10-07-2023, 09:10 PM
துருவரைப் போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல மணமகளுக்குப் பதிவிரதத் தன்மையும் இருத்தல் வேண்டும் என்பதாகும்.
பத்தொன்பதாவது,….பொரி இடுதல்
பொரி இடுதல் அப்படீன்னா, மணமக்கள் கிழக்கு நோக்கி நிற்க,மணமகனின் சகோதரன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க, மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகளின் கைகளை தன் கைகளால் தாங்கி அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டு ஹோம குண்டத்தில் இடுவார்கள். நெல், பொரியாக மலர்வது போல் நம் வாழ்வு மலர வேண்டும் என்பதே தத்துவமாகும்.
இருபதாவது,……கோ தரிசனம்
கோ தரிசனம் அப்படீன்றது உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். இல்லற வாழ்வு தொடங்கும் மணமக்கள் வாழ்விற்கு வேண்டிய அஷ்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி, பசுவை இலட்சுமி தேவியாக வணங்குவர்.
இருபத்தொன்பதாவது,…..ஆசீர்வாதம், நலங்கு
ஆசீர்வாதம், நலங்கு. தட்டுல மஞ்சள் கலந்த அரிசி கோன்டு வந்தா அதை அள்ளி எடுத்து மண் மக்கல் தூவறமே அதுதான். திருக்கோயில்களில் இருந்து மாலைப் பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்தல், வாரணமாயிரம் மற்றும் பிரபந்தம் சேவித்து ஆசீர்வதித்தல், மணமக்களின் பெற்றோர்கள் மற்றும்
பெரியோர்கள் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். ஆனா, நிறைய பேர் ரிஷப்ஷனுக்கு போனா போதும்னு போறாங்க. தாலி கட்டுறப்பவும் போய் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்யறதில்ல. பந்திக்கு போனோமா, அழைச்சிருந்தவங்களைப் பாத்தோமா,… மொய்யை கொடுத்தோமான்னு வந்திடுறாங்க.
இருபத்தி இரண்டாவது,….நலங்கு
நலங்கு என்பது மணமக்களுக்கிடையே அன்யோன்யத்தை வளர்த்திடும் பொருட்டு விளையாட்டு விளையாட வைத்தல் ஆகும். மணமக்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுதல், மலர்ப்பந்து உருட்டுதல், அப்பளம் உடைத்தல், மஞ்சள் நீர் நிறைந்த குடத்தில் உள்ள கணையாழியை தேடி எடுத்தல் போன்றவை, அதற்குரிய வாய்பாட்டுடன் நடத்தப்படும்.
இருபத்தி மூணாவது,….மடிமாற்றுதல்
மடிமாற்றுதல் அப்படீன்னா, திருமாங்கல்ய தரிசனத்திற்கு முன்பும், அதற்கு பின்பும் மணமகள் மற்றும் மணமகனின் சகோதரி, மங்கல பொருட்கள் (மஞ்சள், தேங்காய், மலர், குங்குமம், பனை வெல்லம்) அடங்கிய சிறு முடிச்சினை சேலையின் மடி விரித்து பெற்று மாற்றிக் கொள்வார்கள்.
இருபத்தி நாலாவது,….அட்சதை
அட்சதை அப்படீன்னா, அறுகரிசி என்பது முனை முறியாக பச்சரிசி. அருகம்புல், மஞ்சள் கலந்த கலவையே ஆகும். பெரியோர் இரண்டு கைகளாலும் எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்று பெருவாழ்வு வாழ்க!” என வாழ்த்தி உச்சியில் மூன்று முறை இடுவர்.
நிறைவு
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புகளை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் சேர்த்து வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுப்பர்.
இவ்வளவுதான் கல்யாணத்தன்னைக்கு நாங்க செய்யிற வேலை. இதை சிலர் மேம்போக்கா சில நடைமுறையை விட்டுட்டு செய்வாங்க. அது நல்லதில்லே. அவசர அவசர்மாவும் மந்திரங்களை செய்யக் கூடாது.
ஆரத்தி
ஆரத்தி ன்றது கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் பண்றது. மணமக்கள் தரப்பில் இருந்து இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன. பிறகு விருந்து உபச்சாரமும் நடைபெறும்.
சம்மந்தி பாட்டு
இதுவும் கல்யாணம் முடிஞ்சு சம்மந்திகளையும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைத்து விருந்தினர்களையும் பாட்டிசைத்து விருந்துண்ண அழைப்பதாகும்.
“பொங்கும் மங்களம் என்றும் தங்குக”
“அவ்வளவுதானா ஐயரே?!!’
“அவ்வளவுதான்.”
“கல்யாண பிஸிலே இத்தனை சாஸ்திர சம்பிரதாய சடங்குகளை நாங்க மனசுல வச்சுகிட்டு எப்படி செய்யிறது?!!”
“நீங்க ஒன்னும் கவலைப் படவேண்டாம். அதுக்குஇதான் நாங்க இருக்கோம். எங்களுக்கு வேணும்கிற பொருளை வாங்கிக் கொடுத்து, தட்சணையா உங்க மனம் போல கொடுத்தா போதும். ஜாம் ஜாம்ன்னு கல்யாணத்தை முடிச்சிடலாம்.”
“இன்னும் ஏதாவது விஷயம் இருக்கா? தெரிஞ்சுக்கணும் போல இருக்கு.!!’
“இன்னும் நிறைய விஷயம் இருக்கு சொல்லலாம். கேக்க நேரமிருந்தா உக்காந்து கேளுங்கோ. இப்ப யாரும் இதைப் பத்தி அவ்வளவா தெரிஞ்சுக்க விரும்புறதில்லே. முன்னால சொன்னதை கொஞ்சம் விளக்கமாவும் சொல்றேன் கேட்டுக்கோங்க.
திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வர். பெண் வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.
மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலியன முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.
திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுனை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக்கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலைமேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.
பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)
கன்னிக்கால் ஊன்றல்
இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக்கால் அல்லது கன்னிக்கால் ஊன்றவேண்டும். அதற்கு இப்போது கலியாண முள்முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டவேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நினைத்து கும்பத்தண்ணீரை ஊற்றலாம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்யவேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)
முளைப்பாலிகை போடல்
முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்கவேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.
முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம். நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்.
பந்தல் அமைத்தல்
பந்தல்
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப்பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறைவழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.
திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.
வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்டவேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப்படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைக்கென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.
• 1 விநாயகர்
• 2 ஓமகுண்டம்
• 3 அரசாணி
• 8 சந்திர கும்பம்
• 9 அம்மி
• 10 7 ஈசானமூலை – சுவாமி அம்பாள்
• 11 மஞ்சள் பாத்திரம் – மோதிரம் போட்டெடுத்தல்
அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப்படும் (4, 5, 6, 7) சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.
குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங்களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட்டிருக்கும்.
மணமகன் அழைப்பு
திருமணத்தன்று மணமகனை கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறைவைக்கவேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.
கடுக்கண் பூணல்
முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.
தலைப்பாகை வைத்தல்
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதேபோல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப்பக்கமாக நிற்பார்.