01-07-2023, 10:34 AM
(01-07-2023, 08:26 AM)Vandanavishnu0007a Wrote: காணாமல் கரைந்து மறைந்து போன என் அன்பு நண்பர்களுக்கு என் அன்பு வணக்கம்
ஏன் இப்போதெல்லாம் என்னை பற்றி அவதூறு கமெண்ட்ஸ் வருவதில்லை..
நீங்கள் கொடுத்த உற்சாகத்தாலும் ஊக்கத்தாலும்தான் என்னால் எதிர் நீச்சல் அடித்து நிறைய கதைகள் எழுத முடிந்தது
இந்த எதிர்ப்பு திரி கடைசி வரை சக்கை போடு போடும்.. அதிக கமெண்ட்ஸ் வரும் என எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்
மீண்டும் இந்த எதிர்ப்பு திரிக்கு உயிர் கொடுத்து ஆதரவு தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பிளீஸ்
என்னை மறந்து விடாதீர்கள் நண்பா
ஏதாவது சொல்லி திட்டிக்கிண்டே இருங்கள்..
அப்போதுதான் எனக்கு நீங்கள் எல்லாம் என்னோடு இருந்து ஆதரவளிக்கும் தெம்பு எனக்கு இருக்கும் நண்பா
மீண்டும் திரிக்கு உயிர் கொடுங்கள் பிளீஸ்
நன்றி
நண்பரே. எங்களைப் போன்றோர் இங்கு வரவேற்பு சரியில்லாமல், எழுதியதை நிறுத்தியது போல் நிறுத்தாமல் தொடர்ந்து பல கதைகளை எழுதி வருவதற்கு உண்மையிலேயே முதலில் என் பாராட்டுக்கள்.
ஆனால் முப்பதுக்கும் மேல் கதைகள் சொந்தப் பெயரிலும், நாலைந்து கதைகள் கூட்டுப்பெயரிலும் குட்டி அப்டேட்கள் எழுதிக் கொண்டே போய், சலித்துப் போன வாசகர்கள் விமர்சித்த பின்னும் நிறுத்தாமல் எழுதி, இனி அறிவுரையோ, விமர்சனமோ செய்வது வீண் என்ற புரிதலில் அவர்கள் உங்கள் பெயருள்ள அப்டேட்களைப் படிப்பதையே நிறுத்தியதை உங்கள் வெற்றி போல் விமர்சனம் செய்து இப்படி பதிவு போடுவது வேடிக்கை தான். இது பள்ளியில் எத்தனை கண்டித்தும் அறிவுரை சொல்லியும் திருந்தாத சில ரௌடிப் பையன்களை ஆசிரியர்கள் ஒரு கட்டத்தில் கண்டு கொள்ளாமல் போவதை அந்த ரவுடிப் பையன்கள் தங்கள் வெற்றியாக சொல்லிக் கொள்வது போலத் தான். உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளருக்கு இது பெருமை அல்ல சிறுமையே.
ஒரு காலத்தில் நல்ல கதைகளை எழுதியவர் நீங்கள். அதே போல் அடுத்தவர்கள் எழுதியதையும் பாராட்டி ஊக்குவித்தவர் நீங்கள். உங்கள் அளவு மற்ற எழுத்தாளர்களை இங்கே யாரும் ஊக்குவித்தது கிடையாது என்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்த மரியாதை உங்கள் மீது எனக்கு இருக்கிறது. முதல் நான்கு பக்கங்களில் தங்கும் பத்து பத்து கதைகள் இருப்பதை விட, வாசகர்கள் மனதில் தங்கும் இரண்டு மூன்று நல்ல கதைகள் எழுதப் பாருங்கள். நடப்பில் நாற்பது கதைகள் எழுதும் எந்த எழுத்தாளனுக்கும் அவ்வளவு நல்ல தரமான கதைகள் கொடுப்பது சாத்தியம் அல்ல.
வாசகர்கள் கமெண்ட் போடுவதில்லை என்று பழைய புலம்பலை பதிலாகச் சொல்லாதீர்கள். அப்படி இருந்தால் நிறுத்தி விடுங்கள். உண்மையில் உங்கள் கதை தரமாக இருந்தால் தாமதமாகவாவது வாசகர்கள் அப்டேட்கள் கேட்பார்கள். அந்த அளவு அந்தக் கதையில் ஒன்றுமில்லை என்று அவர்கள் நினைத்தால், அவர்களுக்காக கதைகள் எழுதுவது ஒரு எழுத்தாளனுக்கு சிறுமையே. அது ’என்னைத் திட்டுங்கள்’ என்று வடிவேலு லெவலுக்கு இறங்கி கேட்டுக் கொள்வதற்கு இணையான சிறுமை.
இனி இது போன்ற கமெண்ட்ஸுக்கு இவ்வளவு விவரமாக பதில் எழுதப் போவதில்லை. (இது கூட உங்கள் மீது எனக்கு முன்பு இருந்த மரியாதையால் தான் எழுதுகிறேன். ) மாற்றிக் கொள்வதும், இப்படியே தொடர்வதும் உங்கள் விருப்பம்.