Romance அவளுக்கென்ன அழகிய முகம்
#2
1


சென்னையின் புறநகர் பகுதியில் சற்றே உள்ளடங்கியிருந்த சாலையில் கடைசியாக கட்டப்பட்டிருந்த டூப்ளெக்ஸ் வீட்டின் முன்புறம், ஒரு 35-36 வயது மிக்க மனிதன் கேட்டின் முன்னர் நின்றுகொண்டு...

"சார்... சார்... " என்று கூவிக்கொண்டிருந்தான்.

அவன் அருகே இரு யுவதிகள் மாடர்னாக உடை அணிந்துகொண்டு கேட்டின்மேல் கையை ஊன்றிக்கொண்டு காத்திருந்தார்கள்.

5 நிமிட கூவலுக்கு பிறகு கீழ் வீட்டின் கதவு திறந்தது. ஆஜானுபாகுவான ஒரு மனிதர் உள்ளேயிருந்து தலையை நீட்டினார்.

கேட்டின் அருகே நின்றிருந்த மனிதன்....

" சார்.. என் பெரு சுரேஷ்.. இங்கதான் பக்கத்துல இருக்கேன். To-Let போர்டு பாத்தோம்.. அதான் பாக்கலாம்னு வந்தோம்.."

புரோக்கர் என்று புரிந்துகொண்ட அந்த பெரியவர், பின்னால் நின்றிருந்த பெண்கள் இருவரும் அடக்க ஒடுக்கமாக நின்றவர்களை பார்த்தபடி..

" யாருக்கு வீடு ?"

" இதோ இவர்களுக்குத்தான் சார்.. ITல வேல செய்யறாங்க.. பக்கத்துல ஆபீஸ் இருக்கறதுனால இந்த ஏரியால வீடு பாக்கறாங்க.."

" நான் பேமிலிக்குத்தான் வாடகைக்கு குடுக்கறத்துப்பா.. சாரி "

உடனே இருபெண்களும் பதறி.. " சார் சார் கொஞ்சம் மனசு வையுங்க சார். வாடகையெல்லாம் ஒழுங்கா குடுத்திருவோம்."

" அதுக்கில்லம்மா.. உங்களுக்கு பக்கத்துல ஒரு லேடீஸ் ஹாஸ்டல் இருக்கே..."

" நாங்க அங்க இருக்க புடிக்காமதான் சார் வீடு பாக்கறோம்.", என இருவரில் ஒருத்தி சொன்னாள்.

" ஆமா சார் அந்த ரோட்ல காலிபசங்க தொல்லைபன்றாங்கன்னு சொன்னாங்க சார்", புரோக்கர் ஒத்து ஊதினான்.

அரைமனதுடன் கேட்டை திறந்து மூவரையும் உள்ளே வர சொன்னார்.

புரோக்கரிடம் சாவி கொடுத்து மேல் வீட்டை காமிக்கச் சொன்னார்.

புரோக்கர் இருவரையும் மேலே கூட்டிப்போய் வீட்டை சுற்றிக் காண்பித்தான். இரு பக்கத்திலும் தென்னை மரங்கள், சிலு சிலுவென காற்று, வசதியான இரண்டு பெட் ரூம்கள், சமையலறை என்று மிக வசதியாகவே இருந்தது.

" வாடகை ஜாஸ்தி கேப்பாரோ? ", புரோக்கரிடம் கேள்வி எழுப்பினாள் ஒருத்தி.

" அதெல்லாம் பேசிக்கலாம் மேடம்... உங்களுக்கு வீடு புடிச்சிருந்தா சொல்லுங்க.."

" சரி வாங்க கீழே போய் பேசலாம்."

" நீங்க இங்க இருங்க மேடம் நான் போய் பேசிட்டு வரேன்.", என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கீழே ஓடினான்.

போய் 10 நிமிஷத்தில் மேலே வந்தான்.

" நான் அவர்கிட்ட பேசிட்டேன் மேடம்..", என கூறிவிட்டு வாடகையையும் அட்வான்ஸையும் கூற இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

" இவ்ளோ குடுக்க முடியாதுங்க.." என இருவரும் மறுக்க..

" மேடம் அவரு பெரிய ஜிம் வெச்சிருக்கார்.. ஜிம் மாஸ்டர்.. உங்களுக்கு நல்ல சேப்டி கூட.. சரி மேடம்.. நான் பேசிப்பாக்கறேன்.. இருங்க.."

" நாங்களும் வரோம்.." என்று இருவரும் கீழே வர... வீட்டுக்காரரே மாடிக்கு வந்துகொண்டிருந்தார்.

" வீடு புடிச்சுதா? வாடகை அட்வான்ஸ் எல்லாம் ஓகேவா?"

மஞ்சள் சுடிதார் போட்டிருந்த ஒருத்தி.. " சார் வீடெல்லாம் ஓகேதான்.. ஆனா வாடகை அட்வான்ஸ்தான் கொஞ்சம் அதிகமா இருக்கு.. நாங்க இப்போதான் வேலைக்கு சேந்திருக்கோம்.. எங்களால அவ்ளோ தரமுடியாது சார்."

பெண்களுக்கு மட்டும் வீட்டை கொடுக்க மனசில்லாமல் அவர்களை தட்டி கழிக்க வேண்டி சற்று அதிகமாகவே சொல்லி இருந்தார்.

" இந்த ஏரியால இந்த வாடகை கம்மி.. நீங்க கேட்டுப்பாருங்க.."

