03-05-2023, 08:05 PM
(03-05-2023, 06:12 PM)Vino555 Wrote: பலர் எதையும் எதிர்பாக்கமல் கதை எழுதுகிறார்கள் ஆனால் போதிய ஆதரவு இல்லாமல் பாதில் விட்டு விடுகிறார்கள் .
உண்மை தான் நண்பரே.... ஆனால் வாசகர்களும் பாவம் தானே... நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் போது, கதையை திடீரென்று ட்ராக் மாற்றி எழுத ஆரம்பித்து விட்டால், நாங்கள் என்ன செய்வது?...
கதை நன்றாக இருக்கும் போது கமெண்ட்ஸை ஆட்டோமெட்டிக்காக போட்டு உற்சாகப் படுத்துவது எங்கள் கடமை தான்.... ஆனால் இங்கே குறிப்பாக இந்த தளத்தில் நிறைய பேர் உறுப்பினர்களாக பதிவு செய்யாமல் கெஸ்ட்டாக வந்து கதையை படித்து விட்டு போய் விடுகிறார்கள்... ஒரு சில வாசகர்கள் கதையை படித்து விட்டு கருத்து பதிவு செய்ய மாட்டார்கள்.... மிகச் சில வாசகர்கள் மட்டுமே கமெண்ட் போட்டு உற்சாகப் படுத்துவதற்கு தானாகவே முன் வந்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்... அதனால் கமெண்ட்ஸை பற்றி கவலைப்படாமல், வியூஸ் அதிகரித்து வருகிறது என்றால் கூட சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்...
இன்னும் ஒன்று... எங்களுக்கு கதையும் பிடித்துப் போய், கதாசிரியர் கதையை எழுதிய விதத்தில் ரசித்து படிக்கத் தொடங்கிய பின்னர், கதையை மாற்றி எழுதி ஆரம்பித்து விட்டால், எங்களுக்கு மிகவும் பிடித்த சிறந்த கதாசிரியராக இருந்தாலும் சரி... அவரை சரமாரியாக திட்டி தீர்த்து விடுவோம்... கழுவி கழுவி ஊற்றி விடுவோம்...
இதற்கு கம்ஷாட் கூட விதிவிலக்கு அல்ல... ஐஸூம் விதிவிலக்கு அல்ல... நீங்களும் விதிவிலக்கு இல்லை.