மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 2
கொல்லம் மருத்துவமனை...... ரயில் விபத்தில் காயமுற்றவர்கள் கதறலோடு கோரமாக காட்சியளித்தது.... இறந்து போன உறவினர்களை எண்ணிக் கதறும் மக்கள் கூட்டம்.... தமிழ், கன்னடம், மலையாளம், என மூன்று மொழிகளில் புலம்பியழுதனர்...

அருணகிரி எலும்பு முறிவு பகுதியில் அனுமதிக்கப்பட்டு சிக்கயளிக்கக் கூட டாக்டர்கள் இன்றி பரிதாபமாக தரையில் கிடந்தார்.... மருத்துவமனை நிர்வாகத்தைக் குறை கூறி பிரயோசனம் இல்லை,, மொத்தமாக இவ்வளவு கூட்டம் வந்து குவிந்தால் அவர்களும் என்னதான் செய்வார்கள்? முதலில் உயிர் காயத்திற்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்தனர்....

கணவர் தன் கண்முன் வலியால் துடிப்பதை காண சகிக்காமல் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுத சந்திரமதி இப்படியே அழுதுகொண்டிருந்தால் சரியாக வராது என்ற முடிவுடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து எஸ் டி டி பூத் ஒன்றிலிருந்து தங்களது கம்பெனி மேனேஜருக்கு போன் செய்தாள்.......

ஏற்கனவே ரயில் விபத்தை டிவி செய்தியில் பார்த்து விட்டு என்ன செய்வது அவர்களை எப்படித் தொடர்பு கொள்வது? என்று பதட்டமாக இருந்த மேனேஜர் சந்திராவே போன் செய்ததும் "அம்மா,, என்னாச்சு? நீங்க சார் தம்பி எல்லாரும் நல்லாருக்கீங்களா?" என்று கேட்க...

சந்திரமதி கண்ணீருடன் நடந்தவற்றைக் கூறினாள்... இப்போது அருணகிரி இருக்கும் நிலைமையும் கூறி "பயங்கர வலியால துடிக்கிறார்... இங்கே இன்னும் எந்த டாக்டரும் காயம் என்னன்னு கூட பார்க்கலை... எனக்கு என்ன செய்றதுனு புரியலையே" என்று கதறியவளுக்கு ஆறுதல் கூற முடியாமல் எதிர் முனையில் தவித்த மேனேஜர் சட்டென்று ஒரு யோசனைத் தோன்ற......

"அம்மா,, நமக்கிட்ட மோட்டார் பார்ட்ஸ் வாங்குற ஒரு டீலர் கொல்லத்துல இருக்கார்.... அவருக்கு கால் பண்ணி பேசி அங்கே வரச்சொல்றேன்மா... ஏதாவது தனியார் ஆஸ்பிட்டல் போய் முதலுதவி மட்டும் பண்ணிக்கிட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமா சாரை பெங்களூர் கொண்டு வந்து இங்கே நமக்குத் தெரிஞ்ச ஆஸ்பிட்டல்ல சேர்த்து சரி பண்ணிடலாம்மா,, இந்த பூத்லயே கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கம்மா... நான் அவர்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்" என்று விளக்கமாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்..

நின்றிருந்த நிமிடங்கள் இரும்புக் குண்டுகள் போன்ற கனத்தோடு கடந்து செல்ல.... சந்திரமதியை அதிக கண்ணீர் விட வைக்காமல் பூத் நம்பருக்கு அழைத்த மேனேஜர் "அம்மா நீங்க உடனே ஆஸ்பிட்டல் வாசல்ல போய் நில்லுங்க.... இன்னும் கொஞ்ச நேரத்துல பிரைவேட் ஆம்புலன்ஸோட ஒருத்தர் வருவார்... அவர் பெயர் ஜோன்ஸ்.... நீங்க யாருன்னு மட்டும் சொல்லுங்க மத்ததை அவர் பார்த்துப்பார்" என்றவர் வரும் நபரின் அடையாளத்தையும் சொல்லிவிட்டு போனை வைத்ததும் சந்திரமதி மருத்துவமனை வாயிலுக்கு மகனுடன் ஓடினாள்.....

அடுத்த ஒருமணி நேரத்தில் அருணகிரி தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்..... வந்திருந்த நபரே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்.... சந்திரமதியும் ஆம்புலன்ஸில் ஏறியமர்ந்தாள்.... திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு "ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க,, இதோ வந்திடுறேன்" என்றவள் மகனைத் தூக்கிக் கொண்டு இறங்கி மார்ச்சுவரி இருக்கும் பக்கமாக ஓடினாள்....



