Romance பத்மினி எனும் பத்தினி
#7
அடுத்த பகுதி.... பேருந்து ஊரின் பேருந்து நிறுத்தில் நிற்பதற்கும் நடராஜன் பின்னால் வந்து வண்டியில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது பேருந்தில் இருந்து இறங்கிய சத்யா என்ன அக்கா புருசா நீயேல்லாம் எதுக்கு வண்டி வைச்சிருக்க ஒரு பஸ்ஸை முந்த கூட தெரியல ஹையோ ஹையோ என நக்கலாக பேச நடராஜனோ அடேய் அரைவேக்காட்டு தலையா நான் பஸ்ஸை முந்துக்கிட்டு போய் என்ன ஆணியா புடுங்க போறேன் என்னோட ஆளை சைட்டடிச்சிக்கிட்டு வந்தேன்டா நம்மளைன்னா உங்க்காளை கேளுடா அரைவேக்காட்டு தலையா என்று சொல்ல அவன் திரும்பி சித்ராவை முறைத்தான் சித்ராவோ அவனை கண்டு கொள்ளாமல் பத்மினியுடன் நடக்க தொடங்கினால் கோபத்துடன் வீட்டுக்கு வந்த சத்யா தன் தாயிடம் சென்று அக்கா பண்ணுறது சரியில்லை அவளை அடக்கி வை எல்லை மீறி பிற என கத்தி சொன்னான் அவனது தாயோ என்னடா பிள்ளைபூச்சி இந்த கத்து கத்துற அவ என்னா பரதேசி பயகூடவா சுத்துறா நம்ம முதலாளி பையன் நம்ம வாத்தியார் கூட தானே சுத்துறா போடா போடா என்று அவனது தாய் அவனை நக்கலடிக்க அவனோ வேண்டா வெறுப்பாக பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெளியே வரவும் சித்ரா உள்ளே வரவும் சரியாய் இருந்தது அவளை பார்த்து வந்துட்டா ஜமீந்தார் மருமக உன் மகள்ள நீயே மெச்சிக்கோ தாய்கிழவி என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் சத்யா.


மறுபுறம் பத்மினி வீடு வந்து சேர்ந்துவிட்டு தனது துணி அம்மா கஸ்தூரி துணி சமைத்த பாத்திரம் என அனைத்தையும் சுத்தம் செய்து குளித்திவிட்டு வீட்டிலுள்ள டிவியில் சீரியல் பார்க்க அமர்ந்தால் அப்போது தாய் கஸ்தூரி வேலை முடிந்து வீடு வர இருவரும் சமைத்து சாப்பிட்டபடி தூங்க செல்லும்போது.


கஸ்தூரி பத்மினியை பார்த்து இந்த வருடத்தோடு உனக்கு வரன் பார்த்து திருமணம் செய்யலாம்னு இருக்கேன்மா நம்ம முகுந்தன் சார் கிட்ட சொல்லி இருக்கும் மா அவர் நல்ல பையன் கிடைச்சா சொல்றேன்னு சொல்லி இருக்கார்மா என்று சொல்ல பத்மினியோ அம்மா எனக்கு ஒரு யோசனை சொன்னா கோபிச்சக்க கூடாது என்று கேட்க சொல்லும்மா யாரையாவது விரும்புறியா என்று கேட்க பத்மினியோ ச்சை அதில்லம்மா நான் யாரையும் விரும்பல எனக்கு ஒரு யோசனை அதான் கேட்கிறேன் என்று ஒரு பொடி வைத்து கேட்டால் பத்மினி சொல்லும்மா என்ன விஷயம்னு கஸ்தூரி கேட்க பத்மினி பேச தொடங்கினால்


நீயும் அப்பாவும் காதல் கல்யாணம் பண்ணிங்க நம்ம மாமா வேலுயுதாத்திற்கு பிடிக்கல உங்களை வீட்டைவிட்டு அனுப்பிட்டாரு ஆனா நான் பிறந்த சில வருடத்திலயே அப்பா இறந்திட்டாரு நீயோ படிச்சதை வைச்சி (VAO) வேலைக்கு போய்ட்டே ஆனா அந்த வருமானத்தை வைச்சி 3 வேளை சோறு தான் சாப்பிடுறோம் நீ கிம்பளமும் வாங்க மாட்டேங்குற அதனால் என்னோட படிப்பு செலவு எல்லாத்தையும் யாருன்னே தெரியாத ஒருத்தர் மாதம் மாதம் மணியார்டர் அனுப்புறாரு நீயோ வாங்குன சம்பளத்தை வைச்சி சாப்பாட்டுக்கும் வீட்டுவாடகை கரண்ட் பில் மருத்துவ செலவுன்னு பண்ணி செலவாகிடுது.


எனக்குன்னு நீ எதுவும் சேர்த்து வைக்கல மாமாகிட்டயும் போய் சொத்து வேணும்னு உனக்கு கேட்க தோனல பிறகு எப்படி எனக்கு கல்யாணம் இந்த காலத்தில் யார் வரதட்சனை இல்லாமல் கட்டிக்க சம்மதிப்பாங்க என்று தனது சந்தேகத்தை உடைத்து கூறினால் இதை கேட்ட கஸ்தூரியோ அமைதியாக பதில் கொடுக்க துவங்கினால்.


போன வாரம் மணியார்டர் வந்துச்சே நீ வாங்குனியா நான் வாங்கினேனா என்று கேட்க பத்மினியோ நான் என்ன கேட்குறேன் நீ என்ன பேசுற லூசு அம்மா என்று கோபத்தோடு கத்த ஏய் கழுதை இப்போ எதுக்குடி கத்துற கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு என கேட்க நீ தான் வாங்குன என்று முனுமுனத்தபடி பதில் சொன்னால் பத்மினி.


அப்போ போய் பீரோல இருந்து அந்த மணியார்டரை எடுத்துகிட்டு வா என சொல்ல இவளோ என்னாச்சு இந்த அம்மாக்கு என மூஞ்சை தூக்கி கொண்டு போனால் பத்மினி பீரோவை திறந்து மணியார்டர் கவரை பார்த்து எடுத்து கொண்டு வரும்போதே பிரித்து பார்த்தால் பத்மினி அதில் ஒரு கடிதம் இருந்தது அதில் 4000₹ பணமும் அந்த கடிதத்தில் செல்வி பத்மினியின் திருமண செலவுகள் அத்தனையையும் நானே பார்த்து கொள்கிறேன் மேடம் தாங்கள் நல்ல மாப்பிள்ளை மட்டும் பார்க்கவும் செலவுகளை பற்றி கவலை வேண்டாம் அது 100 சவரன் நகையாக இருந்தாலும் நான் அனுப்பி வைக்கிறேன் இப்படிக்கு தங்கள் வாழ்வு சிறக்க உழைக்கும் ஒரு மானிடன் என்று எழுதி இருந்தது.


இதை படித்த பத்மினி தாயை பார்த்து யார் இந்த மனிதன் நமக்காக இப்படி நல்லது செய்கிறார் சொல்லும்மா என்று கேட்க...


கதை தொடரும்
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply


Messages In This Thread
RE: பத்மினி எனும் பத்தினி - by Natarajan Rajangam - 20-05-2023, 10:39 AM



Users browsing this thread: 6 Guest(s)