05-06-2019, 10:15 AM
பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏக கோபம். அவரே மைக் முன்னால் வந்து 'இன்று இரண்டாவது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான். ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை' என்று கூறி எஸ்.பி.பி. க்கு முதல் பரிசையும் அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கி தந்தார்.
திரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் எஸ். பி. பி. பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ். பி. பி.
இன்றும் அந்தப் பாடகியின் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறார். சண்டை போட்டு எஸ். பி. பி.க்கு பரிசு வாங்கிக் கொடுத்த அந்தப் பாடகி யார் தெரியுமா?
பாலுவின் திறைமைக்காக போராடி முதல் பரிசை வாங்கி தந்த அந்த பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி தான். அன்றிலிருந்து இன்றுவரை சகோதரி திருமதி எஸ். ஜானகியை பெரிதும் மதித்து வருகிறார் பாலு.
எஸ்.பி.பி.க்காக காத்திருந்த எம்ஜிஆர் - ஆயிரம் நிலவே வா ரகசியம்
உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும்.
உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்கு படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் 'இயற்கையென்னும் இளைய கன்னி' என்ற டூயட்.
இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு.
அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் 'ஆயிரம் நிலவே வா' என்று 'அடிமைப் பெண்'ணில் ஒலித்த பாடல்தான்.
'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல காய்ச்சலில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார்.
பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கை ரத்து செய்துவிட்டார்.
இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை.
தன்னைப்போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.
பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் 'தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது' என்று கூறி வழியனுப்பினார்.
எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

- எஸ்.பி.பி பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற காதல் மனைவி. பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
- பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி', `காதலன்' இரண்டும் நினைவில் நிற்பவை.
- `ஏக் துஜே கேலியே' படத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இவர்தான். எல்லா பாடகர்களையும் விட எஸ்.பி.பி-யின் வாழ்நாள் சாதனை இது.
- இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள். இடையில் இருவருக்கும் மனதாங்கல் வந்து நீங்கியிருந்தாலும், இப்பொழுதும் இருவரும் `வாடா, போடா' எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்.
- இதுவரை 45,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்.
- மூச்சுவிடாமல், `கேளடி கண்மணி'யில் `மண்ணில் இந்தக் காதல்' `அமர்க்களம்' பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிக பெரிதாக பேச பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பி கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்.
- எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரபியும் ஜேசுதாசும். முகமது ரபியின் பாடல்களை விரும்பி கேட்பார். டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்.
- பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா... ராஜாதான்' என்கிறவர்.
- `மழை' படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்து வைத்து. பாடி வெளியேறியது வரையில் மொத்த பாடலும் 12 நிமிடகளில் முடிந்துவிட்டது.
- கிரிக்கெட் விளையாட்டின் வெறியர். எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசு அளித்திருக்கிறார்.
- `துடிக்கும் கரங்கள்' படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்.
- பிறந்த தினம் ஜூன் 4, 1946. இப்போது 73 வயதாகிறது. இன்றும் பிசியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.
- `முதல் மரியாதை' படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.
- ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை. `எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு' என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்.
- எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு.
- தெலுங்குப் படங்களில் நிறைய `ராப்' பாடல்கள் எழுதியவர். `கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு' என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!
- கடந்த 30 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்.