02-07-2023, 02:06 PM
(02-07-2023, 12:56 PM)Pappuraj14 Wrote: Bro post regularly then only u got more followers and likes if u drs and likes ..if u don't update regularly followers are go to read another websites and they forget u and also concentrate on this strory and write sucessfully
நண்பரே.... நான் உள்பட இங்கு கதை எழுதும் அனைத்து எழுத்தாளர்களும் எங்களுடைய மனதிருப்திக்காகத் தான் இங்கு கதை எழுதுகிறோம்.. வேறு எந்த ஆதாயமும் எங்களுக்கு கிடைக்கப்போவது இல்லை...
ஒரு கதையை எழுத வேண்டுமென்றால் எங்களது சொந்த வேலைகளை தாண்டி ஃபிரீ டைம் கிடைக்க வேண்டும்.. வேலை செய்தால் தான் எங்கள் குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.. எங்களுக்கு இலவசமாக பணத்தை கொடுக்க யாரும் இல்லை..
அடுத்து ஃபிரீ டைம் கிடைக்கும் போதும் கதை எழுதுவதற்காக மனநிலை இருக்க வேண்டும்.. நாம் பள்ளியில் படித்த காலத்தில் ஹோம் ஒர்க் செய்ய சொல்லும் போது கட்டாயத்தின் பேரில் கடமைக்காக புக்கை பார்த்து கடகடவென எழுதி வைப்போம்.. அது போல காமக்கதையை எழுத முடியாது.. அதை ரசித்து எழுத மனநிலை இருந்தால் மட்டுமே முடியும்..
அடுத்து முக்கியமானது தனிமை.. நாங்கள் எழுதுவது காமக்கதை.. வரலாற்று நாவல் கிடையாது.. இதை மற்றவர்கள் முன்னிலையில் பெருமையாக காட்டிக் கொள்ள முடியாது.. பெருமை பட்டுக் கொள்ளவும் முடியாது.. இதைப் பயன்படுத்தி தான் சில புத்தக பதிப்பாளர்கள் இண்டர்நெட்டில் காமக்கதைகளை திருடி புத்தமாகமாக பிரிண்ட் செய்து காசு பார்க்கிறார்கள். காரணம் யாரும் காப்பி ரைட்ஸ் கேட்டு வரமாட்டார்கள். சரி நம்ம விசயத்துக்கு வருவோம்.. அப்படி தனிமை வேண்டுமென்றால் தனியாக ரூமில் தங்கி இருப்பவருக்கு பிரச்சனை இல்லை.. குடும்பத்தோடு வசிப்பவர்கள் எப்படி எழுத முடியும்.. அதற்காக நாங்கள் தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டும்.. சில நேரங்களில் உடல் அசதியில் எங்களால் கதை எழுத முடியாமல் போகிறது..
ஒரு அப்டேட்டை எழுத்துப் பிழை இல்லாமல் டைப் செய்ய இரண்டு மூன்று மணி நேரம் எடுக்கும். அந்த நேரம் எந்த தடையும் இல்லாமல் இருக்க வேண்டும்.. அதுவும் முக்கியம்..
இவ்வளவு சிரத்தை எடுத்து கதையை ஒவ்வொருவரும் எழுதிக்கொண்டிருக்கிறோம்..
நீங்கள் ரொம்ப எளிதாக சொல்கிறீர்கள்..
"தினமும் அப்டேட் போடலைனா ஃபாலோவர்ஸ் வேற கதையைதேடி போயிடுவாங்க.. உங்களையும் கதையையும் மறந்திடுவாங்கனு..."
அப்படி போவது அவரவர் விருப்பம் நண்பரே.. இதனால் எந்த எழுத்தாளருக்கும் நஷ்டம் இல்லை.. அய்யோ என்னுடைய கதையை படிக்கவில்லையே.. இந்த வருடம் கிடைக்க வேண்டிய தேசிய விருது மிஸ் ஆகிடுமேனு வருத்தப்படபோறது இல்லை.. இப்படி ஒவ்வொரு எழுத்தாளரையும் மறந்து போனால் கதை எழுதுவது நின்றுவிடும்.. கதை படிப்பவருக்குத் தான் நஷ்டம்..
கண்டிப்பாக தினசரி அப்டேட் போட்டாக வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது நண்பரே அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.. அவரவர் சொந்த வாழ்வில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்.. அதையெல்லாம் மறந்து ரிலாக்ஸ் செய்ய தான் இங்கு வருகிறோம்.. இங்கேயும் பிரஷர் என்றால் என்ன செய்ய முடியும்...
நான் என்னுடைய கதைகளோடு சேர்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சில நல்ல கதைகளையும் முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..
கதை படிக்கும் அனைவருக்கும் அடுத்த அப்டேட்டை உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்யும்.. அந்த கதை அதே சுவாரஸ்யத்தோடு கடைசி வரை நகர வேண்டும் என்றால் கதை எழுதுபவர்களுக்கு நேரம் தேவைப்படும்.. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..
சில ஈனப்பிறவிகள் இங்கு பதிவிடும் கதைகளை திருடி வேறு தளத்தில் வேறு பெயரில் பதிவிடுகிறார்கள்.. சில தளத்தில் இங்கு எழுதப்படும் கதைகளை pdf ஆக மாற்றி வியாபாரம் செய்கிறார்கள். யாருடைய எழுத்துக்கு யாரு காசு கேட்பது...
இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு தான் எழுதுகிறோம்..
❤️ காமம் கடல் போன்றது ❤️