Romance அவளுக்கென்ன அழகிய முகம்
#4
மாடி வீட்டுக்கு சென்று பார்க்க, அங்கே ரெங்கம்மா வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தார். இரவு உணவும் தயாராக இருந்தது. அவள் குளித்து ரெடியாகி வந்தாள்.

" சரிம்மா.. நான் கிளம்பறேன்.."

" ரெங்கம்மா.. காசு வாங்காம போறீங்க.. இருங்க.."

" வேணாம்மா.. ஐயாவே குடுத்துட்டாரு.."

" அவர் ஏன் குடுத்தாரு.. ஏன், நாங்க குடுக்கமாட்டோமா ?"

" ஐயோ அப்படியில்லம்மா.. அவரு தங்கமான மனுஷன்... உங்ககிட்டயே வாங்கிக்கறேன்னு சொன்னேன்.. ஆனா அவருதான் நானே தரேன். வாடகையோட சேத்து வாங்கிக்கறேன்னு சொன்னார் "

" ம்ம் அப்படியா சொன்னாரு.. நான் பேசிக்கறேன் அவர்கிட்ட"

" கீழே என்ன பிரச்சனை? நானும் பாத்தேன்.. உனக்கு ஏன் எவ்ளோ கோவம் வருது.. அவனுக ரொம்ப மோசமான பசங்க.. அவனை நீ அடிச்சுட்டியே..நம்ம ஐயா இருந்ததால நீ தப்பிச்சே... இல்லாட்டி என்னாகிறது?"

" அவன் ஒரு பொறுக்கிப்பய.. அவனுக்கெல்லாம் பயப்படலாமா?.. உங்க ஐயா இல்லாட்டியும் நான் சமாளிச்சுடுவேன். எனக்கு கராத்தே ஜுடோ எல்லாம் தெரியும். "

ராணி தொடர்ந்தாள்..

" அது சரி, நான் உன்கிட்ட கேக்கணும்னு நெனச்சேன். உங்க ஐயா ஏன் தனிக்கட்டையா இருக்காரு ? உனக்கு தெரியுமா?"

" அவரு கதையை ஏம்மா கேக்கற.. அவரு ஒழுக்கமான மனுஷன்.. பிரமாச்சாரியாவே வாழணும்னு முடிவு பண்ணிட்டார்.. ஆனாலும் ஜிம்முக்கு வர சில பொம்பளைங்க அவரை வசியம் செய்ய பாத்தாங்க.. ஐயா கண்டிப்பானவரு.. அவங்களை ஜிம்மில்லிருந்து தொரத்திட்டாருன்னா பாத்துக்கோ.. "

" அவ்ளோ பெரிய கடவுள் பக்தரா அவரு.. நானும் பாக்கறேன்.."

" விளையாடாதம்மா.. விளையாட்டு வினையாயிடும்.. பாத்து நடந்துக்க பொண்ணே!!! "

" ச்சே ச்சே... சும்மா சொன்னேன் ரெங்கம்மா.. நீ போய் அவர் கிட்ட வத்தி வெக்காதே "

அப்போதுதான் உள்ளே வந்த ப்ரியாவிடம்... " நீ கொஞ்சம் புத்தி சொல்லும்மா.. இந்த பெண்ணுக்கு கோவமும் குறும்பும் ஜாஸ்தி.."

" என்னடி பண்ணி வெச்சே?" என்று பிரியா கேட்க மாலை நடந்ததை சொன்னாள். வீடு ஓனர் ரெங்கம்மாவுக்கு காசு கொடுத்ததையும் சொன்னாள்.

" சரி, நமக்கு லக்குதானே...காசு மிச்சம்.. விடு.. நீ கொஞ்சம் அந்த பொருக்கி பசங்க கிட்ட ஜாக்கிரதையா இரு. யாருகிட்டயும் வம்பு தும்புக்கு போகாம இரு. இந்த வீட்லயாவது நிம்மதியா இருக்கலாம்.. "

"அதெப்படி விட முடியும்.. நான் போய் அவருகிட்ட நீங்க ஏன் காசு கொடுத்தீங்கன்னு கேக்கத்தான் போறேன்..", என்று ராணி பிடிவாதமாக நின்றாள்.

" நீ சொன்னா கேக்க மாட்டே... இப்போவே போய் மல்லுக்கட்டாத... எனக்கு பசிக்குது.. நாளைக்கு பேசிக்கலாம் வா.. "

***
[+] 6 users Like rainbowrajan's post
Like Reply


Messages In This Thread
RE: அவளுக்கென்ன அழகிய முகம் - by rainbowrajan - 19-06-2023, 11:28 PM



Users browsing this thread: