மான்சி கதைகள் by sathiyan
சோகமாய் புன்னகைத்த பத்ரி.... "தேவி போனப்பிறகு விதி ரொம்பவே விளையாடிருச்சு சார்" என்றார்

ஆறுதலாக அவர் கையைப் பற்றிக் கொண்டு "என்னண்ணா ஆச்சு?" என்று அன்புடன் கேட்டாள் சந்திரா....

அவர்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்தவர் "தேவி இறந்த அடுத்த வருஷமே என் அப்பா அம்மா சொந்தக்காரங்க பெண்ணை எனக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வச்சிட்டாங்க அதனால திசைமாறிய என் வாழ்க்கையை இந்த நிமிஷம் வரை என்னால சரி பண்ணவே முடியலைம்மா" வருத்தமாகக் கூறியவர் எழுந்து கொண்டு "நைட் ட்ரைன்லயே கிளம்பனும்... சொந்த ஊர் போய்ட்டு அங்கிருந்து ஆக்ரா போகனும்" என்றவர் தனது பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டார்...

தம்பதிகள் இருவருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை... அருணகிரி ஆறுதலாக அவர் தோளில் தட்டி "எல்லாம் சரியாகும் பத்ரி... கவலைப்படாதீங்க" என்றார்...

"அண்ணா,, சிமி எப்படியிருக்கா?" என்று ஆர்வமாக சந்திரா கேட்க... ஒரு விரக்தி பெருமூச்சுடன் "ம் நல்லாருக்காம்மா" என்றார் பத்ரி....

சட்டென்று ஏதோ யோசனைத் தோன்ற "இத்தனை நாளாதான் நீங்க இருக்கிற இடம் தெரியலை... இப்போ தான் செல்போன் வசதியெல்லாம் இருக்கேண்ணா? உங்க வீட்டு நம்பர் குடுங்கண்ணா... சமயம் கிடைக்கும் கால் பண்றேன்" என்று சந்திரா கேட்டதும் "ஆமாம் பத்ரி... வீட்டு நம்பர் குடுங்க" அருணகிரியும் கேட்டார்....

"ம் இதோ தர்றேன்" என்றவர் பாக்கெட்டிலிருந்து ஒரு சீட்டெடுத்து அதில் தனது வீட்டு நம்பரை எழுதி அருணகிரியிடம் கொடுத்து விட்டு "நான் கிளம்புறேன் சார்" என்றுவிட்டு தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றார்....

பத்ரியின் பேச்சிலேயே அவர் மிகவும் அமைதியான சுபாவம் உடையவர் என்று அனைவருக்கும் தெரியும்,, வந்திருக்கும் மகராசி எப்படிப் பட்டவளோ தெரியவில்லையே?? தம்பதிகளின் நினைப்பு ஒரே மாதிரியாக இருந்தது....

மனிதனுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழ்வு என்னாகும் என்பதை எடுத்துக் கூறுவது போல் இருந்தது அவரின் சோகம் சுமந்த முகம்...

கலங்கிய கண்களுடன் நின்றிருந்த மனைவியை அணைத்தபடி அமைதியாக காருக்கு வந்தார் அருணகிரி....

வரும் வழியெங்கும் சந்திராவின் முகத்தில் சிந்தனையின் கோடுகள்.... எதையோ யோசித்தபடியே வந்த மனைவியை அருணகிரியும் தொந்தரவு செய்யவில்லை.....

இந்த இருபது வருடத்தில் அருணகிரியின் உழைப்பால் சொத்துக்கள் பலமடங்கு பெருகியிருந்தது.... கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஸ்டீல் தொழிர்சாலைக்கு உரிமையாளராகியிருந்தார்..... பெங்களூரின் புறநகர் பகுதியில் அமைதியான ஒரு இடத்தில் சொர்க்கபுரி போன்ற பங்களா ஒன்று.... சிட்டிக்குள் இன்னும் சில சொத்துக்கள்...

இவை அத்தனைக்கும் ஒரே வாரிசான அவர்களின் மகன் சின்னு,, பெங்களுரூவில் நான்கு வருட மெக்கானிக்கல் படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பிற்காக சென்ற மாதம் தான் கலிபோர்னியா சென்றிருந்தான்....

வீடுக்கு வந்ததும் கூட மனைவியிடம் அதே அமைதி நீடிக்க "என்னம்மா ஒரே யோசனையா இருக்க" என்று அருணகிரி கேட்டதும்....

