28-12-2018, 11:02 AM
சுழன்று அடித்த பும்ரா; தடுமாறிய ஆஸி., பேட்ஸ்மேன்கள் - இந்தியா தொடர் ஆதிக்கம்
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிய, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது டெஸ்ட் தொடர். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரைச் சமன்செய்தது. இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங்கைச் செய்தது. அறிமுக வீரர் மயங்க் அகர்வால், 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.