22-03-2023, 11:48 AM
(19-03-2023, 11:51 AM)Demon king 24 Wrote: கேஸ் என்னாச்சு...? பிரியாவுக்கான நீதி கிடைத்ததா? கற்பழித்த கயவர்களின் கதி என்ன? பிரியாவுக்கு செய்த துரோகத்தை எண்ணி அவள் தோழி வருந்தினாளா? என்பதை கூறவில்லை...... இது முடிவு போல உள்ளது.... இன்னும் தொடரும் சாத்தியக்கூறு உள்ளதா???? அருமையான பதிவு நண்பரே!!! சிறப்பாக வழங்குனீர்கள்....
ஹீரோ ப்ரியாவிடம் காதலைச் சொல்லுவதற்க்கு முன்பு ஒரு இடத்தில் சொல்லியிருப்பேன்.
3 வருடங்கள் ஆகியிருந்தது! ரம்யாவும், ப்ரியாவும் ஒன்று என்பது போல் மாறியிருந்தார்கள். பார்ட் டைம் வேலை தேடி வந்த ப்ரியா, வேலைக்குச் செல்லும் அவசியமே வரவில்லை! அவளின் எல்லாத் தேவைகளும், ரம்யாவால் தீர்க்கப்பட்டது!
ஆரம்பத்தில், இதற்காக மறுகிய ப்ரியா, இப்போதெல்லாம், அம்மா, இன்னைக்கு கடைக்கு போலாமா என்று கேட்கும் அளவிற்க்கு அந்த வீட்டில் ஒன்றியிருந்தாள். இது எத்தனை நாள் நீடிக்க முடியும், ப்ரியா அந்த வீட்டின் நிர்வாகியா, உறவா, என்ன மாதிரியான பிணைப்பு என்று யாரும் யோசிக்கவேயில்லை!
இன்னமும் வழக்கிற்கு தீர்ப்பு வரவில்லை என்றாலும், வழக்கில் ப்ரியா ஜெய்ப்பாள் என்பது உறுதியாகியிருந்தது. அதை விட முக்கியம், இந்த வழக்கு தனக்கு ஒன்றுமேயில்லை என்று ப்ரியா மாறியிருந்தாள். இப்படியாக 3 வருடங்கள் ஓடியிருந்தது!
இடைப்பட்ட காலங்களில், ரம்யா, ப்ரியாவின் நெருக்கம், ராமிற்கே பொறாமையை வரவழைத்தது!
அதற்கு முந்தைய அத்தியாயத்தில் சொல்லியிருப்பேன்
அடுத்த கட்ட விசாரணையில், ப்ரியா தரப்பின் வாதம், எதிராளிகளை அடியோடு துவம்சம் செய்தது! கோவையில் இது மிகப்பெரிய விஷயமாகியது. சோஷியல் மீடியா, லா காலேஜ், அவளுடைய பள்ளியில் எல்லாம் ப்ரியா ஒரு ஐகானாக மாறினாள். பாரதி கண்ட புதுமைப் பெண் என்று பலரும் பேசினார்கள்!
இத்துடன் முடிவடைகிறது. நன்றி!