அவரை ஏறிட்ட சந்திரா "நான் எதைப் பத்தி யோசிக்கிறேன்னு உங்களுக்குத் தெரியலையாங்க?" என்று திருப்பிக் கேட்டாள்

மெல்லிய சிரிப்புடன் "எனக்கும் தெரியும் தான்... அதையே உன் வாயால சொல்லக் கேட்கனும்னு ஆசைதான் சந்திரா.... ம் சொல்லு உன் யோசனை என்னம்மா?" என்று அன்புடன் கேட்டார்....

அவரின் கைப்பற்றி பூஜையறைக்கு அழைத்துச் சென்ற சந்திரா அங்கே தேவி என்று எழுதப்பட்டிருந்த எழுத்தால் ஆன படத்தைக் காட்டி "தேவியோட மகள் சிமியை நம்ம சின்னுவுக்கு கேட்டு இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்துடலாமாங்க?" ஆர்வமே உருவாகக் கேட்டாள்....

அருணகிரியின் முகமும் மலர்ந்தது "நீ சொல்லி நான் எதையாவது தட்டியிருக்கேனா சந்திரா? ஒரு நல்லநாள் பார்த்து நாமே பத்ரி வீட்டுக்கு போன் செய்து கேட்டுக்கிட்டு அப்புறம் முறைப்படி நேரா அவங்க வீட்டுக்கேப் போகலாம்" என்று கூறியதும் சந்திராவுக்கும் அதுவே சரியென்று பட்டது........

அந்த நல்லநாள் அடுத்த இரண்டாவது நாளே என்று காலண்டர் சொல்ல மிகுந்த எதிர்பார்ப்புடன் தொலைபேசியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு பத்ரியின் வீட்டுக்கு கால் செய்தாள் சந்திரா....

நான்கு முறை மணியடித்தப் பிறகு எடுத்த ஒரு பெண்க் குரல் "யாருங்க?" என்று அதட்டலாக கேட்டது....



அது பத்ரியின் இரண்டாவது மனைவியாகக் கூட இருக்கலாம்.... ஆனால் அவள் எப்படிப்பட்டவள் என்ற ஆராய்ச்சியை விடுத்து எப்படியும் அவளுக்கும் தெரிந்து தானே ஆகவேண்டும் என்ற நோக்கில் தாங்கள் என்ன? என்ற விபரங்களை விளாவரியாகக் கூறினாள் சந்திரா....

கோடீஸ்வரன் வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு என்றதும் எதிர்முணையில் அதட்டிய குரலில் சட்டென்று ஒரு குலைவு "நான் கலா,, பத்ரியோட மனைவி" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவள் "பெரியவங்க என்ன விஷயமா போன் பண்ணீங்கன்னு சொன்னா அவர் வந்ததும் சொல்வேன்" என்று குலைவு குறையாத குரலில் கேட்டாள்....

எல்லோரையும் போல சந்திராவும் கலாவின் குலைவில் மயங்கி "அது வேற ஒன்னுமில்லைங்க அண்ணி,, நம்ம தேவி தான் என் மகன் உயிரை காப்பாத்திக் கொடுத்தது... அதே தேவியோட மகளே அவனுக்கு மனைவியா எங்களுக்கு மருமகளா வரனும்னு ஆசைப்படுறோம்.... அதுக்காகத்தான் கால் பண்ணோம்... நீங்க சம்மதம் சொன்னா ஒரு நல்லநாள் பார்த்து நேரில் வருவோம்...." என்ற சந்திரா தனது மகன் இப்போது மேல்ப்படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருப்பதையும் கூறினாள்....

எதிர் முனையில் பலத்த அமைதி....

"ஹலோ அண்ணி,, லைன்ல இருக்கீங்களா?" சந்திரா உரக்க கேட்க...

"ம்ம் இருக்கேன்" என்றவள் மீண்டும் குரலில் குலைவை கொண்டு வந்து "அய்யோ விதிப் பாருங்களேன்.... இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்றதுக்கு இந்த மான்சிக்கு கொடுத்து வைக்கலையே" என்று போலியான துயரத்துடன் அங்கலாய்த்தாள்....

"மான்சியா? யாரது?" என குழப்பமாக சந்திரா கேட்டதும்... "நீங்க சொன்னீங்களே சிமி,, அவ பேருதான் மான்சி... சிமி அவ அப்பா கூப்பிடுற செல்லப் பேருதான்...." என்று விளக்கம் கூறினாள்....

