02-05-2023, 11:15 PM
(08-03-2023, 03:56 PM)Nice start keeping rocking Nandhinii Aaryan Wrote: அதிகாலையில் கண் விழித்தேன் இரவு வீட்டு வேலைகள் செய்து தாமதமாக தூங்கியும். இன்னும் சிறிது தூங்க ஆசைதான் ஆனால் நான் பெண் ஆயிற்றே. குளித்து முடித்து வாசலில் கோலம் போட தொடங்கினால் 20 முதல் 50 வரை உள்ள ஆண்களின் கண்கள் ஜாக்கிங் என்ற பெயரிலும் வேற வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரிலும் என்னை நோட்டமிடுகிறது அதிலும் சிலர் இதையே குறிக்கோளாக வைத்து தினமும் என்னை பார்ப்பதை நான் அறிவேன் ஆனால் என்னை பார்த்து ரசிக்க தாலி என்ற அடையாள அட்டையை கழுத்தில் அணிவித்த என்னவன் என்னை ரசிக்க தெரியாதது ஏனோ?
மாற்றான் வீட்டுத் தோட்டத்துக் கனியை புசிக்க நினைக்கும் இவர்கள் தங்கள் வீட்டில் உள்ள கனிகளை புசிக்கிறார்களா? அல்லது என் கணவன் போல் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. என்னை விட பல வயது இளமையான கன்னியர்கள் தங்களின் வருங்கால மனைவியை இதுபோல் ரசிப்பார்களா? என்ற மற்றொரு கேள்வியும் எனக்கு உண்டு.
கோலத்தை அழகாக முடித்த நேரம் வந்த பால்காரனோ என்னை அவங்க வீட்டு பசு போல் பார்த்தான் ஆனால் பாலை எனக்கு கொடுத்து விட்டு சென்றான்.
அவருக்கு டீ, என் மகன் ஆரியனுக்கு ஹார்லிக்ஸ் என போட்டு கொடுத்து எழுப்பி விட்டு சமையலை தொடங்கினேன்
என் கல்லூரி தோழி 5வது படிக்கும் என் மகனின் ஆசிரியை பிரியாவிடம் இருந்து அழைப்பு வந்தது. என்னை விட மதிப்பெண் குறைந்து எடுத்த பெண்தான் கல்லூரியில் அவள் சந்தேகங்களை கூட நான் தான் தீர்த்து வைப்பேன் ஆனால் அவள் ஆசிரியை ஆகி விட்டால் ஆனால் நான் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யும் ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரி ஆகிவிட்டேன். Parents Teacher மீட்டிங் இருக்கிறது என்று அவள் என்னிடம் கூறினாள். இதை என் மகன் ஆர்யன் எதுக்கு மறைத்தான் என அறிவேன். எல்லார் வீட்டிலும் தாய், தந்தை என இருவரும் வரும் போது அவனின் அம்மா நந்தினி மட்டுமே இதுவரை மீட்டிங்கிற்கு வந்துள்ளதால் அவனுக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் அது. நான் அவனை பள்ளிக்கு கிளப்பினேன் அவரை அலுவலகத்திற்கு கிளப்பினேன்.
என்னங்க அவங்க மிஸ் கால் பண்ணாங்க நம்ம இரண்டு பேரும் போயிட்டு வந்துடலாமா???
நான் எதிர்த்த பதில் எனக்கு எப்போதும் போல கிடைத்தது - "என்னால் வர முடியாது நீ சும்மா தானே இருக்க நீயே போயிட்டு வா" நீ சும்மா தானே இருக்க நீ சும்மா தானே இருக்க நீ சும்மா தானே இருக்க என்ற அந்த வார்த்தை மட்டும் அசரீரீ போல என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உன் சமையல் அருமை என்ற வார்த்தை இன்றாவது இவர் வாயிலிருந்து வராதா என்று எதிர் பார்த்தேன். இவ்வளவு சுவையாக சமைத்தும் அந்த பாராட்டை நான் எப்போதும் பெற்றதில்லை. இந்த பதிமூன்று வருட கல்யாண வாழ்க்கையில்.
அவரை அனுப்பி வைத்து விட்டு, எப்பவும் பள்ளி வேனில் பள்ளிக்கு அனுப்பும் என் மகனை இன்று என்னுடைய ஸ்கூட்டியில் அழைத்து சென்றேன் மீட்டிங் இருப்பதால். பலநாள் கழித்து விடுதலை கிடைத்ததில் அப்படி ஒரு ஆனந்தம் என்னுடைய ஸ்கூட்டிக்கு.
பள்ளியை அடைந்தேன் அங்கே எல்லோரும் ஜோடி ஜோடியாக வந்து இருப்பதை பார்த்து எனக்கு வருத்தம். என்னுடைய மகனை பார்த்தேன் அவன் அப்பா வரவில்லை என்று அவனுடைய முகமும் தொங்கியது.
ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. என்னுடைய தோழி பிரியாவிடம் பேசிவிட்டு விடை பெற்றேன். அப்போது அங்கு வந்திருந்த பல தந்தைககள் அவர்கள் மனைவி உடன் இருப்பதையும் மறந்து என்னைப் பார்த்து பேசி வழிய தொடங்கினர். அதில் நீண்ட காலமாக parents whatsapp groupல் இருந்து நம்பர் எடுத்து தொல்லை செய்யும் ஒருவர் இன்று ஓப்பனாகவே அவருடைய காதலை என்னிடம் சொல்லி விட்டார். நான் சுட்டெரிக்கும் கண்களால் அவரை முறைத்து பார்த்து விட்டு உங்க பொண்டாட்டி கிட்ட சொல்லிடுவேன் ஒழுங்கா இருந்துக்கோங்க என முறைத்து விட்டு மன நிம்மதி இல்லாமல் பள்ளியை விட்டு விரைந்தேன்.
வரும் வழியில் கோவில் தென்பட மன நிம்மதி அடைய கோவில் சென்று மனதார கடவுளை வணங்கினேன். அங்கும் கல்லூரி காதல் ஜோடி முதல் வயதான ஜோடி வரை பார்க்க முடிந்தது.
அதில் ஒரு கல்லூரி மாணவன் அவனோடு வந்த காதலிக்கு மல்லிகைப்பூ வாங்கி தலையில் வைத்து விடுகிறான். அதை பார்க்க இந்த மாதிரி என் வாழ்க்கையில் நடக்கவில்லையே என பொறாமையாக இருந்தது. ஒரு பேராசிரியராக ஆக வேண்டும் என கல்லூரி வாழ்க்கை முழுவதும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி படித்ததால் வந்த காதல் கடிதங்களை ஏற்க முடியவில்லை ஏனெனில் எனக்கு அப்போது தெரியாது என்னால் என் கனவை அடைய முடியாது என்று. என்னுடைய மாமா பொண்ணு ஒருத்தனை காதலித்து ஓடி சென்று கல்யாணம் செய்ததால் நானும் அப்படி செய்து விடுவேன் என கனவை அழித்து விட்டார்கள்.
இன்னொரு புதிய திருமணமான ஜோடி அவள் கணவன் விபூதி, குங்குமம் எடுத்து அவன் மனைவியின் நெத்தியில் பூசுவதை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
வண்டியை அடுத்து எங்கள் வீட்டுத் தெருவில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு விட்டு அங்கு சில பொருள்களை வாங்கி கொண்டு இருக்கும் போது தான் கவனித்தேன் என்னை தினமும் காலையில் sight கூட்டத்தில் ஒருத்தன். என் பின்னாடியே சுற்றி வருவதை அவனுக்கு ஒரு 20 வயது இருக்கும் பார்க்க அழகாக நன்றாக தான் இருந்தான் அவன் அழகுக்கு பல பெண்கள் பின்னாடி சுற்றும் ஆனால் இவன் ஏன் என் பின்னாடி சுற்றுகிறான் என தெரியவில்லை. அவன் என்னிடம் ஏதோ பேச நெருங்க அவசர அவசரமாக பில் போட்டு வீட்டிற்கு விரைந்தேன்
பின் வீட்டிற்கு வந்து திரும்பவும் துணி துவைத்து, பாத்திரம் கழுவி, வீட்டை பெறுக்கி முடிக்க சாயங்காலம் ஆனது.
என் மகனும் வரவே அவனுக்கு பால், ஸ்நாக்ஸ் பண்ணி கொடுத்து அவனை படிக்க வைத்து ஹோம் வொர்க் சொல்லி கொடுத்து முடிக்க வைத்து ஒருவழியாக நிம்மதியாக டிவியின் முன் அமர்ந்து சீரியல் பார்க்க தொடங்கினேன்.
என் கணவரிடம் இருந்து அழைப்பு வந்தது
"நான் மார்கெட்டிங் விஷயமாக வெளியூர் போறேன் இரண்டு நாளுக்கு அப்புறம் தான் வருவேன்" என்று போனை கட் செய்து விட்டார். அவர் மார்கெட்டிங் பிஸினஸில் இருப்பதால் இது சகஜம்.
பின் டின்னர் உணவு ரெடி செய்து அவனுக்கு பரிமாறி தூங்க வைத்து மீண்டும் மிச்சம் இருக்கும் வீட்டு வேலைகளை செய்து முடித்து தாமதமாக தூங்க செல்லும் போது யோசித்தேன் இன்று "மகளிர் தினம்" என்று