28-04-2023, 08:45 PM
(28-04-2023, 08:17 PM)Reader 2.0 Wrote: நண்பரே... ஒரு ரயிலில் இருக்கும் அனைத்து படுக்கை வசதிகளும் (BERTH) முன்பதிவு (RESERVATION) உறுதி செய்யப்பட்டு, பூர்த்தி ஆன பிறகு, முன்பதிவு செய்யப்படும் அனைத்து பதிவுகளுக்கும் ஏதாவது ஒரு படுக்கை வசதி ரத்து செய்யப்பட்டது என்றால் முன்னுரிமை அடிப்படையில் (RESERVATION AGAINST CANCELLATION) படுக்கை வசதி அளிக்கப்படும்... படுக்கை வசதி (BERTH CONFIRM )உறுதி செய்ய முடியவில்லை என்றால் கூட கட்டாயம் இருக்கை வசதி SEAT அளிக்கப்படும்... முன்னுரிமை அடிப்படை பூர்த்தி ஆகி விட்டது (RAC) என்றால் அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட அனைத்து பதிவுகளும் காத்திருப்போர் பட்டியலில் WAITING LIST சேர்க்கப்படும்.... காத்திருப்போர் பட்டியலில் அளவுக்கு அதிகமான நபர்கள் முன்பதிவு செய்யும் போது, கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, பயணிக்கும் கூடுதல் பயணிகளுக்கு படுக்கை வசதி உறுதி செய்யப்பட்டு விடும்...
இந்தியாவில் குறிப்பிட்ட கோட்ட மேலாளர் அலுவலக எல்லையில் இயக்கப்படும் ஒவ்வொரு ரயிலுக்கும் வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., ஐ.பி., இராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள் அதிகாரிகள் போன்ற முக்கிய நபர்கள் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் போன்ற பொதுமக்கள் அனைவரும் பயன் படுத்தும் விதமாக அவசர கால ஒதுக்கீட்டில் சில குறிப்பிட்ட படுக்கை வசதி ஒதுக்கப்பட்டு இருக்கும்...
மிகவும் அவசியம் அல்லது மிகவும் அவசரமாக பயணம் செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் ஏற்படுகிறது என்றால் ஒவ்வொரு கோட்ட மேலாளர் அலுவலகத்திலும்RAILWAY DIVISION OFFICE) அவசர நிலை ஒதுக்கீடு வசதி உள்ளது... (EMERGENCY QUOTA) அவசர கால ஒதுக்கீட்டில் படுக்கை வசதி கோரி, (E.Q.RESERVATION) கோட்ட மேலாளரிடம் (DIVISIONAL MANAGER) எழுத்துப் பூர்வமாக (REQUEST IN WRITTEN) விண்ணப்பித்தால் உங்களுக்கு உடனடியாக படுக்கை வசதி உறுதி செய்யப்பட்டு விடும்... அதற்கு நீங்கள் முன்பதிவு (RESERVATION )செய்து இருந்தால் மட்டுமே தகுதி கிடைக்கும்... முன்னுரிமை அடிப்படை பட்டியல் (RAC)அல்லது காத்திருப்போர் பட்டியலில் (W. L) உங்கள் பெயர் இடம் பெற்று இருந்தால் போதும்...
Same feelings nanba