உறவினரின் உடலை வாங்குவதற்காக குவிந்திருந்த ஏராளமானோருக்குள் பத்ரியைத் தேடினாள்.... ஒரு மூலையில் மகளை மார்போடு அணைத்தபடி நெற்றியில் கட்டோடு சாய்ந்து கிடந்தவரைக் கண்டதும் "அண்ணா”,, என்ற அழைப்புடன் அவரருகே சென்றாள்....

சந்திராவைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வர "என் தேவி........" என்றவர் மேற்கொண்டு பேசமுடியாமல் மார்ச்சுவரியை கைநீட்டி விட்டு முகத்தை மூடிக்கொண்டு குமுறினார்....

அவரெதிரே மண்டியிட்டு அமர்ந்த சந்திரா அவரின் கைகளைப் பற்றி "எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை அண்ணா..... ரெண்டு குழந்தைங்க உயிரை காப்பாத்தின தேவி எனக்குத் தெய்வமாத்தான் தெரியுறா.... ஆனா அவளை இழந்த உங்களுக்கு தான் வலியும் வேதனையும் இருக்கும்.... குழந்தைக்காக மனசைத் தேத்திக்கங்க அண்ணா" என்றவள் தன் கணவரின் நிலையைச் சொல்லி பெங்களூர் செல்வதாக கூறிவிட்டு "உங்களுக் கூட இருக்க முடியாததுக்கு மன்னிச்சிடுங்க அண்ணா" என்றாள் கண்ணீருடன்....

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சின்னு சந்திராவின் பிடியிலிருந்து நழுவி இறங்கிச் சென்று பத்ரியின் மடியிலிருந்த சிமியைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு கையிலிருந்த பிஸ்கேட்டை எடுத்து குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.... பசியில் கிடந்து அழுதுகொண்டிருந்த சிமி சின்னவன் கொடுத்த பிஸ்கேட்டை ஆசையாக வாங்கிக் கொண்டு அவன் கழுத்தைக் கட்டியபடி சிரித்தாள்....

இருவரையும் பார்த்து கண்ணீர் வந்தது சந்திராவுக்கு.... சட்டென்று ஏதோத் தோன்ற மகனைப் பார்த்து "சின்னும்மா,, உன் கழுத்தில் இருக்குற செயினை எடுத்து பாப்பாக்கு குடுத்துடலாமா?" என்று கேட்ட மறு விநாடி சரியென்று பெரிதா தலையசைத்த சின்னு தன் கழுத்தில் கிடந்த லாக்கெட் வைத்தச் செயினை எடுத்து சிமியின் கழுத்தில் போட்டுவிட்டு "பாப்பாக்கு தா இது.... வச்சுக்க பாப்பா" என்று கூறி சிமியின் கன்னத்தில் முத்தமிட.... குழந்தையும் பதிலுக்கு முத்தமிட்டாள்....

"இதெல்லாம் வேணாம்மா... நீங்க சாரை கவனிங்க போங்க" என்றபடி மகளின் கழுத்தில் சின்னு அணிவித்த செயினை கழட்ட முயன்றார்....

அவர் கைகளைப் பற்றித் தடுத்த சந்திரா "இல்லன்னா,, இந்த செயின் என் மகன் உயிரை காப்பிதினதுக்காக நான் கொடுத்த அன்பளிப்பு இல்லை.... என்றாவது ஒருநாள் உங்களைப் பார்க்கும் போது தேவியோட மகளை எனக்கு காட்டும் அடையாளச் சின்னம்" என்றவள் மகனிடமிருந்து சிமியை வாங்கி கண்ணீருடன் முத்தமிட்டு "இந்த வயசில் தாயைப் பிரியனும்னு உனக்கு விதியா கண்மணி" என்றாள்....

குழந்தையை பத்ரியிடம் கொடுத்துவிட்டு மகனை தூக்கிக் கொண்டு எழுந்தாள்.... சிமியை விட்டு வரமாட்டேன் என்று அழ ஆரம்பித்தான் சின்னு.... அவனை சமாதானம் செய்து அணைத்துக் கொண்டு "நான் போறேண்ணா" என்று கண்ணீருடன் கூறிவிட்டு ஆம்புலன்ஸ் நோக்கி ஓடினாள்.....

ஏகப்பட்ட அழுகுரலுக்கு நடுவே ஒருவரையொருவர் பிரிந்து செல்ல முடியாத அந்த குழந்தைகளின் அழு குரலும் தேய்ந்து மறைந்தது......

அருணகிரி சகல வசதியுடன் பெங்களூரின் பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்...... எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..... ரயில் விபத்து மனதை விட்டு அகலாமல் இருந்தாலும் தேவியின் தியாகமும் அவர்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றது.... அவர்களது வீட்டு பூஜையறையில் தேவி என்று எழுதப்பட்ட ஒரு படம் மாட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டது....

