06-06-2023, 06:26 AM
(This post was last modified: 23-06-2023, 09:15 AM by Geneliarasigan. Edited 6 times in total. Edited 6 times in total.)
Episode -142
ஏய் மது ,அவளுக்கு என்ன ஆச்சுடி என் கைகட்டை கொஞ்சம் அவுத்து விடு.ஷெட்டி கட்டை அவுக்க முடியாமல் போராடி கொண்டு இருந்தான்.
டான்ஸ் மாஸ்டர் அதற்குள் நீரை எடுத்து வந்து கொடுக்க,மது ஸ்ருதியின் முகத்தில் நீரை தெளித்தாள்.ஸ்ருதி மயக்கத்தில் இருந்து நினைவுக்கு வர,தண்ணிரை குடிக்க கொடுத்து ,தன் சேலையின் ஒரு பகுதியை கிழித்த மது,அவள் காலுக்கு கட்டு போட்டாள்.
"போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று அவ்வளவு வெறியாடி உனக்கு?உன்னை ..."மது கோபப்பட"சரி உன்கிட்ட இப்போ கோபம் கூட பட முடியல,வா நாம உடனே ஹாஸ்பிடல் போகலாம்,"மது பரபரத்தாள்.
இல்ல பரவாயில்லை மது,சின்ன அடி தான்.சரி ஆகிடும் விடு,ஹாஸ்பிடல் எல்லாம் வேண்டாம்.நான் அவர் கூட இரவு ஊருக்கு வேற கிளம்பனும்.
இது சின்ன அடியா? எவ்வளவு இரத்தம் கீழே போய் இருக்கு,ஊருக்கெல்லாம் இன்னிக்கு போக முடியாது.போறதா இருந்தால் அவன் மட்டும் தனியாக போகட்டும்.நீ மெதுவா எந்திரி.ஸ்ருதி,மதுவின் தோளை பற்றி கொண்டு மெதுவாக நடக்க
ஏய் மது,பிளீஸ் என் கட்டை அவுத்து விடுடி,நான் அவளை தூக்கிட்டு வரேன்.ஷெட்டி கத்தினான்.
முடியாதுடா.உன்னால தான் இவ்வளவு பிரச்சினையும். நான் ஹாஸ்பிடல் போய் திரும்பி வரும் வரை நீ இங்கேயே கிடந்து சாவு மது பதிலுக்கு கத்தினாள்.
ஷெட்டி வெறியோடு பிடித்து இழுக்க ஒரு கைகட்டு அவிழ்ந்தது.ஒரு கை விடுபட்டவுடன்,இன்னொரு கை மற்றும் கால் கட்டையும் அவிழ்த்து கொண்டு ஓடி வந்து ஸ்ருதியை மலர் போல் கையில் அள்ளி கொண்டு காரை நோக்கி ஓடினான்.
இவளுக்கு ஏதாவது ஒன்னு நடந்தால்,நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் மது,அவ்வளவு சீக்கிரம் யாருக்காகவும் இவளை விட்டு கொடுக்கவும் மாட்டேன் என்று காரை வேகமாக செலுத்தினான்.
ஸ்ருதியை தூக்கி கொண்டு மதுவின் மருத்துவமனைக்கே செல்ல,
டாக்டர் செக் பண்ணி விட்டு,இரத்தம் கொஞ்சம் நிறைய தான் வெளியே போய் இருக்கு.அதனால் pulse வேற கம்மியாக இருக்கு.நான் குளுகோஸ் ஏத்தறேன்.வலிக்கு pain killer injection போட்டு இருக்கேன்.ராத்திரி கண்டிப்பாக observation இல் இருக்கணும்.ஒரு வேளை pulse ரொம்ப கம்மி ஆச்சு என்றால் இரத்தம் ஏத்துகிற மாதிரி இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
ம்,ஓகே டாக்டர்,நான் இன்னக்கி இவ கூட stay பண்றேன்.என்று மது சொல்லிவிட்டு ஸ்ருதியை பார்த்து,"அடிக்கள்ளி விடாப்பிடியாய் நின்னு நாட்டியத்தில் என்னை ஜெயிச்சிட்ட."
