05-06-2019, 10:12 AM
இளையராஜா பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை
இசையமைப்பாளர் இளையராஜா, 76, அனுமதியின்றி, அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில், இளையராஜா தாக்கல் செய்த மனுவில், என் இசையமைப்பில் உருவான பாடல்களை, அனுமதியின்றி, எக்கோ மியூசிக், கிரி டிரேடர்ஸ், அகி உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. நான் இசையமைத்த பாடல்களுக்கான உரிமை, எனக்கு உள்ளது. அந்த பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜாவின் அனுமதியின்றி, அவர் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ஒலிப்பதிவு நிறுவனங்களுக்கு, இடைக்கால தடை விதித்தது. தடையை நீக்கக்கோரி, அந்நிறுவனங்கள் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அவர், உத்தரவிட்டதாவது: ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை உறுதி செய்யப்படுகிறது. இளையராஜா இசையமைத்த பாடல்களை, தியேட்டர்கள் தவிர, வேறு எங்கும் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, ஆன்லைன் மற்றும் ரேடியோ நிறுவனங்கள், இசை போட்டிகள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், முறையான அனுமதி பெற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்
![[Image: NTLRG_20190605073554954457.jpg]](https://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20190605073554954457.jpg)