03-06-2019, 10:34 AM
அத்தியாயம் 8
அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! 'அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..' என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!!
விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. 'கலக்கிட்டடா' என்று கன்னம் கிள்ளினர்..!!
தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!!
"பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்... காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!"
ஆட்காட்டி விரலை அண்ணனை நோக்கி நீட்டி.. அதை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி சுழற்றி, அவள் அவ்வாறு பாட.. அசோக் அவனுடைய மனக்குழப்பத்தையும் மறந்து, மெலிதாக புன்னகைத்தான்..!!
"ப்ச்.. சும்மா இரு சங்கு..!!" என்று அழகாக வெட்கப்பட்டான். உடனே சங்கீதா
"அழுக்கு சட்டை போட்டாலும்.." என்று அடுத்த லைனை கிண்டலான குரலில் ஆரம்பிக்கவும், வெடுக்கென தங்கையை முறைத்தான்.
"போதும்..!!!! நிறுத்து..!!!!" என்று கடுப்பாக சொன்னான்.
"ஹாஹாஹாஹா...!!! ம்ம்ம்ம்.... எப்படிடா இப்படிலாம்.. ஃபஸ்ர்ட் பால்'லயே சிக்ஸரு.. ம்ம்..?? ஃபஸ்ர்ட் நாள் பேசுனதுமே ஒரு பொண்ணை ஐ லவ் யூ சொல்ல வச்சுட்ட.. அதுவும் பத்தே நிமிஷம் பேசுனதுல..?? உன்னை இதயம் முரளின்ல நான் இவ்வளவு நாளா நெனச்சுட்டு இருந்தேன்.. இப்படி கில்ல்ல்லி மாதிரி சொல்லி அடிச்சுட்டியடா அண்ணா..?? ச்ச.. சான்ஸே இல்லடா..!!" அசோக்கை கலாய்க்கிற குரலிலேயே பாராட்டினாள் சங்கீதா.
"ம்ம்ம்.. அம்மா உனக்காகவே ஆசையா.. ஸ்பெஷலா செஞ்சது அசோக்..!! ஆ.... வாயை தெற.." கையில் இனிப்பு கிண்ணத்துடன் வந்திருந்தாள் பாரதி.
"எ..என்ன மம்மி இ.." அசோக் கேட்டு முடிப்பதற்கு முன்பே,
"ஷாஹி துக்ரான்னு ஒரு மொகலாய் ஸ்வீட்டுடா.. நல்லாருக்கும், சாப்பிட்டு பாரு..!!" சுண்டக் காய்ச்சிய பாலில் ஊறிப்போன அந்த இனிப்புத்துண்டை அவன் வாயில் திணித்தாள்.
"அசோக்-மீரா..!! பேர்ப்பொருத்தம் பிரம்மாதமா இருக்குன்னு.. வல்லக்கோட்டை ஜோஸியரே சொல்லிட்டாரு..!!" - பாட்டி தன் பங்குக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.
வெறும் சந்தோஷம் என்ற ஒரு வார்த்தையில் சாதாரணமாக அந்த உணர்வை விளக்கி விட முடியாது..!! குடும்பத்தில் எஞ்சியிருந்த இருந்த ஒருவனும்.. இன்று காதல் இனத்தில் கலந்துவிட்டான்.. இப்போதுதான் இவன் நம் வீட்டுப்பிள்ளை.. என்பது மாதிரியான ஒருவித பெருமிதமும் நிம்மதியும் கலந்த பெருமகிழ்ச்சி எல்லோருக்கும்..!!
"இப்போத்தான் இதுக்குப்பேரு ஸ்மார்ட் ஃபோன்.. இதுக்கு முன்னாடி வேஸ்ட் ஃபோன்..!!" - மகனுடைய செல்ஃபோனில் புதிதாக சேர்ந்திருந்த மீரா என்ற பெண்ணுக்கான எண்ணை, கட்டை விரலால் தடவியபடியே பெருமையாக பார்த்தார் மணிபாரதி.
