29-04-2023, 12:37 PM
கேப்ரியல்லா 2016 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான "கபாலி" மூலம் அறிமுகமானார்.விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான “கலக்க போவது யாரு”விலும் கலந்து கொண்டார்.அதன்பிறகு சினிமாவில் காணாத அவர், திடீரென சுந்தரி சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.தனது நிறம் குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகும் ஒரு பெண், இந்த எதிர்ப்புகளை மீறி எப்படி சாதிக்கிறார் என்ற கோணத்தில் திரைக்கதை அமைச்சப்பட்டுள்ள இந்த சீரியல் தற்போது பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பையும் கேப்ரிலாவுக்கு வாங்கி கொடுத்தது அவரின் நிறம் தான்.