"சிமியோட நிஜப் பெயர் மான்சியாம்" என்று அருகில் இருந்த கணவருக்குச் சொன்னவள்... போனில் "அதுசரி,, ஏன் மான்சிக்கு ஏன் வாழ குடுத்துவைக்கலைனு சொன்னீங்க?" என்று அதே குழப்பத்தோடு சந்திரா கேட்க

"அது வந்துங்க" என்று நிமிடநேரம் தாமதித்து விட்டு "மான்சிக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க.... ஆறு மாசம் ஆகுது.... அதான் அப்படிச் சொன்னேன்" என்று சந்திராவின் தலையில் இடியை இறக்கியதும்......

போனை நழுவவிட்டு விட்டு கணவரின் தோளில் சாய்ந்து "தேவியோட மகளுக்கு கல்யாணம் ஆகிடுச்சாங்க" என்றாள் கண்ணீருடன்......

அந்த பக்கம் "ஹலோ ஹலோ" என்று கலா கத்தியதும் ரிசீவரை எடுத்த அருணகிரி "சரிம்மா,, நாங்க பிறகு பேசுறோம்" என்றார்

"சரிங்க,, ஆனா உங்க நம்பர் குடுங்க" என்று கவனமாக கேட்டு நம்பரை வாங்கிக் கொண்டு தான் போனை வைத்தாள் கலா...

ஆக்ராவில் ரயில்வே காலனியில் தனது வீட்டு வாசலில் அமர்ந்து கிழிந்து போன சுடிதார் பேன்ட்டை தையல் வெளியேத் தெரியாதவாறு நேக்காகத் தைத்துக் கொண்டிருந்த மான்சியின் காதுகளிலும் கலாவின் வார்த்தைகள் விழுந்தது....

அதிரவில்லை அவள்,, அமைதியாகத் திரும்பி வீட்டுக்குள் பார்த்தாள்....

ரிசீவரை வைத்துவிட்டு திரும்பி மான்சியைப் பார்த்தவள் "இங்கென்னடி பார்க்குற? பிரண்ட்டோட பிறந்தநாள் பார்ட்டிக்கு நாளைக்கு சாயங்காலம் போகனும்னு ரீத்து சொன்னா.... பார்ட்டிக்கு போடப் போற டிரஸை எடுத்து கட்டில்ல வச்சிருக்காலாம்... போய் அதையெல்லாம் அயர்ன் பண்ணி வை போ போ" என்று மிரட்டலா.. அதட்டலா என்று தெரியாத குரலில் கூறியதும்.... சரியென்று தலையை மட்டும் அசைத்துவிட்டு எழுந்து ரீத்துவின் படுக்கையறைக்குச் சென்றாள் மான்சி....

நாளை மாலை நடக்கவிருக்கும் ஒற்றைப் பார்ட்டிக்கு பத்து விதமான உடைகளை எடுத்து கட்டிலின் மீது வைக்கப்பட்டிருந்தது..... இதில் எந்த உடை அயர்ன் செய்ய வேண்டும் என்று கேட்க முடியாது... கேட்கவும் கூடாது...... அந்த நேரத்தில் எதுப் பிடிக்கிதோ அதைப் போட்டுக்கொண்டு போவாள்... மற்றவை உதறி எறியப்பட்டு மீண்டும் அயர்ன் செய்ய மான்சியிடமே வரும்....

அமைதியாக அயர்ன் செய்ய ஆரம்பித்தவளின் கழுத்தில் அன்று தேவியின் இறப்பை சாட்சியாக வைத்து சின்னு இவளுக்கு அணிவித்த டாலர் செயின் மட்டும் தான் இருந்தது.......




“ விதியை நொந்து!

“ விடை தேடியலையும்!

“ பெண்ணல்ல நான்!

“ என் தேடல் எதுவென்று புரியாமல்....

“ விண்ணெங்கும் உனைத் தேடி,

“ கலைந்து செல்லும் மேகத்தில் எல்லாம்..

“ உன் முகம் காண முயன்று!

“ எங்கு தேடியும் கிடைக்கவில்லை தான்!

“ ஆனாலும் மீண்டும், மீண்டும்..

“ உயிர்த்தெழுகிறேன், என்றாவது...

“ உனைக் கண்டுவிடுவேன் என்று!
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 04-06-2019, 10:28 AM



Users browsing this thread: 1 Guest(s)