28-12-2018, 11:03 AM
இரண்டாவது நாளான நேற்று புஜாரா- விராட் கோலி இணை ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு இந்த இணை சிம்ம சொப்பனமாக விளங்கியது. அபாரமாக ஆடிய புஜாரா, சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். இதையடுத்து, மிட்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் கோலி வெளியேறினார். களத்தில் இறங்கிய ரஹானே, புஜாராவுடன் கைகோத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார் புஜாரா. பின்னர், இதையடுத்து, களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்காத நிலையில், ரோஹித் நிலைத்து ஆடி 63 ரன்களைச் சேர்த்து, களத்தில் இருந்தார். இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்ததது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து மூன்றாம் நாளான இன்று, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது