26-03-2023, 08:45 AM
(This post was last modified: 30-03-2023, 04:22 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
அங்கே அவளது அம்மா சொப்னா,
ஜும்மா சும்மா… தேக் தேக்… ஜும்மா சும்மா… தேக் தேக்…
என்ற பழைய ஹிந்தி பாடலை பாடியபடி, பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அம்மா சந்தோஷமாக பாட்டு பாடியபடி குளிப்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டவள்,
’இந்த பாட்டை எங்கோ கேட்டிருக்கிறோமே…’
என்று யோசிக்க, அவளுக்கு ஆஷிஷ் இதே பாடலை முனுமுனுத்ததும், அப்பா பாடலைப் பற்றி விசாரித்ததும் நினைவிற்கு வருகிறது. ஆஷிஷ் நைட் குடித்துவிட்டுவந்தது; அவன் பூஜிதாவைப் பற்றி விசாரித்தது; அவனும் அம்மா சொப்னாவும் ஒரே பாடலை முனுமுனுத்து பாடுவது; அத்தையிடம் பேசிய பிறகு அவன் முகம் வெளிறியது என அனைத்து புள்ளிகளையும் இணைத்தால், அவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.
அப்போது அம்மா குளித்து முடித்து, தலையில் துண்டு கட்டியபடி வர, பூஜிமா திரும்பிப் பார்க்கிறாள். கடந்த நான்கு ஐந்து மாத பலவித கடுமையான நிகழ்வுகளுக்கிடையே அம்மாவை எப்போதும் சோகமான உணர்வுடனே பார்த்த பூஜிமா, முதன்முதலாக அவள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கிறாள். அம்மாவுடைய முகத்தில் சந்தோஷக் கலை தாண்டவமாடுகிறது. அம்மா சொப்னா மீண்டும்,
ஜும்மா சும்மா… தேக் தேக்… ஜும்மா சும்மா… தேக் தேக்…
பாடலை முனுமுனுத்தபடி துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு போகிறாள். இதை கவனித்த பூஜிமாவிற்கு, என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தும் புரியாமலும் தெரிந்தது. அவள் மனம் ஒன்னும் ஒன்னும் ரெண்டு எனக் கணக்கு போட்டது. குழம்பிய மனநிலையில் பூஜிமா, அம்மா சொப்னா போவதையே ஆவென பார்த்தபடி நிற்கிறாள்.