24-05-2023, 09:19 PM
(24-05-2023, 08:42 PM)Fun_Lover_007 Wrote: இரண்டு விஷயங்களுக்காக கதாசிரியரைப் பாராட்ட விரும்புகிறேன்.
1. விரைவாக அடுத்தடுத்த பதிவுகளைத் தருவது.
2. பல ட்விஷ்ட்களுடன் த்ரில்லிங்காக கதையைக் கொண்டு செல்வது.
மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி கதையில் எதுவும் இல்லை. எதார்த்தம் என்பது துளியும் இல்லை. லாஜிக்கும் இல்லை.
காதலின் ஆழம் என்று தலைப்பை வைத்துவிட்டு காதல் என்ற உன்னதமான விஷயத்தை கொச்சைப்படுத்தி விட்டீர்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
டிஸ்கரேஜ் செய்வதாக எண்ண வேண்டாம். என்னுடைய கருத்து உங்கள் அடுத்த கதையை சிறந்த முறையில் எழுத சிறிதளவாவது உதவும் என்ற நம்பிக்கையில் தான் எனது கருத்தைப் பதிவு செய்துள்ளேன்.
ரொம்ப நன்றி உங்களோட விமர்சனத்துக்கு..
இது ஒரு உண்மை கதை..
புனையபட்டு கதை சுவாரஸ்யத்திற்க்காக சில கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது..
கதையில் காதல் சமந்தமான காட்சி வரும் போது அறிவியல் பூர்வமான சில வார்த்தைகளை பதிவிட்டு தான் கதை யை மேலும் எடுத்து செல்கிறேன்..
காதல் புனிதமானது என்ற வட்டத்துகுள் அடைக்கும் போது அறிவியல் அங்கு செயல் இழந்து விடுகிறது.. அன்றாட வாழ்க்கையில் நாம் கேள்வி படும் கள்ள காதல்கள் எல்லாம் இந்த வேதியியல் மாற்றத்தால் நிகழ்பவையே..
Oxytocin ங்கிற ஒரு ஹார்மூன் அதிகமாக சுரக்கும் மனிதனுக்கு காதல் புனிதம் ங்கிறத தாண்டி அது அவனுடைய தேவையாகவே வருகிறது ஒரு உணவு போல்...!
மற்றபடி உங்கள் விமர்சனத்தை ஏற்று கொள்கிறேன்..