Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் களமிறக்கம்
[Image: NTLRG_20190607182420163196.jpg]

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2019-22ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற ஜனவரி 23ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடக்கும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை(ஜூன் 8) முதல் துவங்குகிறது. இன்று(ஜூன் 7) முதல் வேட்பு மனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணியே களமிறங்குகிறது. தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர் பதவிக்கு கருணாஸூம் மீண்டும் போட்டியிடுகிறார்கள். பொன் வண்ணன் போட்டியிடாததால் அவருக்கு பதில் பூச்சி முருகன் துணை தலைவராக போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர 26 பேர் செயற்குழு உறுப்பினர்களாக போட்டி களத்தில் உள்ளனர்.

இவர்களை எதிர்த்து மற்றொரு அணி உருவாகி வந்தது. ஐசரி கணேஷ் தலைமையில் இந்த அணி களமிறங்க வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த அணி சார்பாக தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிட உள்ளார். விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாய் நடக்கிறது. கடந்த தேர்தலில் விஷால் வெற்றி பெற உழைத்த ஐசரி கணேஷ், உதயா, ஆர்கே சுரேஷ் போன்ற பலர், விஷால் மீதான அதிருப்தி காரணமாக இந்த முறை அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். இதனால் இந்த தேர்தலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 08-06-2019, 09:19 AM



Users browsing this thread: 105 Guest(s)