு முன் வரை சதுப்பு நிலக்காடுகளாகவும், விவசாய நிலம் நிறைந்த பகுதிகளாகவும் அறியப்பட்ட இந்தச் சாலை இன்று வான் உயர் கட்டடங்கள், வழுக்கும் சாலை பறக்கும் சொகுசு கார்கள், பன்னாட்டு உணவு விடுதி, பன்னாட்டுத் திரை அரங்குகள் என அரக்கப் பரக்க இயங்கிக்கொண்டிருக்கிறது.
`மிரட்டும் தண்ணீர்ப் பஞ்சம்... காலியாகும் அப்பார்ட்மென்ட்கள்!' - சிக்கலில் சென்னை OMR சாலை
தற்போதைய நிலவரப்படி இந்தச் சாலையில், அதாவது ஓ.எம்.ஆரில் சுமார் 360 தனியார் அப்பார்ட்மென்ட்கள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி உள்ளனர். குறைந்த பட்சம் 3 அடுக்கு மாடியிலிருந்து அதிகபட்சமாக 50 அடுக்கு மாடிகள் வரை உள்ள இந்த அப்பார்ட்மென்ட்கள் ஒவ்வொன்றிலும் 6 வீடுகளிலிருந்து சுமார் 3500 வீடுகள் வரை உள்ளன. சினிமா மால், ஷாப்பிங்மால், ஸ்விம்மிங்புல், என ஸ்டார் ஹோட்டல் தரத்தில் ஒரு குட்டி ஹைடெக்சிட்டிக்கு ஈடாக இருக்கின்றன இந்த அப்பார்ட்மென்ட்கள். சராசரியாக ஒரு அப்பார்ட்மென்ட்க்கு ஆயிரம்பேர் வசிப்பதாகக் கணக்கிட்டாலும் முந்நூற்று அறுபது அப்பார்ட்மென்ட்களுக்கு முன்று 3,60,000 பேர் ஆகிறது. மேலும் இச்சாலையில் டிசிஎஸ், சிடிஎஸ், காக்னிசென்ட் எனக் கிட்டதட்ட 82 க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் உள்ளன. சிறுசேரி சிப்காட்டில் மட்டும் 31 ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் டிசிஎஸ் எனும் தனியார் ஐடி நிறுவனத்தில் மட்டும் 36,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இச்சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 3,50,000 க்கும் அதிகம். ஆக மொத்தம் இந்த ஓல்டு மாமல்லபுரம் சாலையில் மட்டும் கடந்த 2005 ஆண்டுவாக்கிலிருந்து சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் புதியதாகக் குடியேறி உள்ளனர். இவர்கள் தினசரி குளிப்பது முதற்கொண்டு குடிப்பதுவரைக்குமான தண்ணீர் வசதி வெளியிலிருந்தே பெறப்படுகிறது.
[/font][/color]
இது குறித்து ஓ.எம்.ஆர் பகுதியில் வசிக்கும் சமரன் என்பவர் பேசும் போது, ``ஓ.எம்.ஆர் அருகில் உள்ள தாழம்பூர், சிறுசேரி, பொன்மார், புதுப்பாக்கம், மாம்பாக்கம், காயார், பனங்காட்டுப்பாக்கம் வெண்பேடு, இள்ளலூர், தண்டலம், ஆலத்தூர், பையனூர், திருப்போரூர், கன்னகப்பட்டு, காலவாக்கம், தையூர் உள்ளிட்ட சுமார் 22 க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்துவரப்படுகிறது. இப்படி குடிநீர் சப்ளை செய்யும் லாரி ஒவ்வொன்றும் 12,000 லிட்டர் கொள்ளளவில் இருந்து 32,000 லிட்டர் கொள்ளளவு கொண்டவையாக உள்ளது.
சராசரியாக 20,000 கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி நாள் ஒன்றுக்கு ஒரு கிணற்றிலிருந்து 10 லோடுகள் சப்ளை செய்தாலும் ஒரு கிணற்றிலிருந்து ஒரு லாரிமூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் 346 கிணறுகளில் நாள் ஒன்றுக்கு என்றாலும் கூட 6 கோடியே 92லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது.