"ஹ்ம்ம்.. இந்தக்காலத்து புள்ளைகள்லாம் ரொம்ப கொடுத்து வச்சதுங்க..!! அந்தக்காலத்துல உன் பாட்டி கூட நான் பேசணும்னா.. அவ ஊர்ல அய்யனாருக்கு பொங்கல் வைக்கணும்.. இல்லனா அரண்மனைக்காரருக்கு போர் அடிக்கணும்.. அப்போத்தான் அரசுகொடிப்பாளையம் எல்லைக்குள்ளயே என்னால நொழைய முடியும்..!! அப்புறம் ஆர்மோனியக்காரரு எப்போடா மங்களம் பாடுவாருன்னு.. ராமுழுக்க பல்லை கடிச்சுட்டு காத்திருக்கணும்..!! அதுவும் அதிகாலைல.. அந்த இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு.. அஞ்சு நிமிஷம் உன் பாட்டி கூட பேச முடிஞ்சதுன்னா பெரிய விஷயம் அசோக்கு..!! ஹ்ம்ம்.. இப்போலாம் அப்படியா இருக்கு... இந்தப்பக்கம் நம்பரை அடிச்சமுனா, அந்தப்பக்கம் நம்மாளு கொரலு கேக்குது..!!" எண்கள் கிறுக்கப்பட்டிருந்த பேரனின் உள்ளங்கையை தடவியவாறே, தாத்தா சொன்னவிதத்தில் பெருமிதத்துடன் சின்ன பொறாமையும் கலந்திருந்தது.
"வடபழனி போய் முருகனை பாத்துட்டு வந்தேன்டா கண்ணா.. உங்க காதல், எந்த சிக்கலும் இல்லாம கல்யாணத்துல முடியனும்னு.. உங்க ரெண்டு பேர் பேர்லயும் அர்ச்சனை செஞ்சேன்..!!" காகித மடிப்பு திறந்து, கட்டை விரலால் விபூதி தொட்டு, அசோக்கின் நெற்றியில் கோடிட்டாள் பாரதி.
இப்படி ஆளாளுக்கு ஆனந்தத்தில் திளைத்தது, அசோக்கின் மனதில் இருந்த அழுத்தத்தை அதிகரிக்கவே செய்தது. அந்தப்பெண் என்னடாவென்றால், 'ஐ லவ் யூ' சொல்லிவிட்டு, அடுத்த நொடியே 'பில் பே பண்ணு' என்கிறாள். இவர்களோ குடும்பத்திற்கு இருந்த பெரிய சாபக்கேடு நீங்கிப்போன மாதிரி, குதுகலத்தில் திளைக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷம் சற்று அதிகப்படியானதாகவே தோன்றியது அசோக்கிற்கு..!!
அன்று இரவு உணவை, வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில்தான் உண்டார்கள். ஆறு பேரும் டைனிங் டேபிளில் அமர்ந்து, ஆனந்தமாக பேசி சிரித்தவாறே சாப்பிட்டுக்கொண்டிருக்க, அசோக் தன் மனதில் இருந்த அழுத்தத்தை, அடக்கிக் கொள்ள முடியாமல் சொல்லிவிட்டான்.
"நீ..நீங்கல்லாம்.. தேவை இல்லாம.. ரொம்ப ஓவரா சந்தோஷப்படுற மாதிரி எனக்கு தோணுது.. கொஞ்சம் கொறைச்சுக்கங்க ப்ளீஸ்..!!"
அவன் அவ்வாறு சொன்னதும், எல்லோருமே சட்டென முகம் மாறினர். குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் அனைவரும் அசோக்கை ஏறிட்டனர்.
"ஏய்.. என்னடா இப்படி சொல்லிட்ட..?? நீ ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்க.. அதுமட்டும் இல்லாம அவளையும் ஐ லவ் யூ சொல்ல வச்சிருக்க..?? எவ்வளவு பெரிய விஷயம் இது..?? இதவிட எங்களுக்கு வேற என்னடா பெரிய சந்தோஷம் இருக்க முடியும்..?? இந்த அளவுக்கு கூட நாங்க சந்தோஷப்படலன்னா எப்படி.??" மணிபாரதி மகனிடம் கேட்டார்.
"உங்களுக்கு சந்தோஷமா இருக்கு.. எ..எனக்கு என்னவோ கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!!"
"ப்ச்.. நீயும் அவளை லவ் பண்ற.. அவளும் உன்னை லவ் பண்றேன்னு வாய் விட்டு சொல்லிட்டா.. அப்புறம் என்ன உறுத்தல் உனக்கு..??" சங்கீதா அண்ணனிடம் குழப்பமாய் கேட்டாள்.
"ஒருவேளை.. அந்தப் பொண்ணோட குடும்பத்துல இருக்குறவங்க.. இந்த காதலை ஒத்துக்குவாங்களோ இல்லையோன்னு பயப்படுறானோ என்னவோ..?? ஏண்டா அப்படியா..??"
பாட்டி தன் மனதில் இருந்த சந்தேகத்தை பேரனிடம் கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும், இப்போது தாத்தா பலத்த சிரிப்புடன் ஆரம்பித்தார்.
"ஹாஹாஹாஹா..!! ஏன் அசோக்கு.. அதை நெனைச்சா மனசை போட்டு கொழப்பிக்கிற..?? நம்ம கிஷோர் வீட்டுல கூடத்தான்.. ஆரம்பத்துல நம்ம சங்கீதாவை ஏத்துக்கல.. 'காதலாவது கத்திரிக்காயாவது'ன்னு அவரு அம்மா கெடந்து குதிச்சாங்க..!! அப்புறம்.. நம்ம குடும்பத்துல எல்லாரும் அவங்கட்ட பக்குவமா பேசி.. நேரா போய் அவங்களை பாத்து எடுத்து சொல்லி.. எப்படி எப்படி எல்லாமோ போராடி.. கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசை கரைக்கலையா..?? இப்போ அந்த அம்மாவே 'உங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்'னு வாயார சந்தோஷமா சொல்றாங்க..!! உன் விஷயத்தை மட்டும் சும்மா விட்ருவோமா..?? உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்டா.. நாம குடும்பத்தோட போய் நாலு வார்த்தை பேசினாலே.. யாருக்குமே நம்மள புடிச்சு போகும்..!! இதுக்குலாமா கவலைப்படுறது..??"
"ஐயோ நான் அதுக்குலாம் கவலைப்படல தாத்தா..!!" அசோக் சற்றே எரிச்சலாக சொன்னான்.
"அப்புறம் என்னடா..??" அத்தனை நேரம் அமைதியாக இருந்த பாரதி இப்போது அசோக்கின் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.
"எனக்கும் அந்தப் பொண்ணை பத்தி எதுவும் தெரியாது.. அவளுக்கும் என்னைப் பத்தி எதுவும் தெரியாது.. ஆனா ரெண்டு பேரும் ஐ லவ் யூ மட்டும் சொல்லிக்கிட்டோம்..!! நானும் அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல என் காதலை சொல்வேன்னு நெனைக்கல.. அவளும் திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொல்வான்னு எதிர்பார்க்கல.. அ..அதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!! ஏதோ.. எக்ஸாம்க்கு போய்ட்டு எம்ப்ட்டி பேப்பர் நீட்டிட்டு வந்தவனுக்கு.. சென்டம்னு ரிசல்ட் வந்த மாதிரி இருக்கு..!!" அசோக் அந்தமாதிரி குழப்பம் அப்பிய முகத்துடன் சொல்ல, அவனையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பாட்டி, இப்போது ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.
"ஹ்ஹ்ம்ம்.. என்ன விஷயம்னு இப்போ எனக்கு கொஞ்சம் புரியுது..!! உன் குழப்பம் போறதுக்கு பாட்டி ஒன்னு சொல்லட்டுமா..??"
"என்ன..??"
"காதலை பத்தியும், காதலிக்கிறவங்கள பத்தியும்.. காதலை சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்குறதை விட.. காதலை சொன்னதுக்கப்புறம் தெரிஞ்சுக்குறதுதான் அதிகம்..!! அப்படி காதலை புரிஞ்சுக்கிட்டவங்கதான் உலகத்துல அதிகம் பேர்..!!" பாட்டி அவ்வாறு தனது அனுபவப்பாடத்தை மிக எளிமையாக சொல்ல, அவளுடைய மகன் மணிபாரதி தன் அம்மாவை புன்னகையுடன் ஆமோதித்தார்.
