Adultery மகளிர் தினம்
#87
ச்சே பாவம் அவன் என மனதில் நினைத்துக் கொண்டு அவன் ரிப்ளைக்காக 10 நிமிஷம் காத்து இருந்தேன் ஆனால் அவனிடம் இருந்து பதிலில்லை. மணியை பார்க்க அவனிடம் பேசிக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை மகன் வரும் நேரமாகவே பாத்ரூம் சென்று பேஸ் வாஷ் பண்ணி வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். இரவு ஆகியும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை மெசெஜ் சிங்கிள் டிக்லயே இருந்தது.

என்னாச்சு இவனுக்கு சரி காலையில் கேட்டுக் கொள்ளலாம் என முடிவெடுத்து தூங்கினேன். கனவில் அவன் தனிமையில் அழுவது போல வரவே முழித்தேன் மணியை பார்க்க போனை எடுத்தேன் 2.30 ஆகி இருந்தது. அப்போது அவன் ஞாபகம் வர நெட்டை ஆன் செய்தேன் தொடர்ச்சியாக பல மெசேஜ்கள் அவனிடம் இருந்து வந்திருந்தது.

"அக்கா ரொம்ப தேங்க்ஸ்"

"எனக்கு யாருமில்லைனு நினைச்சேன் இப்ப நீங்க இருக்கீங்கனு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு"

"இனிமேல் நான் கவலை பட மாட்டேன் அழ மாட்டேன் அதான் என்னோட அக்கா நீங்க இருக்கீங்களே"

நான் அனைத்தையும் படித்து விட்டு "குட் பாய்" என மெசெஜ் அனுப்பிட்டு போன் வைக்கும் நேரம் மீண்டும் வைப்ரேட் ஆனது.

"தூங்கலையா அக்கா"

"இல்லடா தண்ணி குடிக்க எந்திச்சேன் அப்ப தான் உன் மெசேஜ் பார்த்தேன்" (பொய் சொன்னேன்) "நீ தூங்கமா என்ன பண்ற"

"எனக்கு எப்பவுமே தூக்கம் வர 3 ஆகும், நல்லா தூங்கி பல வருஷம் ஆச்சு"

"அது அப்ப, இப்ப தான் நான் இருக்கேன்ல போயி நல்லா பிள்ளையா தூங்கு, தூக்கம் வரும் நான் காலையில கால் பண்றேன்"

"சரிக்கா குட்நைட்"

"குட்நைட்னு" நானும் ஸ்மைலி அனுப்பிட்டு தூங்கிட்டேன்

அடுத்த நாள் காலை அவரையும், என் மகனையும் அனுப்பி வைத்துவிட்டு போனை எடுத்து கால் பண்ணலாமா என யோசிக்கும் போது அவன் மெசேஜ் வந்தது

"ஹாய் அக்கா கால் பண்றேன்னு சொன்னீங்க?"

நான் உடனே கால் செய்தேன்

"நூறு ஆயுசு உனக்கு இப்ப தான் உன்னை பத்தி நினைச்சேன் கால் பண்ணிட்ட"

"எனக்கு அவ்வளோ நாள்லாம் இருக்க ஆசை இருக்குறது ஒரு வாழ்க்கை அதை நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிறனும்"

இதை அவன் சொல்லவே என் வாழ்க்கையை நினைத்து சில வினாடிகள் அமைதி ஆனேன்

"ஹலோ என்னாச்சு? இருக்கீங்களா?"

"ம்ம்ம்"

"என்னக்கா சைலண்ட் ஆகிட்டீங்க?"

இவன் கிட்ட நம்ம மனசுல இருக்குற கஷ்டத்தை ஷேர் பண்ணலாமா என யோசிக்க... இல்ல வேணாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்

"ஒன்னுமில்ல சிக்னல் பிராப்ளம்னு நினைக்கிறேன்"

பின் அவன் அவனுடைய பள்ளி, கல்லூரி நாட்களை பத்தி ஷேர் செய்தான்... நானும் அவனுடன் கவலையை மறந்து பேச ஆரம்பித்தேன்

இப்படி அக்கா தம்பியாய் ஆரம்பித்த எங்கள் உறவு கிட்டதட்ட ஒரு மாதம் கடந்து இருந்தது

அன்று அவனுக்கு +2 ரிசல்ட் தேதி

அவன் காலுக்காக எதிர்பார்த்திருந்தேன்

அவன் எனக்கு தான் முதல் கால் பண்ணினான் அவ்வளவு தூரம் நான் அவன் மேல் பாசத்தை காண்டிருந்தேன்