ஏன் மது உன் கூட நாட்டியம் ஆடியது உன்னை தோற்கடிக்கவா,இல்லவே இல்ல மது ,என் கடமையை நிறைவேற்ற தான் ஆடினேன்.அதுவும் இல்லாம நீ தோற்கவே இல்லை.என் இரத்தத்தை பார்த்து நீ வெற்றியை விட்டு கொடுத்த அவ்வளவு தான்.இல்லையென்றால் இந்நேரம் நீ தான் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்ப,
அப்படி பார்த்தால் ஸ்ருதி, உனக்கு ஆணி குத்தாமல் இருந்திருந்தால் நீ தான் தொடர்ந்து ஆடி வெற்றி பெற்று இருப்ப,பதிலுக்கு மது கூறினாள்.
சரி விடு,நாம ரெண்டு பேரும் தான் ஜெயித்தோம் போதுமா? ஸ்ருதி புன்னகைக்க
சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்க ஸ்ருதி,அவனை ஊருக்கு தனியாக அனுப்பி விடலாமா?நீ என் கூடவே இருக்கியா !
இல்ல மது,என்னை அவனுடன் போக விடு.அவனுக்கு இப்போ நான் கண்டிப்பாக தேவை.அதுமட்டும் இல்ல,அங்கே என்னை நம்பி தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கும் நான் தேவை.ஆனா நான் உனக்கு ஒரு உறுதி அளிக்கிறேன்.
என்ன சொல்லு ஸ்ருதி,மது கேட்டாள்.
நாம் இரண்டு பேருமே போட்டியில் வெற்றி பெற்றதால்,ஒருவேளை அனிதா வந்து என்னை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றால் ,அந்த நேரத்தில் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் போதுமா?
நான் உன்னை என்ன அப்படியே விட்டு விடுவேன் என்று நினைத்தீயா ஸ்ருதி,இப்போ நீ அவன் கூட போனாலும் அனிதாவே வந்து என்ன பிரச்சினை பண்ணாலும் சரி,நான் உன்பக்கம் தான் நிற்பேன்.நீ கவலைப்படாமல் இரு.நீ இப்போ ரொம்ப சோர்வா இருக்கே,கொஞ்சம் கண்ணை மூடி தூங்கு.
தான் மணிகரன் கோவிலில் வேண்டிய வேண்டுதல் பலித்ததை எண்ணி ஸ்ருதி மனம் உள்ளூர மகிழ்ந்தது.ஆம் எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஏற்பட போகும் சங்கடத்தை தீர்க்க அன்னை அனுப்பிய தேவதை தான் மது, என்று எண்ணி மனம் நிம்மதி அடைய ஸ்ருதி வலி ஊசியின் உபயத்தால் சற்று கண்ணயர்ந்தாள்.
மது ,ஷெட்டியை பார்த்து செய்கையால் தன்னை பின் தொடர்ந்து வருமாறு கூற ஷெட்டியும் மதுவின் பின் சென்றான்.
ஷெட்டியை பார்த்து,நான் உன்கிட்ட ஸ்ருதி விஷயமா கொஞ்சம் பேசணும்.
சொல்லு மது,நான் என்ன செய்யனும்?.
கொஞ்சம் நேரம் முன்னாடி நீ என்ன சொன்ன,அவளுக்கு ஒன்று என்றால் நீ பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று சொன்னே இல்ல ?
ஆமாம்,இப்பவும் சொல்றேன்.எந்த பிரச்சினை வந்தாலும் அவளை நான் கைவிட மாட்டேன்.
பிரச்சினையே நீதான்டா.அவள் மேல நிஜமாகவே உனக்கு அக்கறை இருக்கா?
நிஜமா அக்கறை இருக்கு மது,நீ இப்போ என்ன சொல்ல போற என்று நான் சொல்லட்டா!.நான் அவளை விட்டு விலக வேண்டும் அவ்வளவு தானே !அவ உள்ளுக்குள்ளே அவ்வளவு கஷ்டங்களை வைத்து கொண்டு என்னுடன் வாழ்கிறாள் என்று சொன்னதுமே நான் முடிவு பண்ணி விட்டேன்.அவளை விட்டு விலக வேண்டுமென்று!அவ உன்கிட்டவே இருக்கட்டும்.அவ வாழ்க்கையை சந்தோஷமாக இதற்கு மேலாவது வாழட்டும்.நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.அனிதாவாக நடிக்கும் போலி வாழ்க்கை அவளுக்கு வேண்டாம்.
