06-07-2023, 12:27 PM
(06-07-2023, 12:18 AM)Geneliarasigan Wrote: தாங்கள் சிறிய எழுத்தாளரா, நீங்கள் கதை எழுதும் நடை ஒரு தேர்ந்து எடுத்த எழுத்தாளரின் நடை போல் உள்ளது.யாரும் ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவரும் இல்லை,உயர்ந்தவரும் இல்லை. ஒவ்வொருவருக்கு தனிப்பட்ட திறமைகள் உள்ளது.அதனால் நீங்கள் எப்பொழுதும் உங்களை தாழ்த்தி கொள்ள வேண்டாம்.உங்களுக்கும் எனக்கும் கதை எழுத ஆரம்பித்து வெறும் 6 மாதம் தான் வித்தியாசம்.ஆரம்பத்தில் நான் கதை எழுத ஆரம்பிக்கும் பொழுது நான் செய்த தவறுகள் போல நீங்கள் செய்யாமல் ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல எழுதுகிறீர்கள்.இந்த தளம் கதை எழுத பயில்பவர்களுக்கு ஒரு அருமையான தளம்.அதனால் கற்பனை குதிரையை அவிழ்த்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.
தங்களின் கமெண்டிர்க்கு மிகவும் நன்றி நண்பரே! நீங்கள் கூறுவது போல, இந்த தளம் கதை எழுதுபவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்...ஆறு மாத வித்தியாசமாக இருந்தாலும் உங்களுடைய கதை நகர்வை பார்த்தாள், பல வருட அனுபவசாலி போல் எழுதியுள்ளீர்கள்...ஊக்கப்படுத்தியதற்கு மிகவும் நன்றி நண்பரே!.