ரயில் விபத்துக்குப் பிறகு சந்திரமதிக்கு வியிற்றில் ஏற்பட்ட சிறுவலி நாளுக்கு நாள் அதிகமாக... பரிசோதனை செய்துப் பார்க்கப்பட்டது... விபத்தின் போது எதிலோ பலமாக மோதியதில் கருப்பையில் அடிபட்டிருப்பதாகவும்.. உடனடியாக அகற்றவேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட... கருப்பை அகற்றப்பட்டு சின்னு ஒரே மகன் தான் என்றாகிப் போனது.... தங்களின் வாரிசைக் காப்பாற்றிய தேவியே அவர்களின் குலதெய்வம் ஆகிப் போனாள்...

தேவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பத்ரிநாத்திடம் ஒப்படைக்கப்பட்டு அரசு ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தில் சொந்த ஊரான திருச்சிராப்பள்ளி மாவட்டம் நேசகுளம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சகல மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டாள்....

இறக்கும் தருவாயிலும் இரு குழந்தைகளை காப்பாற்றிய தேவியின் குணம் அறிந்து பத்ரியின் சொந்த கிராமமான நேசகுளம் பஞ்சாயத்து தேவியின் நினைவாக சிறு மணிமண்டபம் கட்டி ஊர் மக்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தது.....

மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த பத்ரிக்கு மகளே ஆறுதலானாள்.....

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு ரயில்வேயில் வேலை தருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது..... பத்ரி ஏற்கனவே ரயில்வே ஊழியராக இருந்ததால் அவருக்கு சரக்குப் பெட்டக அதிகாரியாக ப்ரமோஷன் கொடுத்து உத்திரப்பிரதேசம், ஆக்ராவுக்கு மாற்றல் செய்தது....

தேவியின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி,, தாய் மடிக்காக ஏங்கியழுத தனது ஒரு வயது மகளுடன் ஆக்ராவுக்கு கிளம்பினார் பத்ரிநாத்.....




" அறிவுக் கதைகள் ஆயிரம் கூறி..

" ஆத்திச் சூடி சொல்லி,

" ஆழம் விழுதில் ஊஞ்சல் கட்டி,

" உன் இடையில் எனைச் சுமந்து,

" நிலவைக் காட்டி சோறூட்டி....

" ஈடில்லா பாசம் காட்டிய.....!

" இணையில்லா உறவே......

" சொர்க்கத்தின் முகவரியாய் இன்றோ நீ...

" என் அம்மா!!

" இனி நீ இல்லாத நான்?

நடந்துவிட்ட விபத்துக்கான காரணம் பலரும் பலவிதமாக சொன்னார்கள்..... விபத்திற்கு காரணம் சூறாவளி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் உண்மைக் காரணம் அரசால் வெளியிடப்படவில்லை...!

விபத்தினை நேரில் பார்த்தவர்கள் மற்றும் கொல்லம் ஏரியா நியூஸ் ரிபோட்டர்.... ரயில் வழமையை விட அதி வேகத்தில் (90 kmph) சென்றதாகவும் ரயில் பாதையில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று பாதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும்.. அறிவிப்புப் பலகையினை செலுத்துனர் கவனிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்..!

பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தோருக்கு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகவே வரும் என்று அறிவிக்கப்பட்டதாகவும்... கிடைத்த தகவலை நம்பி கழற்றபப்ட்ட ரயில் தண்டவாளப் பாகங்களை மறுபடியும் இணைக்காது... வேலையை பாதியில் நிறுத்திவிட்டு இளைப்பாறிய நேரத்தில், ரயில் பாலத்தைக் கடந்ததாலேயே விபத்து நேரிட்டது என்றும் கூட சொல்லப்படுகிறது...

அன்று சூறாவளி அளவிற்கு பலமான மழையோ காற்றோ இருக்கவில்லை...! மழை மெதுவாகத் தான் தூறியது...! ஏரி நீர் மிகவும் ஆழமானது என்பதால் மழை நாட்களில் சற்று வேகமாகவே ஓடும்... விபத்து நடந்த அன்று ஏரி மிகவும் அமைதியாக இருந்தது..... என வன பாதுகாப்பில் இருந்து காப்பாற்றும் வேலையில் ஈடுபட்ட பணியாளர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்...

விசாரணையின் பின்னர் இந்திய ரயில்வேஸ் ஓட்டுனரை பதவி நீக்கம் செய்த தகவலும் வெளியாகியது...

பெருமான் ரயில் சம்பவம் கேரளா இந்திய மாநில வரலாற்றிலேயே மிக பெரிய ரயில் சோகங்களும் ஒன்றாகும்....