[/font][/color]
நாள் ஒன்றுக்கே கிட்டத்தட்ட 7 கோடி லிட்டர் என்றால் ஒரு மாதத்திற்கு மட்டும் 210 கோடி லிட்டர் உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் எளிதாகச் சொல்வதாக இருந்தால் ஒரு மாதத்திற்கு மட்டும் சராசரியாக ஒரு ஏரித் தண்ணீர் காலி ஆகிறது. அதாவது 800 ஏக்கரிலிருந்து 1500 ஏக்கர் வரை விவசாயம் செய்ய பயன்படுத்தப்படும் பாசன நீர் செலவாகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டி பறக்கும் இந்த வாட்டர் பிசினஸால் ஓ.எம்.ஆர் சுற்றுவட்டாரத்தில் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகு விரைவாகக் குறைந்து வருவதால் கடல்நீர் உயர்ந்து கிராமங்களுக்குள் ஊடுருவி வருகிறது. பாசனநீரை விற்பனைசெய்யும் விவசாயிகளைக் குறைசொல்லியும் பயனில்லை. ஏனென்றால் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வதற்கு ஒரு விவசாயி சுமார் 12 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரத்திற்குச் செலவு செய்கிறார்.
அவருக்கு சுமார் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. இதற்கு தான் மட்டுமல்லாது தனது மனைவி குழந்தை, குட்டி, மாடு, கண்ணு என எல்லோருமே உழைக்கவேண்டும். மேலும் நாற்றுநட, களைபறிக்க, அறுவடைசெய்ய, ஆட்கள் கிடைப்பதில்லை, மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் நாற்று நடவும் ,களை பறிக்கவும், அறுவடை செய்யவும் முயன்றாலும் அதிக பணம் கொடுக்கவேண்டி இருக்கிறது. அப்படியே கொடுத்தாலும் சரியான நேரத்தில் இயந்திரங்கள் கிடைப்பதில்லை. கடைசியில் பண நஷ்டமும் மன உளைச்சலுமே விவசாயிக்கு மிஞ்சுகிறது இதனால் விவசாயம் செய்வதை விட்டு தண்ணீரை விற்கும் நெருக்கடிக்கு ஆளாகிறான் விவசாயி. ஒரு நடைக்கு 200 ரூபாய் கிடைக்கிறது, சராசரியாக 10 நடை போனாலும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் என மாதத்திற்கு 60,000 ஆயிரம் கிடைக்கிறது.
கிட்டதட்ட 4 அல்லது 5 மாதங்கள் உழைத்துப் பயிர் வைத்தால் ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை லாபம் கிடைத்த நிலையில் எந்த உழைப்பும் இன்றி வெறும் தண்ணீர் விற்பதால் மட்டும் ஒரு மாதத்தில் 60 ஆயிரம் லாபம் பார்க்கிறான். இந்த நிலை நீடித்தால் இந்த ஆண்டே பழைய மாமல்லபுரம் சாலையைச் சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் வறட்சியையும் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தையும் சந்திக்கவேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும் விளைநிலங்கள் – குடியிருப்புகள் அத்தனையும் உப்புமண் ஆகி மண் மலடுதட்டிபோகும் பெரும் அபாயம் உள்ளது என்கிறார்.
[/font][/color]
ஓ.எம்.ஆர் பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொள்கிற தனியார் நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் விலையை உயர்த்தியுள்ளனர். 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை 2400 இருந்து 3300 ஆக உயர்த்தியுள்ளனர். இது சென்ற மாதத்தை விட 900 ரூபாய் அதிகம். அதிக விலைகொடுத்து தண்ணீர் வாங்கும் பணம் படைத்தவர்களுக்கு இந்தத் தொகை பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் வசதி இல்லாத மக்களுக்கு விலையேற்றம் மிகப் பெரிய இடியாக இறங்கியிருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீண்டால் விலை ஏற்றம் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. அரசு உடனடியாக தீர்வை நோக்கி முன்னேறாவிட்டால் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டி வரும்.

[color][font]