27-12-2018, 08:25 PM
மெல்போர்ன் டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டம் முடிந்தது, ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் சேர்ப்பு
மெல்போர்ன் ,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. புஜாராவின் சதம் (106 ரன்கள்) விராட் கோலியின் அரைசதம் (82 ரன்கள்), அறிமுக வீரர் மயங்க் அகர்வாலின் சிறப்பான துவக்கம் (76 ரன்கள்) ஆகியவற்றால் இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையை எட்டியது. 169.4 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து இருந்த போது டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் இன்னும் 435 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஆட்டத்தின் தற்போதைய சூழலில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது