காவியாவின் அடுத்த பயணம்(completed)
#85
காவியா விமான நிலையம் அடைந்து செக் இன் ஆகி பயணிகள் வைடிங் ஹாலுக்கு என்று அமர்ந்தாள். சுற்றிலும் தமிழ் முகங்கள் தான் அவற்றில் சில பர்மா பஜார் வாசிகள் என்று பறை சாற்றின. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் காவியா அவள் மடிகணினியை எடுத்து வலை பக்கங்களை புரட்டினாள் அதில் கூகிள் தேடுதல் பார்த்து குழந்தை உருவாவது எப்படி என்ற தேடலை சமர்ப்பித்து கூகிள் துப்பிய பக்கங்களை படிக்க முற்பட்டாள். அது தமிழ் பழமொழி சொல்லுவார்களே அரச மரத்தை சுற்றி அடி வயிற்றை தடவி பார்க்காதே என்று அது போல இன்னும் முழுமையாக ஒரு இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆகாத நிலையில் காவியா குழந்தை உருவாவதால் பற்றி படிக்க ஆரம்பித்தாள்
அதில் சுவாரசியத்துடன் படித்து கொண்டிருந்ததில் அவள் அருகே நடப்பவற்றை அவள் கவனிக்கவில்லை. அவள் அடுத்த இருக்கையில் ஒரு இளைஞன் அமர்ந்து அவள் தோள் உடே அவள் என்ன பார்க்கிறாள் என்று அவன் நோட்டம் விட்டான். அவன் எதிர் பார்த்த பக்கங்கள் அவை இல்லை என்பதால் அவன் கையில் வைத்திருந்த பத்திரிகையை பிரித்து படிக்க பத்திரிகை பக்கங்கள் காவியாவின் கவனத்தை அவள் மேல் பட்டு திருப்ப காவியா என்ன என்று திரும்பி பார்த்தாள் அவன் உடனே சாரி என்று சொல்லி கொஞ்சம் தள்ளி அமர காவியா பரவாஇல்லை என்று புன்னகைத்து சொல்ல அவன் பதிலுக்கு ஒரு அழகிய புன்முறுவலை உதிர்த்தான். அவன் அணுகுமுறை காவியாவை கவர்ந்ததால் அவள் அவனிடம் பேச்சு குடுக்க ஆரம்பித்தாள். அதில் அவன் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வியாபார அதிகாரியாக இருப்பதாகவும் ஆனால் அவனின் விருப்ப வேலை அது அல்ல என்றும் தெரிந்து கொண்டாள் அவனுக்கு தமிழ் மீது அளவற்ற காதல் என்றும் அவன் பனி புரியும் இடத்தில பெண்கள் ஆகட்டும் ஆண்கள் ஆகட்டும் நுனி நாக்கு ஆங்கிலம் தான் பேசுவதால் அவன் அந்த சூழலையே வெறுப்பதாகவும் அறிந்தாள்
அவன் அவளை பற்றி விசாரிக்க அவள் வேலை செய்யும் வங்கி அதில் தான் ஆற்றும் பணி போன்றவற்றை தேவையான விவரங்களை மட்டும் கூற அவன் அவள் வங்கி மீதும் சில குறைகளை அடுக்கினான். காவியா அவன் வருத்தங்கள் பலருக்கு உள்ள வருத்தங்கள் தான் என்றாலும் அவள் வங்கி பேரை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அவன் சொன்ன குறைகளுக்கு வங்கி தரப்பு விளக்கங்களை கொடுத்தாள் பிறகு இருவரும் கொஞ்சம் மௌனம் சாதிக்க அவன் எழுந்து மேடம் நான் காபி குடிக்கலாம் என்று நினைக்கிறேன் உணக்ளுக்கு வேண்டுமா நீங்கள் காப்பி கூக்க வரிங்களா அல்லது காப்பி உங்களை தேடி வரவேண்டுமா என்று கேட்க அவன் சொன்ன விதம் அவளுக்கு விஷால் அவளிடம் முதன்முதலில் பேசியதை நினைவுக்கு கொண்டு வந்தது. காவியா இல்லை நான் இங்கே இருந்து நம்ப ரெண்டு உடமைகளை பார்த்து கொள்கிறேன் அதற்கு சேவை கட்டணமாக நீங்க ஒரு காபி வாங்கி வந்தால் சந்தோஷம் என்றாள் அவன் உங்கள் விருப்பம் என்று சொல்லி கொண்டே சென்றான். அவன் சென்றதும் அவன் காபின் பகேஜில் அவன் விலாசம் இருந்ததால் அதை அவள் பார்த்தாள் அவன் OMR அடுக்கு மாடி வாசி அவள் மீண்டும் ஒரு முறை விலாசத்தை படித்தாள் ஏன் என்ற காரணம் இல்லை என்றாலும் ரெண்டாவது முறை படிக்கும் போது அது அவள் மனதில் பதிந்து விட்டது.


