29-04-2023, 12:41 PM
(This post was last modified: 29-04-2023, 12:43 PM by GEETHA PRIYAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
பொதுவாக சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்றால் அழகு முக்கியம் என்று பொதுவான கருத்துக்கள் உலா வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சில நடிகைகள் தங்கள் ஆரம்ப காலத்தில் சந்தித்த அழகு மற்றும் நிறம் தொடர்பாக சர்ச்சைகளை கூறியுள்ளனர்.குறிப்பாக பெண்கள் சினிமாத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்றால் நிறம் மிக அவசியம் என்ற கருத்துக்கு பலரும் ஆளாகியுள்ளனர்.
ஆனாலும் நிறம் முக்கியமல்ல திறமை இருந்தால் போதும் எதையும் சாதித்து விடலாம் என்ற கருத்தும் பரவலாக சொல்லப்படுவதும் உண்டு. அந்த கருத்தை உண்மையாக்கும் வகையில் பல பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.அந்த வகையில் டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமாகி தற்போது சின்னத்திரையில் தனக்கென தனி அங்கிகாரத்தை பெற்றுள்ளவர் கேப்ரியல்லா செல்யூஸ்.