"ம்ம்.. கரெக்டா சொன்னம்மா..!!" என்றவர் உடனே மகனிடம் திரும்பி,
"ஏண்டா.. இன்னைக்கு காதலை சொன்னதுக்காக, நாளைக்கே உனக்கு கல்யாணம்ன்ற மாதிரில நீ பேசுற..?? இப்போ என்ன ஆகிப் போச்சு..?? ரெண்டு பேரும் பேசுங்க.. பழகுங்க.. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கங்க.. காதல்னா என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..!! அப்புறமா.. கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு உங்களுக்கு தோணுறப்போ, எங்ககிட்ட வந்து சொல்லுங்க.. நாங்க அந்தப் பொண்ணோட ஃபேமிலி கூட பேசி.. எந்த பிரச்னையும் இல்லாம உங்க கல்யாணத்தை முடிச்சு வைக்கிறோம்..!! அவ்வளவுதான.. அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கொழப்பம்..?? மனசை போட்டு அலட்டிக்காம.. நல்லா சந்தோஷமா இருடா..!! ம்ம்... சாப்பிடு.. சாப்பிடு..!!"
உலகத்திலேயே மிக மிக சிறிய பிரச்சினை அதுதான் என்பது போல.. மிக மிக சிம்பிளான தீர்வு ஒன்றை சொல்லி.. அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மணிபாரதி..!!
சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடும், அசோக்கை சமாதானப் படுத்தியதோடும் மட்டும், வீட்டில் இருப்பவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த வகையில், அசோக்கின் காதலுக்கு டிப்ஸ் கொடுத்தனர்..!!
"அந்தப் பொண்ணை அடிக்கடி வெளில கூட்டிட்டு போ.. அவ ஏதாவது ஆசைப்பட்டு கேட்டா யோசிக்காம வாங்கிக்குடு..!! இப்போ காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. இன்னும் காசை பாத்துக்கிட்டு கஞ்சப் பிசினாரியா இருக்காத..!! உன்னை நம்பி ஒரு பொண்ணு.. அவ வாழ்க்கையை உன்கிட்ட ஒப்படைக்க நெனைச்சிருக்கா.. அவளை சந்தோஷமா வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு..!! புரியுதா..??" அசோக்கின் தலையில் நறுக்கென்று குட்டியவாறே சொன்னாள் பாரதி.
"இதுலாம் டாடி எழுதுனதுலயே பெஸ்ட் ரொமாண்டிக் நாவல்ஸ்டா அசோக்.. இத்தனை நாளா உனக்கு இதுலாம் பிடிக்காம இருந்திருக்கலாம்.. இப்போ படிச்சு பாரு.. ரசிகர்கள் ஏன் என்னை காதல்க்கதை சக்கரவர்த்தி அப்டின்னு புகழ்றாங்கனு புரிஞ்சுப்ப..!! ஏகப்பட்ட ரொமான்ஸ் டிப்ஸ்.. எக்கச்சக்கமா கொட்டி கெடக்கும்.. உனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!!" ஒரு நாற்பது ஐம்பது நாவல்களை கைகொள்ளாமல் அள்ளிவந்த மணிபாரதி, அசோக்கின் கட்டிலில் இறைத்து சென்றார்.
"ஜஸ்ட் பிஃப்ட்டித்ரீ ருபீஸ்.. ஒரே ஒரு நம்பர் மட்டும் சூஸ் பண்ணிக்கலாம்.. அந்த நம்பரோட மட்டும் அன்லிமிட்டட் ஃப்ரீ டாக்டைம்..!! பேசலாம் பேசலாம்.. பேசிக்கிட்டே இருக்கலாம்..!! நானும் கிஷோரும் இந்த ப்ளான்தான் யூஸ் பண்றோம்.. உனக்கும் அண்ணிக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!! ட்ரை பண்ணிப்பாரு..!!" அதற்குள்ளாகவே மீராவை உறவு கொண்டாட ஆரம்பித்திருந்த சங்கீதா, ஏதோ ஒரு மொபைல் நெட்வொர்க் கம்பனியின் ப்ளானை, இலவசமாக மார்கெட்டிங் செய்தாள்.
"இதை சாதாரண வளையம்னு நெனைக்காத.. உங்க ரெண்டு பேரோட நெருக்கத்துக்கு இது ஒரு சனியன்.. இதை கழட்டி எடுத்தாத்தான், பின்னாடி உக்கார்ற அவளுக்கு பிடிமானம் இருக்காது.. பேலன்ஸ்க்கு உன்னை புடிச்சுப்பா..!!"