மஞ்சள் சுடிதாரின் முகம் அவரை வசீகரித்தது. எங்கோ பார்த்தது போலவே அவர் உணர்ந்தார். இருந்தாலும் தன்னுடைய பிரம்மச்சாரி வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்று அவர்களாய் வீடு வேண்டாம் என்று சொல்ல வைக்க முயன்றார்.

மஞ்சள் சுடிதாரின் முகம் வாடி விட்டது.

கூட இருந்த பெண், " சரி வாடி ராணி வேற வீடு பாக்கலாம்" என்று இழுக்க...

" அவசர படாதீங்க மேடம்.... " என ப்ரோக்கர் தடுத்து நிறுத்தினான்.

வீட்டுக்காரை பார்த்து, " ராஜன் சார், கொஞ்சம் பாத்து செய்ங்க சார்." என்று தலையை சொரிந்துகொண்டு கெஞ்சினான்.

ராணியின் முகத்தை பார்த்த ராஜன், ஏதோ சொல்ல நினைத்தார்.. பிறகு பேச ஆரம்பித்தார்.

" சரிம்மா.. நீங்க ரெண்டு பெரும் கேக்கறதுனால சொல்றேன்.. நான் தனிக்கட்டை.. என்ன கீழே டிஸ்டர்ப் பண்ணாம தங்கிட்டு இருக்கனும். நீங்க வந்து தங்கினா உங்களுக்கு மட்டும்தான் வீடு.. ப்ரெண்ட்ஸ் பார்ட்டினு வீட்ல சத்தம் வரக்கூடாது.. வாடகை கரெக்டா 5 தேதிக்குள்ள பேங்க்ல விழுந்திரனும். உங்களுக்கு இது சம்மதம்னா சொல்லுங்க.. ", என்று பேசி முடித்தார் ராஜன்.

ராணியும் அவள் தோழியும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து கொண்டார்கள். பிறகு ராணியே பேசினாள்.

" வாடகை கரெக்டா குடுத்திருவோம். கண்டிஷன்ஸ் எல்லாம் ஓகே.

எங்களுக்கு வாடகை அட்வான்ஸ் மட்டும் கொஞ்சம் குறைச்சுக் கோங்க சார்."

ராணியின் அழகான முகத்தை பார்த்தபடி.. " என்னடா இது தர்மசங்கடமான நிலைமை" என்று மனதில் நினைத்தார்.

ராஜன் மௌனமாக இருக்கவே, ராணியின் தோழி போகலாம் என்று கண்களில் செய்கை காட்டினாள்.

இருவரும் மெல்ல நகர்ந்து வாசலுக்கு செல்லவே...

" கொஞ்சம் இரும்மா.. " என ராஜன் நிறுத்தினார். இருவர் முகத்தையும் பார்க்க நல்ல பெண்களாக தெரிந்தது.

வாடகையை 20 சதம் குறைத்தான். அட்வான்ஸ் பணத்தில் 6 மாச அட்வான்ஸ் பணம் கொடுத்தால் போதும் என்று சொன்னான்.

ராணியும் அவள் தோழி ப்ரியாவும் சந்தோசமாக முகத்தை வைத்துக்கொண்டு..

" ரொம்ப தேங்க்ஸ் சார்.." என ராணி கை குலுக்க கை நீட்ட, ராஜன் கை குலுக்காமல் கை கூப்பி வணக்கம் வைத்தார்.

புரோக்கரிடம் மீண்டும் வரும்போது பாண்ட் பேப்பரில் அக்ரீமெண்ட் எடுத்து வர சொன்னார்.

அந்த வாரத்தின் கடைசியில் இரு பெண்களும் அக்ரிமென்டில் கையெழுத்து போட்டபின் மாடி வீட்டுக்கு குடியேறினார்கள்.

ஞாயிறு கிழமை காலை, சரியாக அட்வான்ஸை அவர் கையில் கொடுத்துவிட்டார்கள் பெண்கள் இருவரும்.

" ரெங்கம்மா.. இவங்களுக்கு காபி போட்டு கொடு" என்று குரல் கொடுக்க, உள்ளேயிருந்து 10 நிமிஷத்தில் 45-50 வயது மதிக்கத்தக்க பெண் காபி கொண்டுவந்தாள்.

ராணியும் ப்ரியாவும் அவர் யார் என தெரியாமல் முகத்தை பார்த்துக்கொண்டார்கள்.

" ரெங்கம்மா.. இங்க சமையல், துணி துவைக்க வேலைக்கு வர்றவங்க.. பக்கம்தான் வீடு...", ராஜன் இருவருக்கும் அறிமுகம் செய்தாள்.

" அப்படியா... எங்களுக்கும் அப்படியே எங்க வீட்டு வேலைக்கும் வாங்கம்மா.. எங்களுக்கும் உதவியா இருக்கும்.."

ராஜன், " மேல் வீடு தான ரெங்கம்மா, அப்படியே செஞ்சுடு. "

"சரிங்கய்யா"

பெரிதாக சாமான் தட்டுகள் இல்லை. ஞாயிறு விடுமுறை ஆதலால், இருவரும் பம்பரமாக சுற்றி வீட்டை அழகேற்றினார்கள். ராஜனும் தன் பங்குக்கு கனமான பொருட்களை தூக்கி வைக்க உதவி செய்தார்.

மாலையில் ராணி அவருக்கு டீ போட்டு கொடுக்க, அதை குடித்த ராஜனுக்கு பழைய நினைவுகள் வந்து போனது. அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு கீழே வந்துவிட்டார்.

***
[+] 4 users Like rainbowrajan's post
Like Reply


Messages In This Thread
RE: அவளுக்கென்ன அழகிய முகம் - by rainbowrajan - 19-06-2023, 11:13 PM



Users browsing this thread: 1 Guest(s)