28-12-2018, 11:04 AM
இந்திய பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் ஆஸி பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். 100 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிர்த் பும்ரா, இசாந்த், சர்மா, ஜடேஜா ஆகியோரின் கணிக்க முடியாத பந்துவீச்சு, பேட்ஸ்மேன்களை எளிதில் களத்திலிருந்து வெறியேறச் செய்கின்றன. மெல்போர்ன் ஆடுகளம் மூன்றாம் நாளில் மாற்றமடைந்துவிடும் என ஏற்கெனவே புஜாரா கூறியிருந்தார். அவர் கூறியது ஏறக்கூறைய உண்மையாகியுள்ளது. புஜாரா, ``இந்த ஆடுகளத்தில் 400 ரன்களுக்கு மேல் அடித்ததே வெற்றிக்கான ஸ்கோர்தான். ஆடுகளம் 3-வது நாளில் மாற்றமடைந்துவிடும்” என்றார். அந்தவகையில் இந்திய அணி டாஸ் வென்றது வெற்றிக்கு பெரும் சாதமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இமாலய இலக்கை இந்தியா எட்டியுள்ளதால், அது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெரும் சவாலாகியுள்ளது. ஆஸி வீரர்களின் இந்த நிலையை இந்திய பந்து வீச்சாளர்கள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா 292 ரன்கள் பின்தங்கியுள்ளது.