அசோக்கின் பைக் பின் சீட்டுக்கு அருகே இருந்த அந்த ஸ்டீல் வளையத்தை, ஸ்பானர் உதவியுடன் கழட்டிக்கொண்டே தாத்தா கண்ணடித்தார். அசோக்கோ நெற்றியை பிசைந்து கொண்டான்.
சாப்பிடும்போது அசோக் எழுப்பிய விஷயத்தை மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பாரதி அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை. கணவர் சொன்ன தீர்வில் மகன் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்பதை, அவனுடைய முகத்தை பார்த்தே புரிந்து கொண்டாள். ஆனால் அப்போதே அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை துருவி துருவி கேட்க அவள் விரும்பவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, அன்று இரவு அவளுடைய மடியில் அவன் தலை சாய்த்திருந்த வேளையில், அவனது தலை முடியை கோதி விட்டவாறே மெல்ல கேட்டாள்.
"அப்போ ஏண்டா அப்படி சொன்ன...?"
"எ..எப்படி..??"
"மனசுல ஏதோ உறுத்தல்.. ஏதோ கொழப்பம்.. அப்டின்னு..!!"
பாரதி அவ்வாறு கேட்கவும், அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அன்று புட்ஃகோர்ட்டில் நடந்த விஷயங்களை அம்மாவிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான். அசோக் சொன்னதை எல்லாம் பாரதி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். கேட்டு முடித்தபிறகும் அவள் அமைதியும், யோசனையுமாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான்.
"நானாவது வேற வழி இல்லாம ஐ லவ் யூ சொன்னேன்.. அவ கைல காசு இல்லாம காதலிக்கிறேன்னு சொல்லிட்டாளோன்னு.. கன்ஃப்யூஸ்டா இருக்கு மம்மி..!!" மகன் பரிதாபமாக சொன்னவிதம், பாரதிக்கு சிரிப்பை வரவழைத்தது.
"ஹாஹாஹாஹா...!! ச்சே.. ச்சே.. அப்படிலாம் எதுவும் இருக்காதுடா..!! நீ ஏன் அப்படி நெனைக்கிற.. மொத நாளே உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக்கோ..!!"
"இல்ல மம்மி.. உனக்கு புரியல..!! நான் அவ கேரக்டர் பத்தி நெனச்சு வச்சிருந்ததுக்கும்.. அவ திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொன்னதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல.. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு..!!"
"ப்ச்.. அதான் அவளும் உன்னை அடிக்கடி அங்க பாத்திருக்கேன்னு சொல்லிருக்காள்ல..?? உன் மனசுல ஒரு ஆசை இருந்த மாதிரி.. அவ மனசுலயும் அதே ஆசை இருந்திருக்கும்..!!"
"ம்ம்ம்... உன் லாஜிக்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா எனக்குத்தான் மனசு சமாதானம் ஆக மாட்டேன்னுது..!!"
"அடடா... இதுக்குப்போய் ஏன் இப்படி ஃபீல் பண்ற..?? ம்ம்ம்ம்.... சரி.. அவதான் ஃபோன் நம்பர் குடுத்திருக்காள்ல.. நீ சந்தேகப்படுற மாதிரிலாம் இருந்தா, அவ ஏன் ஃபோன் நம்பர்லாம் குடுக்கணும்..??" அம்மா அந்தமாதிரி கேட்கவும், இப்போது அசோக்கிற்கும் 'அதான..??' என்று தோன்றியது.
"நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. அவகூட பேசு..!! அவ மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டு புரிஞ்சுக்கோ..!!"
பாரதி இதமான குரலில் சொல்லிவிட்டு அமைதியானாள். அசோக்கின் மனதிலும் இப்போது குழப்பம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது. அந்த நிம்மதியுடன் சேர்ந்து புதுவித ஆசையும் இப்போது அவனது மனதுக்குள் முளைத்தது. 'மீராவுக்கு இப்போது ஃபோன் செய்து பேசினால் என்ன..??' என்ற ஆசை. அந்த ஆசைவந்ததுமே அசோக்கின் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற ஆரம்பித்தது. உடனே அவளுடைய குரலை கேட்க வேண்டும் என்றொரு உந்துதல் உள்ளத்துக்குள் உருவாகியது. தலை கோதி விட்டுக்கொண்டிருக்கிற அம்மாவை, மெல்லிய குரலில் அழைத்தான்.