30-03-2023, 06:37 AM
(This post was last modified: 30-03-2023, 06:38 AM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
Update 28
நகைக் கடையில் மனிஷா முன் பணியாளர்கள் அனைவரும் குழு குழுவாக நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு அன்றைய மோட்டிவேஷன் வாசகத்தை சொல்லிக் கொண்டிருந்தாள் மனிஷா.
குட் மார்னிங் டு ஆல்… என்னோட சீஃப் ரிஷப் லால்… நான் இங்க வேலைக்கு சேரும்போது, ஒரே ஒரு விஷயத்தைதான் சொல்லுவார்… இந்த வேலையை எனக்காக செய்யாத… உனக்காக செய்… என்னோட நகைக்கடைக்காக செய்யாதே… உன் உன்னோட சந்தோஷத்துக்காக செய்… அப்பதான் உன்னால டார்கெட் அச்சீவ் பண்ண முடியும்… அதன் மூலமாக எனக்கு நகையும் விக்கும்… லாபமும் கிடைக்கும்… அப்படின்னு சொல்லுவாரு… அதையேதான் நான் உங்களுக்கு சொல்ல விரும்புறேன்… எல்லாரும் மத்தவங்க சந்தோஷத்துக்காக எதையும் செய்யாதீங்க… உங்க சந்தோஷத்துக்காக வேலை செய்யுங்க… ஓகேவா…?
என்றவுடன், எல்லோரும் தலையாட்டியபடி,
ஓகே மேடம்… எஸ் மேடம்…
என்று சொல்லிவிட்டு, வணக்கம் வைத்துவிட்டு கலைந்து சென்றனர். ஒரு சில பணியாளர்களுக்கு அது வேலைக்கான மோட்டிவேஷன் வாசகமாக தெரிய அங்கிருந்து கலைந்த மூன்று பேருக்கு மட்டும் அது தங்கள் சொந்த வாழ்க்கைக்காக சொன்ன வாசகமாக தெரிந்தது. அந்த மூன்று பேரும் யார் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆமாம், சரசு என்ற சரஸ்வதி, புவனா மற்றும் கவிதா இம்மூவரும் தங்கள் சொந்த வாழ்க்கையோடு அந்த வாசகம் பொருந்திப் போவதை எண்ணி சிரித்தபடி வேலை செய்ய சென்றனர்.