Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`நிபாவிலிருந்து தப்பிக்க வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை!' - குமரி கலெக்டர்
நிபா வைரசிலிருந்து தப்பிக்க வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அணில், வெளவால் கடித்த பழங்களைச் சாப்பிட வேண்டாம்' என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுறுத்தியிருக்கிறார்.
[Image: IMG-20190606-WA0018_16551.jpg]
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக கல்லூரி மாணவர், இளம்பெண் என 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இந்தநிலையில் கேரள மாநிலத்தையொட்டிய தமிழக மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.


இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தையொட்டியுள்ள மாவட்டம். எனவே, கேரள மாநிலத்தில் நிபா பற்றிய செய்தி வருவதால் இங்குள்ள மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 150 தனியார் மருத்துவமனைகள், 12 அரசு மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் நோயாளிகளை கண்காணித்து வருகிறோம். கேரள மாநிலத்தையொட்டிய மேல்புறம், திருவட்டார், கிள்ளியூர் ஒன்றியங்களில் காய்ச்சல் பரவுகிறதா எனக் கண்காணித்து வருகிறோம். வெளியூர் சென்று வரும் மக்களுக்குக் காய்ச்சல் வந்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.
[Image: image_(7)_16115.jpg]
நம் மாநிலத்தில் கேரள எல்லையையொட்டியுள்ள 8 மாவட்டங்களிலும் எந்தப் பிரச்னைகளும் இல்லை. விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. கைகளை நன்கு கழுவி சாப்பிடவேண்டும். ஒரே இடத்தில் 4-க்கும் மேற்பட்டவர்களுக்குக் காய்ச்சல் வந்ததாகவோ, காய்ச்சல் எண்ணிக்கை உயர்ந்ததாகவோ தகவல் இல்லை. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் சிறப்பு வார்டு உள்ளது. வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அணில், வெளவால் கடித்த பழங்களைச் சாப்பிட வேண்டாம். பழங்களை தோல் எடுத்தபிறகு சாப்பிட வேண்டும். தினமும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். கேரள சுகாதாரத் துறையும் நிபா குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என்கிறார்கள். மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-06-2019, 05:27 PM



Users browsing this thread: 106 Guest(s)