15-06-2023, 09:25 PM
கதிரவன் பேச்சை கேட்ட கதிரேசன் அதிர்ந்தான். தலை கிறுகிறுத்தது.
என்ன பதில் சொல்வது என புரியாமல் பதறினான்.
டேய் கதிரவா... அந்த வேலை ரொம்ப கஷ்ட்டமா இருக்குமடா...
உன்னால முடியாது.
கதிரவன் : தெரியும்டா. ஒரு நாளைக்கு பத்தாயிரம் பதிநஞ்சாயிரம்னா சும்மாவா? கஷ்ட்டம் இருக்கும்னு தெரியும் கதிரேசா.
எதாவது செஞ்சு எனக்கும் உன் வேலை வாங்கி கொடு.
கதிரேசன் யோசித்தான். கதிரவன் குணம் தெரிந்ததுதான் கதிரேசனுக்கு. அவன் ஒரு விஷயத்தை பிடித்துவிட்டால் அவன் மனதை மாற்ற முடியாது. அதனால் இப்போதைக்கு கொஞ்சம் அலையவிடலாம் என முடிவு செய்தான் கதிரேசன்.
கதிரேசன் : சரி கதிரவா... எனக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம், கல்யாணம் முடிச்சு ஒரு 20 நாள் தேன் நிலவுக்கு வெளிநாடு போறன். போய்ட்டு வந்து மறு வீடு , அழைப்பு சடங்குன்னு அது ஒரு 20 நாள் போகும். ஒரு ஒன்றறை மாசம் கழிச்சி வாடா.. வேலை பத்தி பேசுவோம். இப்போ போய் மாடு மேய்க்கிற பொழப்பை பாரு.
கதிரவன் ; சரி கதிரேசா. நான் வாரேன்.
கதிரேசா : டேய் கதிரவா... மறக்காமல் கண்ணாலத்துக்கு வந்துடுடா... கறி சோறு போடுறேன் என சொன்னான்.
கதிரவன் அதிசயித்தான். அவன் ஊரில் கறிசோறு போடும் முதல் கலயாணம் கதிரேசன் கல்யாணம்தான்.
அவன் கூடவே வேலைக்கு சென்று நல்லா கடினமாக உழைத்து நாமலும் நம்ம கண்ணாலத்துக்கு பல வகை கறி சோறு போடனும்.
என்ன என் கல்யாணம்? என் தங்கை மேகலை கல்யாணத்துல ஆடு, மாடு, கோழி, காடை, கவுதாரி, இறால்,சுறா , நண்டு, மீன், முட்டைன்னு கல்யாண விருந்து வச்சி அசத்தி புடுறேன்.
மனசுல காசு ஆசை வந்துடுச்சி. ஆனால் வேலைதான் எப்படி இருக்கும்னு தெரியலை. கதிரேசனும் சரியா சொல்ல மாட்டுறான். வெயில்ல நின்னு வேகனுமா? இல்லை தூங்காமல் பணியில நின்னு காயனுமா?
வேலை எவ்வளவு நேரம் இருக்கும்? காலை 10 லேந்து மாலை 5 வரைக்குமா?
இல்லை 12 மணிநேரம் 14 மணி நேரம் வேலை செய்ய சொல்வாரக்ளா?
எவ்வளவு கஷ்ட்டமான வேலையாக இருந்தாலும் எந்த குறையும் இல்லாமல் வேலை செஞ்சி முதலாளிக்கிட்ட நல்ல பேரு வாங்கனும். அப்போதான் நமக்கு காசு நிறைய கிடைக்கும் என தனக்குள் மனகணக்கு போட்டு கொண்டே அவன் பிழைப்பை பார்க்க சென்றான் கதிரவன்.
-தொடரும்