04-06-2019, 09:32 AM
இந்தி எதிர்ப்பு: ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்
புதுடில்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை வரைவிற்கு தமிழகத்தை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் 3வது மொழியாக இந்தி படிக்க வேண்டும் என தேசிய கல்வி கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. "இது இந்தியை திணிக்கும் முயற்சி அல்ல; மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வரைவு தொடர்பாக மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டு, ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும்" என மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களும் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்தி கட்டாயமாக்கபடாது என தேசிய கல்வி கொள்கை வரைவில் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனை ஏற்காத பல்வேறு மாநில எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, புதிய தேசிய கல்வி கொள்கை எங்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், இந்தியை திணிப்பதாகவும் உள்ளன. இந்தியை திணிப்பதற்கு பதில் பிராந்திய அடையாளத்தை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தலாம். நாங்கள் அனைவரும் கன்னடர்களாகவே இந்தியாவில் இருப்போம் என டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவும் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரளாவிலும் புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. டுவிட்டரில் #StopHindiImposition, #TNAgainstHindiImposition ஆகிய ஹேஷ்டேக்கள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.