நீ,நான் நினைக்கிற மாதிரி அவ எளிதில் உன்னை விட்டு இப்ப வரமாட்டா.அவள் மனசில் எப்படியோ நீ நல்லவனாக போய் உட்கார்ந்துட்ட .இப்போ போய் உன்னையும் அவளையும் பிரித்தால் அது பெரும் சிக்கலில் தான் போய் முடியும்.
சரி நான் என்ன தான் பண்ணட்டும்,நீயே சொல்லு மது?ஷெட்டி கேட்க
டேய் கவனமாக கேளு,நீ அவகிட்ட சம்பாதித்த நல்ல பேரை அதை அப்படியே கெட்ட பேராக மாற்ற வேண்டும்.அவ சொல்றது எதையும் காது கொடுத்து கேட்காதே.அவகிட்ட ஒவ்வொரு தடவை பேசும் போது கொடிய வார்த்தைகளால் அவளை காயப்படுத்து.அவளை உதாசீனப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் வெறுப்பை சம்பாதி.முக்கியமாக அவகிட்ட கூட நெருங்காதே.
அவகிட்ட நெருங்குவதை வேண்டுமானால் நான் தவிர்க்கிறேன்.ஆனால் மற்றப்படி அவள் மனதை என்னால் காயப்படுத்த முடியாது மது,வேற வழி ஏதாவது சொல்லு
வேற வழியே இல்லடா,இதை அவ நல்லதுக்கு நீ செய்து தான் ஆக வேண்டும்.என்று மது வலியுறுத்தினாள்.
மது, ஸ்ருதி என் கண்ணுக்கு மறைவாக இருந்தாலும் பரவாயில்லை.எப்படியாவது சமாளித்து இருந்து விடுவேன்.ஆனா பக்கத்தில் இருப்பா,அவளை தொடக்கூடாது.அதே நேரத்தில் அவளை தொடர்ந்து திட்டி கொண்டே இருக்க வேண்டும்.இது எனக்கு எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா?நான் முன்னாடி செஞ்ச பாவம் எல்லாம் ஒன்னு சேர்ந்து என்னை பழி வாங்க வந்து இருக்கு.சரி மது, ஸ்ருதிக்காக இதை செய்யறேன்.ஆனா அவ முகத்தை பார்த்தாலே என்னால் அவகிட்ட கோபம் கூட பட முடியல.நான் என்ன பண்ணட்டும்?
அப்படின்னா ,அவ முகத்தை பார்த்து பேசாதே.வேறுபக்கம் திரும்பி பேசு.எதையாவது ஒரு காரணம் சொல்லி அவளை பார்ப்பதை தவிர்க்க பாரு.
சரி மது,நான் எவ்வளவு தூரம் அவகிட்ட இருந்து விலகி இருக்க முடியுமோ,அவ்வளவு தூரம் விலகி இருக்க முயற்சி பண்றேன்.
That's good.நீங்க ரெண்டு பேரும் அனிதா வரும் வரை ஒன்று சேராமல் இருந்து விட்டால் போதும்.அதற்கு அப்புறம் பிரச்சினை கிடையாது.அனிதா வந்து எந்த முடிவு எடுத்தாலும் நாம இந்த பிரச்சினையை எளிதாக கையாண்டு விடலாம்.ஒருவேளை நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால்?
ஒன்று சேர்ந்து விட்டால் என்ன ஆகும் மது?ஷெட்டி கேட்க
ஸ்ருதி இல்லை அனிதா யாராவது ஒருவரில் நாம் கண்டிப்பாக இழக்க நேரிடும்,என்று மது கூற ஷெட்டி அதிர்ச்சியானான்.
ஸ்ருதி நெருங்கி வர,ஷெட்டி விலகி போக இருவர்க்குள் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ போகிறது.ஸ்ருதி அருகில் இருந்தும் தொட முடியாமல் தவிக்க போகும் ஷெட்டி,ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி ஸ்ருதியை தொட போகிறான்.அது எப்படி? வரும் பகுதிகளில்