சில வாரங்களிலேயே இந்திய ரயில்வேயால் ஏரி முழுவதும் புதிய பாலமொன்று கட்டப்பட்டது... பழைய பெருமான் பாலம் நடந்த சம்பவத்தின் நினைவாக அப்படியே உள்ளது...

யாரோ ஒருவர்,, அல்லது பலரின் கவனக்குறைவால் நேர்ந்துவிட்ட உயிரிழப்புத்தான் எத்தனை எத்தனை??? 




" செய்யும் தொழிலே தெய்வம் என்று "

" கும்பிடுவதை விட.....

" எத்தொழில் செய்யின்... அத்தொழில்...

" தங்களின் உயிரென நினைத்தால்...

" மற்ற உயிர்களின் உன்னதம் புரியும்!!
[color][font]
2008, ஜூலை 8ம் தேதி...... கேரள அரசாங்கமும் ரயில்வே நிர்வாகமும் சேர்ந்து விபத்து நடந்த பெருமான் பாலத்தில் ஒரு அஞ்சலி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.... விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள்... பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் என எல்லோரும் கலந்து கொண்டனர்.....

பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க எல்லோரும் அஷ்டமுடி ஏரியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்... சிலர் ஏரியில் படகு மூலம் பயணம் செய்து நேரடியாக நீரில் மலர் தூவினர்......

அஞ்சலி செலுத்தியக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து செல்ல.... சந்திரா மட்டும் இன்னும் பாலத்தின் மீது நின்று கண்ணீருடன் ஏரியை நோக்கி கைகூப்பியபடி இருந்தாள்....

அருகில் நின்றிருந்த அருணகிரி மனைவியின் தோளில் கைவைத்து "வருத்தப்படாத சந்திரா,, நம்ம மகனை காப்பாத்திக் கொடுத்த தேவியே மறுபடியும் வந்து நம்ம வீட்டுல பிறக்கனும்னு வேண்டிக்கம்மா" என்றார் ஆதரவுடன்....

கலங்கிய கண்களுடன் அவரை நிமிர்ந்து நோக்கிய சந்திரா "அதைவிட வரம் வேற எதுவும் எனக்கு வேண்டாம்ங்க" என்றவள் சுற்றிலும் பார்வையை ஓட்டி "பத்ரி அண்ணா வந்திருப்பார்னு பார்த்தேன்.... ஆளையே காணோமேங்க?" என்று ஏமாற்றமாகக் கூறினாள்....

"ஒருவேளை படகுல கூட போய் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்... வா ஏரிகரையோரமா போய்ப் பார்க்கலாம்" என்றபடி மனைவியின் கையைப் பற்றி மெல்ல அழைத்துச் சென்றார்....

இந்த இருபது வருட சுழற்சி அருணகிரி தம்பதிகளுக்கு முதுமையை அதிகமாக தந்துவிடவில்லை.... விபத்தில் அடிபட்டதன் காரணமாக நடையில் சற்று வித்தியாசம்.... காதோரம் கத்தையாக நரைமுடிகள் அவ்வளவு தான் அருணகிரி.... சந்திராவிடம் சற்றே உப்பியிருந்த கன்னத்து சதைகளும்... பூசினார்ப் போன்ற உடல்வாகும் தான் மாற்றங்கள்.....

ஏரிக்கரையோரம் இருவரும் பார்த்தபடி நடந்து வர... அருணகிரியின் வார்த்தை பொய்யாகாமல் ஒரு படகிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார் பத்ரிநாத்...

அவரைக் கண்டுவிட்ட சந்தோஷத்தை விட அவரது தோற்றம் கொடுத்த அதிர்ச்சி தான் அதிகமாக இருந்தது... இந்த இருபது வருடம் அவருக்கு நாற்பது வருட மூப்பைக் கொடுத்திருந்தது.....

பஞ்சாக வெளுத்த தலைமுடியுடன் தட்டுத் தடுமாறி படகிலிருந்து இறங்கியவரை அருணகிரி சென்று கைக்கொடுத்து இறக்கி விட... இறங்கிய பின் நிமிர்ந்து பார்த்து அடையாளம் கண்டுகொண்ட பத்ரி "சார் நீங்களா?" என்றார் வியப்புடன்...

பத்ரியை விடமால் தோளோடு அணைத்துக் கூட்டி வர,, அவரது தோற்றம் கொடுத்த அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்த சந்திரா சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவர்களின் பின்னால் வந்தாள்....

ஒதுக்குப் புறமாய் போடப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.... "என்ன பத்ரி இப்படியிருக்கீங்க?" என்று அருணகிரி கேட்க...[/font][/color]
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 04-06-2019, 10:28 AM



Users browsing this thread: 1 Guest(s)