05-06-2019, 09:58 AM
ரிவர்ஸ் ஸ்விங்குக்காக வேண்டுமென்றே தரையில் அடித்து த்ரோ: பாக், இங்கிலாந்து வீரர்களுக்கு நடுவர் எச்சரிக்கை
நாட்டிங்காமில் நடைபெற்ற பாகிஸ்தான் - இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டியில் இரு அணி வீரர்களும் வேண்டுமென்றே பந்தைச் சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக நடுவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ், சுந்தரம் ரவி ஆகியோர் பாகிஸ்தான் கெப்டன் சர்பராசிடமும் இங்கிலாந்து கேப்டன் மோர்கனிடமும் திங்களன்று இது தொடர்பாக பேசினர். அதாவது பந்தை ஒரு பக்கம் கொஞ்சம் தேய்த்து விட்டால் ரிவர்ஸ் ஸ்விங் எடுக்கும் என்று இரு அணி வீரர்களும் அனாவசியமாக வேண்டுமென்றே பந்தை த்ரோ செய்யும் போது தரையில் அடித்து த்ரோ செய்ததாக நடுவர்கள் மோர்கனையும் சர்பராஸ் அகமதுவையும் எச்சரித்தனர்.
இது தொடர்பாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும்போது, “இரண்டு இன்னிங்ஸ் முழுதும் இது குறித்த விவாதங்கள் இருந்தன. நடுவர் நடு இன்னிங்சில் என்னிடம் வந்தனர், பந்தை ஒரு பவுன்ஸ் செய்து வேண்டுமென்றே அடிக்கடி த்ரோ செய்வது போல் தெரிகிறது என்றனர், ஆனால் மிகுதியாகக் குறை கூறுவது போல் தெரிகிறது, ஆனால் எனக்கு புரியவில்லை” என்றார்.
103 ரன்களில் அவுட் ஆன போது ஜோஸ் பட்லர் பந்தை வாங்கி சரிபார்த்ததும் நடந்தது.
“இரு அணிகளுக்கும் தான் எச்சரிக்கை என்றனர் நடுவர்கள், ஆனால் அந்தச் சமயத்தில் எங்களிடம் தெரிவித்தது போல்தான் தெரிந்தது. ஆனால் பாகிஸ்தானும் இதே உத்தியை கடைபிடிப்பதாக ஆட்டம் கொஞ்சம் தடைபட்டது. ஜோஸ் பட்லர் பந்தை பார்க்க வேண்டும் என்று கருதினார். பந்து எல்.இ.டி. விளம்பர போர்டுகளின் மீது பட்டு திரும்புகிறது ஆகவே பந்தின் ஒரு புறம் எப்படி இருக்கிறது என்பதை பட்லர் சரிபார்த்தார்” என்றார் மோர்கன்.
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் மொகமது ஹபீஸும், “எங்களையும் எச்சரித்தனர், அது அவர்கள் வெலை, ஓரிருமுறை த்ரோ ஒரு பவுன்சில் வரவில்லை ஆனால் 2-3 பவுன்ஸ்களில் த்ரோ செய்யப்பட்டது. 20 ஓவர்கள் முடிந்த பிறகு இரண்டு பவுன்ஸ் த்ரோ செய்தால் தண்டனை உண்டு என்று நடுவர்கள் எச்சரித்தனர். அதனால்தன நான் ஓடிப்போய் பவுலரிடமே பந்தைக் கொடுத்தேன். நடுவர்கள் எச்சரித்தது சரிதான்.
இங்கிலாந்தின் ஜோ ரூட் இது பற்றி, “நான் இதில் ஈடுபடப் போவதில்லை, நான் என்னையே பிரச்சினைக்குள்ளாக்கிக் கொள்வதில்தான் இது போய் முடியும்” என்று ஒதுங்கிக் கொண்டார்.