Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
#30
காமக்கதை எழுதும் நண்பர்களே..

உங்களுடைய சொந்த வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி‌ மெனக்கெட்டு கதையை உருவாகும் நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.. காமக்கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று எனக்கும் தெரியும். நானும் சில கதைகளை தொடங்கி அதை பாதியில் நிறுத்தி வைத்திருக்கிறேன்.


மற்ற கதைகளும் காட்டிலும் காமக்கதை எழுதுவதில் சிரமம் அதிகம். கதை எழுதுவதற்கு தனிமையான சூழ்நிலை வேண்டும். அதை பொறுமையாக டைப் செய்வதற்கு நேரம் வேண்டும். கதை சுவாரஸ்யமாக எழுதுவதற்கு ஏற்ற மனநிலை வேண்டும். மற்றவர் முன்னிலையில் காட்டிக் கொள்ளவும் முடியாது. காமக்கதை ஆசிரியர் என்று வெளியே சொல்லி பெருமை படவும் முடியாது.


இவ்வளவு சிரமப்பட்டு ஒரு கதையை உருவாக்கி கதை பதிவேற்றினால் சில ஈனப் பிறவிகள் அந்தக் கதையை திருடி வேறு தலைப்பில் வேறு தளத்தில் தன்னுடைய கதை என்று பதிவேற்றிக் கொள்கிறார்கள்..


அந்த ஈனப் பிறவிகளை காட்டிலும் இன்னும் கேவலமான பிறவிகளும் இருக்கிறார்கள்.. மற்றவர்கள் கதையை திருடி வியாபாரம் செய்கிறார்கள். சமீபத்தில் ஒரு தளத்தில் பார்த்தேன்.. உங்கள் அனைவருக்கும் துபாய் சீனு எழுதிய நிஷா கதை தெரிந்திருக்கும். அந்தக் கதையின் Pdf 1000 ரூபாயாம். அந்தக் கதை மட்டுமில்லாமல் நிறைய கதைகளை திருடி வியாபாரம் செய்கிறார்கள் அந்த கேடு கெட்ட ஜென்மங்கள்.

யார் எழுதிய கதையை யார் வியாபாரம் செய்வது. காமக்கதையை எழுதிவிட்டு அது என்னுடைய கதை என்று உரிமை கொண்டாட முடியாமல் போவது தான் இதற்கு காரணம். நான் கதை எழுதுவதை தொடர முடியாமல் போனதற்கு என்னுடைய சொந்தப் பிரச்சனைகள் ஒருபுறம் காரணமாக இருந்தாலும், இது போன்ற கேவலமான செயல்களும் காரணம் தான்.

கோடி கோடியாய் பணம் முதலீடு செய்து திரைப்படங்கள் எடுத்து அதை OTT மூலமாக ரிலீஸ் செய்யும் போது பெரிய லாபம் கிடைக்குமோ இல்லையோ அவர்கள் உழைப்பிற்கு நஷ்டம் ஆகாமல் வருமானம் கிடைக்கும்.

சோசியல் மீடியாவில் போடப்படும் ரீல்ஸ் வீடியோவிற்கு கூட copyrights claim செய்கிறார்கள். எங்கு திரும்பினாலும் Paid promotion. எல்லாமே வியாபாரம் ஆகிவிட்டது.

இப்படி இருக்கும் காலக்கட்டத்தில் கதை எழுதும் நண்பர்களுக்கு வருமானம் தான் இல்லையென்றாலும் வாசகர்களின் ஆதரவும் குறைவாக தான் இருக்கிறது.


இந்த தளத்தில் கதைகள் திருடப்படுவது தளத்தின் நிர்வாகிகள் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது என்னுடைய கோரிக்கை.

அதே போல வேறு தளத்தில் கதைகளை திருடி வியாபாரம் செய்யும் ஈனப்பிறவிகளுக்கு யாரும் ஆதரவு தரக் கூடாது. இது கட்டளை அல்ல. வேண்டுகோள்.

நன்றி.
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Kokko Munivar 2.0 - 01-05-2023, 11:10 PM



Users browsing this thread: 17 Guest(s)