மீண்டும் அவன் வந்து கையில் வைத்திருந்த காப்பி குடுவையை காவியாவிடம் நீட்ட அவள் வாங்கி கொண்டு நன்றி எட்வின் என்றதும் அவன் கொஞ்சம் ஆச்சரியத்துடன் தான் இன்னும் அவளிடம் பேரே சொல்லவில்லையே எப்படி தன பெயரை சொல்கிறாள் என்று ஒரு கேள்வி கனையை அவள் பக்கம் விடுத்தான். காவியா அவன் மனதை தெரிந்து அவன் விட்டு சென்ற பையின் பக்கம் அவள் கண்களை செலுத்தி அதில் இருந்து தெரிந்து கொண்டதாக உணர்த்தினாள் அவன் ஒ என்று சொல்லி மீண்டும் இருக்கையில் அமர்ந்தான். மேடம் நான் கேள்வி பட்டிருக்கிறேன் வங்கியில் வேலை செய்யும் நபர்கள் எல்லாவற்றையும் மிக நுனியமாக கவனிப்பார்கள் என்று இப்போது அதை நீங்கள் உறுதி படுத்தி விட்டர்கள் என்றான். காவியா அவன் குடி இருக்கும் ஏரியாவில் வீடு வாங்க என்ன செலவாகும் என்று கேட்க அவன் உடனே ஏன் நானே என் வீட்டை விற்பதாக இருக்கிறேன் மூன்று படுக்கை அறை முதல் மாடி வீடு 1750 சதுர அடி 2009 ஆண்டு முடிக்கப்பட்டது என்ன சொல்லறிங்க உங்களுக்கு வேனும்ன ஏர்போர்ட் ல இருந்து நேரா வீட்டை பார்க்க போகலாம் என்று சொல்ல காவியா ஐயோ நான் ஒரு போது விலை நிலவரம் கேட்டேன் என்று அந்த விஷயத்திற்கு முற்றுபுள்ளி வைத்தாள் அவன் மீண்டும் பத்திரிகையை திறந்தான் காவியா அந்த இடத்தை ஒரு சுற்று நோட்டம் விட எல்லோரும் அவரவர் சிந்தனையில் இருந்தனர்.

