05-06-2019, 09:52 AM
கிரிராஜ் சிங் சர்ச்சை ட்வீட்: இனி இது போன்று வேண்டாம்- அமித் ஷா கண்டிப்பு
உள்துறை அமைச்சர் அமித் ஷா. | ஏ.எப்.பி.
நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இப்தார் விருந்தை எதிர்த்து கிண்டல் செய்யுமாறு பாஜகவின் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய விதத்தில் ட்வீட் செய்ய அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது இனி இது போன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று கிரிராஜ் சிங்கை அழைத்து அமித் ஷா எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்தார் விருந்தில் சிரித்த முகத்துடன் காணப்பட்ட நிதிஷ் குமார், சுஷில் மோடி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் அடங்கிய போட்டோவை வெளியிட்டு கிரிராஜ் சிங் ட்வீட் செய்த போது, “இதே நவராத்திரி திருவிழாவில் ஒரு உணவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படமாக இது இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நாம் ஏன் நம் நம்பிக்கையை மறைத்துக் கொள்ள வேண்டும். ஏன் இந்தப் பாசாங்கு?” என்ற தொனியில் இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், “கிரிராஜ் சிங் இப்படிப்பட்ட கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவார், நீங்களும் செய்தியாக்கலாம்” என்றார் கடுப்புடன்.
கிரிராஜ் சிங் பூமிஹார் சமூகப்பிரிவைச் சேர்ந்த சக்தி வாய்ந்த பின்னணி கொண்டவர் இதே சாதியைச் சேர்ந்த இடதுசாரி வேட்பாளர் கன்னையா குமாரை கிரிராஜ் சிங் பெகுசராய் தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
பாஜக விமர்சகர்களை ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று கூறுபவர் கிரிராஜ் சிங் என்று விமர்சனங்கள் அவர் மீது எழுந்ததுண்டு.
இந்நிலையில் அமித் ஷா, கிரிராஜ் சிங்கை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.