05-06-2023, 07:07 PM
(05-06-2023, 02:44 PM)Gumshot Wrote: நண்பா தயவு செஞ்சு இனிமே இந்த கதையை படிக்க வரவேண்டாம் .
நீங்கள் எதிர்பார்க்கும் விதம் கதை நகராது அது உங்களால் தாங்கிக்க முடியாது என்று நினைக்கிறேன் இது
என் வேண்டுகோளாக ஏத்து இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் .
உங்களை போல இந்த கதைக்கு ஒரு ரசிகன் கிடைப்பதும் அரிதே இருந்தாலும் உங்கள் வாழ்க்கை தாம் முதலில் .
தங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி கம்ஷாட்.... எப்போதுமே எதிர்பார்ப்பது எல்லாம் எல்லா காலத்திலும் நடக்காது என்று எனக்கு நன்றாக தெரியும்... என்னால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்ட ஆசைகள், குறிக்கோள்கள், கொள்கைகள், கனவுகள், இலட்சியம், என்று நிறைவேறாத எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைய, நிறைய இருக்கின்றன...
மரம் சற்றே ஓய்வை நாடினாலும், காற்று அதனை சும்மா விடாது என்று எனக்கு தெரியும்... "மாற்றம்"என்ற சொல்லை தவிர மற்ற அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதும் எனக்கு தெரியும்...
மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாட்டை உடைத்து எறிந்து விட்டு, இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் போன்ற மத நம்பிக்கை மற்றும் குல வேறுபாடுகளை களைந்து விட்டு, ஏழைகள், பணக்காரர்கள் என்ற தகுதி தராதர வேறுபாட்டை துடைத்து எறிந்து விட்டு, இவை அனைத்துக்கும் மூல காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கை என்ற அடிப்படை அஸ்திவாரத்தை தகர்த்து எறிந்து விட்டு, உரிமைக் குரல் எழுப்புவோரின் குரல்வளையை நெறித்து, அடக்குமுறையை கையில் எடுக்கும் சர்வதேச ஏகாதிபத்தியத்தை நசுக்கி எறிந்து விட்டு, பலம் குறைந்த மக்கள் மீது ஒடுக்குமுறை கையாளும் மனித மிருகங்களை வேட்டையாடி வெற்றி பெற்ற பிறகு, ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்ற பேதமின்றி, நாங்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே குலம், ஒரே குடும்பம் என்ற நெறிமுறையை வரையறுக்க விரும்பினேன்... நடக்கவில்லை.
சாதி, மதம், பாலினம், தேசிய இனம், மாநிலம், தேசியம் போன்ற எல்லைகளை அழித்து விட்டு, "இந்த பூமியின் குடிமகன் நான்..." என்று குரலை உயர்த்தி, ஓங்கி.. ஓங்கி முழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்... நடக்கவில்லை.
எதிர்காலத்தில் இந்தியாவில் பிறப்பிலும், பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத அளவுக்கு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்... நடக்கவில்லை.
அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் இந்தியாவின் தேசியக் கொள்கையாக "சோஷலிசம்" வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன்... நடக்கவில்லை....
ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு தாயகம் இருக்க வேண்டும்... அது தாய்த்தமிழ்நாடு அல்லது தனி ஈழம் என்று எதிர்பார்த்தேன்... அதுவும் நடக்கவில்லை....
என் குடும்பத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்.. அதற்காக இன்னும் சில வருடங்கள் வரை நான் வாழ வேண்டும் என்று இப்போது ஆசைப்படுகிறேன்... நடக்கவில்லை...
இந்த மாதிரி எல்லாம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் பொய்யாகி, புஸ்ஸென்று போய் விட்டதால், "ஏமாற்றம்" என்ற ஒன்றை மட்டும் தான் இப்போது எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
அதனால் நீங்கள் உருவாக்கிய கற்பனை கதையை எப்படி வேண்டுமானாலும் உங்கள் சொந்த விருப்பப் படி எழுதலாம்...
ஆனால் ஒரு சில கேடிகள் விருப்பங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக பலூனில் அளவுக்கு அதிகமாக காற்றை அடைக்க வேண்டாம்... அழுத்தம் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி விடலாம்... நன்றி நண்பரே.