19-06-2023, 10:08 PM
(19-06-2023, 09:20 PM)jakash Wrote: இன்று தான் இந்த அப்டேட் பார்த்தேன்
நண்பா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல .என்னை விட இங்கு எத்தனையோ நல்ல எழுத்தளார்கள் இருக்க என்னை குறிப்பிட்டதை எனக்கு எப்படி உங்களுக்கு நன்றி சொல்லனே தெரியல உங்களின் இந்த ஒரு விஷயம் போதும் நண்பா எனக்கு 1000 பாராட்டு பெற்றது போல உள்ளது .மிக்க நன்றி நண்பா
மேலும் என்னை விட சிறந்த எழுத்தாளர் தாங்கள் தான் உங்கள் எழுத்து நயம் வர வர மிகவும் சிறப்பாக உள்ளது
Hi நண்பா,நல்ல எழுத்தாளர்கள் இருக்கலாம்.ஆனால் எனக்கு பிடித்த எழுத்தாளர் நீங்கள் தானே.எனக்கு பிடித்த எழுத்தாளரின் பெயரை தானே என் கதையில் பயன்படுத்த முடியும்.உங்களை விட என்னை சிறந்த எழுத்தாளர் என்று கூறுவது எல்லாம் too much.வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பட்டம் பெற்றதை போல தான்.நான் எப்பொழுதும் நான் கதையை நிறுத்த போகிறேன் என்று சொல்லவே வில்லை.ஒரு கதை நன்றாக இருக்கிறது எப்படி தெரிந்து கொள்வது?comments,likes,views மூன்றின் மூலமாக தானே!முன்பு ஒரு நாளைக்கு 3000 views கிட்ட வந்தது.இப்பொழுது 200 ஐ தொடுவதே பெரிய விஷயமாக உள்ளது.comments சொல்லவே தேவை இல்லை..ஒரு காலத்தில் வேலை முடிந்து பத்து மணிக்கு வந்த பிறகும் உட்கார்ந்து எழுதி 12 மணி ,1 மணிக்கெல்லாம் update போட்டு இருப்பேன்.என் வாசகர்களுக்காக எப்படியாவது தினமும் ஒரு update கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருந்தது.இப்பொழுது என் கதையை வந்து படிக்கும் வாசகர்கள் மிக குறைவு.அதனால் கதை எழுத செலவிடும் நேரத்தை குறைத்து கொண்டேன்.இந்த கதை எழுதி முடித்து விட்ட பிறகு உங்கள் கதைக்கு comment செய்யும் வாசகனாக மட்டும் தொடர்ந்து இருப்பேன்.