காவியா விமானம் பயணிகள் ஏறுவதற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பு வர காவியா அவள் கை பையை எடுத்து பாதுகாப்பு பரிசோதனை இடத்திற்கு சென்றாள் பரிசோதனை முடித்து அவள் விமான பனி பெண் காட்டிய இருக்கையில் அமர்ந்து பாதுக்காப்பு பெல்ட்டை அணிந்தாள் அவள் ஜன்னல் இருக்கையில் இருக்க அடுத்த இரு இருக்கைக்கு ஒரு தம்பதி வர வழியில் அவசர உபயோகத்திற்கான வழி இங்கே என்று காவியா இருந்த வரிசையில் காண்பிக்க அந்த தம்பதி விமான பணிப்பெண்னிடம் ஏதோ பேச அவள் அவர்களை அங்கேயே இருக்க சொல்லி வேறு சிலரை இருக்கை மாற்றி கொள்ள முடியுமா என்று கேட்டு யாரும் இருவராக வராதலால் அவர்களை அழைத்து கொண்டு அவள் முகப்பிற்கு சென்றாள். அப்போ அவள் அருகே காத்திருக்கும் இடத்தில அமர்ந்திருந்த நபர் உள்ளே நுழைய பனி பெண் அவன் போர்டிங் கார்ட் பார்த்து அவனிடம் ஏதோ சொல்ல அவன் அவளிடம் கேட்க அவள் காவியா வரிசையை சுட்டி காட்டினாள் அவன் தலை அசைக்க அவனை அழைத்து வந்து காவியா அடுத்த இருக்கையை காண்பிக்க அவன் அமரும் முன் கமல் ஒரு படத்தில் சொல்லுவது போல் தி வேர்ல்ட் இஸ் ஸ்மால் என்று காவியாவிடம் சொல்ல காவியா தலை ஆட்டினாள்.அவன் அமர்ந்து பெல்ட்டை போட அடுத்து பனி பெண் மற்றும் ஒரு ஆளை கூட்டி வந்து அமர செய்ய காவியா இருந்த வரிசை அனைவரும் வந்து விட்டனர். கொஞ்ச நேரத்தில் விமானம் கிளம்ப விமான கேப்டன் எல்லோருக்கும் வாழ்த்து கூறி வழக்கமாக சொல்லும் விஷயங்களை சொல்லி முடித்தான். காவியா காதில் பஞ்சு வைத்திருக்க பெல்ட் லைட் அனைந்து விட காவியா காதில் இருந்த பஞ்சை எடுத்து விட்டாள்


பக்கத்தில் இருந்தவன் அப்பா இனி மேல் பேசலாம் என்றான். காவியா சிரித்து அவனிடம் இது என்ன ஆபிஷயல் ட்ரிப் தானே என்றாள் அவன் ஆமாம் ஒரு வாரம் போட்டு சாவடுசுடாங்க இப்போ நு பார்த்து என் மனைவி குழந்தையுடன் சென்னை வந்து இருக்கா இன்று இரவு அவ அமெரிக்கா திரும்பி போகறா என்ன வாழ்க்கை என்று சலித்து கொள்ள காவியா அப்போ உங்க மனைவி அமெரிக்கா ப்ராஜெக்டா என்றதும் அவன் ப்ராஜெகட் இல்ல செட்ட்லிட் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் சென்னை வந்துடு வேலை செய்ய வேண்டாம் என்று ஆனா அவ குழந்தை எதிர்காலம் நல்லா இருக்க அவளுக்கு கிரீன் கார்ட் கிடைக்கும் வரை வர போவது இல்லை என்று சொலி விட்டாள். இப்போ தான் குழந்தை ரெண்டு வயசு ஆகுது என்றதும் காவியா அவனை பார்த்து இது ரொம்ப சகஜமா நிறைய குடும்பத்தில் நடக்கற ஒன்று தான் என்னை எடுத்துகோங்க என்று சொல்ல அவன் இரு கையையும் நீட்டி வாங்க என்று சைகை செய்ய காவியா அவன் கையை தட்டி விட்டு நான் சொனது என் வாழ்க்கை கதையை எடுத்துக்க நான் சேனையில் என் கணவர் சிங்கப்பூரில் உங்க மனைவிக்காவது குழந்தை எதிர்காலம் பற்றிய கவலை ஆனா எங்களுக்கு இன்னும் குழந்தையே