Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
சிவகார்த்திகேயன் சொன்ன திருத்தம்
[Image: NTLRG_20190604122307275154.jpg]

மிஸ்டர் லோக்கல் படத்தின் படு தோல்வி சிவகார்த்திகேயனை ரொம்ப அப்செட்டாக்கி உள்ளது. இதை நேற்று தனது தயாரிப்பில் உருவாகி உள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியபோது தென்பட்டது. 


இது ஒரு பக்கம் இருக்க, மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்விக்குப் பிறகு எப்படிப்பட்ட படத்தில் நடிப்பது என்ற பயம் அவருக்கு வந்துள்ளது. அதனாலோ என்னவோ, 'இரும்புத்திரை'படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ'படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்று முடிந்தநிலையில் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருக்கிறாராம்.

ஆர்.டி.ராஜா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இப்படத்தை தற்போது நயன்தாராவின் மானேஜர் ராஜேஷ் அண்டர்டேக் பண்ணிவிட்டார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தான் திரைக்கதையில் மாற்றங்களை செய்யச் சொல்லி இருக்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் சொன்ன திருத்தங்களை செய்வதாக உறுதி அளித்துள்ளாராம் இயக்குநர் மித்ரன்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாக நடிக்க இன்னொரு கதாநாயகியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடிக்கிறார்
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 05-06-2019, 10:07 AM



Users browsing this thread: 2 Guest(s)