03-06-2019, 10:16 AM
விஸ்வாசம் வசூலை முறியடித்த என்.ஜி.கே – ஆனாலும் அவ்வளவு கொண்டாட்டம் தேவையில்லை!
NGK beats Viswaasam day 1 Chennai Collection
![[Image: D8BfAvnV4AETifV-e1559458712519.jpg?resiz...C464&ssl=1]](https://i0.wp.com/kalakkalcinema.com/wp-content/uploads/2019/06/D8BfAvnV4AETifV-e1559458712519.jpg?resize=696%2C464&ssl=1)
NGK beats Viswaasam day 1 Chennai Collection
விசுவாசம் திரைப்படம் முதல் நாளில் சென்னையில் 88 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது இதை வைத்து விசுவாசம் படத்தின் வசூலை முறியடித்து விட்டதாக சூர்யா ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாஅரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது
இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.
எனினும் எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்திற்கு ஓப்பனிங் நன்றாகவே கிடைத்துள்ளது குறிப்பாக சென்னையில் இப்படம் முதல் நாளில் ஒரு கோடியே 3 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
அதேசமயம் விசுவாசம் திரைப்படம் முதல் நாளில் சென்னையில் 88 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது இதை வைத்து விசுவாசம் படத்தின் வசூலை முறியடித்து விட்டதாக சூர்யா ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
ஆனால் விசுவாசம் திரைப்படத்துடன் பேட்டை படமும் வெளியாகி விட்டதால் வசூல் இரண்டாக பிரிந்து இருந்தது என்பதுதான் உண்மை.
அது மட்டுமில்லாமல் விசுவாசம் தமிழகத்தில் முதல் நாளில் பேட்ட வசூலையும் தாண்டி பெரிய அளவில் வசூல் செய்திருந்தது.
அதோடு தற்போது வரை தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் விசுவாசம்தான் அப்படி இருக்கும்போது என் ஜி கே திரைப்படம் விசுவாசத்தின் வசூலை நெருங்க கூட வாய்ப்பில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.