இல்லை இதுக்கு என்ன சொல்லறிங்க என்றாள். அவன் அப்போ நீங்க ஏன் வங்கி வேலையை விட்டு உங்க கணவரோட சிங்கப்பூரில் இருக்க வேண்டியது தானே என்றான். காவியா முழு பதில் சொல்லாமல் அது முடியாது என்று மட்டும் சொன்னாள் அவன் அதற்கு மேல் அதை தெரிந்து கொள்ள விரும்பவில்லை இப்படியாக இருவரும் பேசிக்கொண்டே வர விமான பணிப்பெண் உணவு எடுத்து வந்து அவர்களுக்கு குடுக்க காவியா வேண்டாம் என்று சொல்லி விட்டாள்., அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் கழிந்து விமான கேப்டன் சென்னை அருகே வதுவிட்டதை அறிவித்து எல்லா பயணிகளுக்கும் நன்றி சொல்லி சென்னை பற்றிய முக்கிய தகவல்களை கூறினான். மீண்டும் சீட் பெல்ட் விளக்கு எரிய காவியா பெல்ட் மாட்டிகொண்டு காதில் பஞ்சு வைத்துக்கொண்டாள். விமானம் தரை இறங்கி காவியா சுங்க பரிசோதனை முடிந்து வெளியே வர அவளுடன் வந்த அந்த சக பயணியும் வெளியே வந்தான் காவியா ஒரு வாடகை சார் எடுக்க அவன் முடிந்தால் பிறகு பார்க்கலாம் என்று அவன் பிஸ்னெஸ் கார்ட் காவியாவிடம் குடுத்து விடை பெற்றான்.
காவியா எங்கே செல்வது என்று யோசித்து முதலில் வெட்டிற்கு சென்று பிறகு முடிவுபண்ணலாம் என்று அடையார் சென்றாள். ஸ்டெல்லாவை அழைத்து அவள் வந்து விட்ட செய்தியை சொல்லி என்ன விசேஷம் என்று கேட்க அவ காவியா நீங்க பெங்களூர் செல்லாளது ஒரு பெரிய பூகம்பத்தை உருவாக்கி இருக்கு AGM இப்போ ஹைதராபாத் அனுப்ப பட்டிருக்கிறார் அவர் தான் உனக்கு முன் கூட்டியே விஷயத்தை சொல்லி உன்னை விடுப்பில் போக சொன்னதாக எழுந்த புரளியால் அவர் இப்போ ஹைதராபாத் உன் வீட்டிற்கு ஒரு முறை என்னை வங்கியில் இருந்து அனுப்பி இருக்கீங்களா என்று பார்க்க சொன்னாங்க நான் உங்க வீடு வரை வந்து மீண்டும் அவர்களிடம் நீங்க உடல் நலம் இல்லாததால் உங்க தங்கை வீட்டில் இருப்பதாக சொல்லி விட்டேன் நீங்க இன்னும் குறைந்தது ஒரு வாரம் ஆவது வங்கி பக்கம் வராதீர்கள் என்று சொல்ல காவியா என்ன பண்ணுவது என்று யோசித்தாள். ஸ்டெல்லாவிடம் பேசின பிறகு அடையார் செல்வது நல்லது இல்லை என்ற எண்ணத்தில் அவள் டிரைவரை திருவான்முயூர் போக சொன்னாள் விஷால் வேலை இடத்திற்கு சென்று அவனிடம் யோசினை கேட்கலாம் எனபதால். அங்கே வண்டியை நிறுத்தி விஷால் நம்பரை அழைக்க அவன் சொல்லு காவியா எங்கே எஸ்கேப் நாலு நாளா ஒண்ணும் சொல்லவேயில்லை என்று கேட்க அவ நான் எல்லாவற்றையும் நேராக சொல்கீறேன் இப்போ நான் எங்க வீட்டில் தங்க முடியாது இன்னும் ஒரு வாரம் வேறு இடத்தில தான் தங்கணும் ஒரு இடம் சொல்லு என்றாள். அவன் இப்போ நீ எங்கே இருக்கே என்றதும் அவ ஹே நான் உன் இடத்தின் வாசலில் தான் இருக்கிறேன் என்றாள்.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 03-06-2019, 10:28 AM



Users browsing this thread: 3 Guest(s)