"அக்கா நான் டிஸ்டிகன்ஸன் மார்க் நான் நினைச்ச மாதிரியே நம்ம ஊருலயே எனக்கு பிடிச்சு காலேஜ் கிடைச்சிடும் ரொம்ப ஹாப்பியா இருக்கு"

"ரொம்ப பெருமையா இருக்குடா எனக்கு தான் நீ முதல் தடவை கால் பண்ணி இருக்கேன்னு நினைக்கும் போது"

"என்னோட அம்மாக்கு அடுத்து ஒருத்தர் என்மேல இவ்வளவு அக்கறை, பாசம் காட்ட முடியும்னா அது நீங்க தான்"

"ம்ம்ம்ம் நீ நல்லா மார்க் எடுத்தீனா உன் பேருல அர்ச்சனை கொடுக்குறதா வேண்டி இருந்தேன்டா, நான் போயிட்டு வந்துடுறேன்"

"நானும் வர்றேனே"

"............"

"நம்ம பேச ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகுது.. ஆனா நம்ம நேருல பார்த்து பேசுனதே இல்ல அதுக்குதான் சொன்னேன்"

"அதில்லை......"

"நீங்க என்ன யோசிக்கீறீங்கனு புரியுது, தெரிஞ்ச கோவில் யாராவது பார்த்தா தப்ப நினைப்பாங்கனு யோசிக்கீறீங்க"

"ம்ம்ம்ம்"

"நம்ம அக்கா தம்பி தானே இதுல என்ன இருக்கு"

"அது நமக்கு தெரியும் பாக்குற கண்ணுக்கு தெரியாதே ஆகாஷ்"

"சரி ஒரு ஜடியா நம்ம இந்த ஏரியால உள்ள கோவிலுக்கு போனாதானே பிரச்சினை வேற கோவிலுக்கு போகலாம்"

"ம்ம்ம்ம் சரி"

"அப்ப நீங்க தெரு கார்னர்ல வெயிட் பண்ணுங்க நான் பைக் எடுத்துட்டு வந்துடுறேன்"

"என்கிட்ட ஸ்கூட்டி இருக்கு"

"ம்ம்கும் ஆனா நீங்க அநியாயத்துக்கு பண்றீங்க ஓகே"

கால் கட் பண்ணினேன்... நான் இதுவரை தனியாக தான் எங்கேயும் சென்று இருக்கிறேன்.. இப்போது முதல் தடவை வேறு ஒருவருடன் செல்ல போகிறேன் என நினைக்கும் போது மனது ஒரு மாதிரி படுத்ததது.. அவன் எனக்கு தம்பி தானே அப்புறம் நான் எதுக்கு பயப்படுறேன் ஏதோ தப்பு பண்ற மாதிரின்னு மனதிற்குள் கேட்டுக் கொண்டு ஒரு சிம்பிள் காட்டான் புடவை கட்டி ரெடியானேன்..

வண்டியை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றேன் போகும் வழியில் அவன் தெரு மூலையில் நின்று கொண்டு இருந்தான் என்னை பார்த்ததும் அவன் பைக்கை எடுத்துக் கொண்டு பின்னால் தொடர்ந்தான்.

அவன் வொயிட் கலர் ஃபுல் ஸ்லீவ் ஷர்ட் அதற்கு மேட்சீங் பூளு ஜீன்ஸ் என பார்க்க மிக அழகாக இருந்தான்

கோவில் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு அவனை பார்க்காமல் தவித்து கோவிலுக்குள் செல்ல முயன்றேன்.‌ என்ன தைரியம் அவனுக்கு என்னுடைய கையை பிடித்து இழுத்து நிறுத்தினான். சுற்றிமுற்றி பார்த்தேன் யாரும் கவனிக்கவில்லை

"ஹே என்ன பண்ற கைய விடு"

"இதுக்கு தான் நீயும் கோவில் வானு சொன்னாங்களா?" இதுக்கு நீங்க தனியாவே போயிருக்கலாம்"

"கையை விடு முதல்ல என்று அவனை பார்த்து முறைத்தேன்"

என்னுடைய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கையை விட்டான்

நான் விறுவிறுவென கோவிலுக்கு சென்று சாமி கும்பிட ஆரம்பித்தேன் ஆனால் அவனை காணவில்லை 

பச் ரொம்ப ஓவரா போயிட்டோமோ என அவன் பேருக்கு அர்ச்சனை கொடுத்து பூஜை செய்து கோவில் வாளகத்தில் உட்கார்ந்து அவனுக்கு கால் செய்தேன் அவன் காலை கட் பண்ணி கட் பண்ணி விட்டான்.

"இப்ப நீ கோவிலுகுள்ள வரல என் கூட நீ எப்போவும் பேசாதே" என அங்கிரி ஸ்மைலியுடன் அனுப்பினேன்.

அவன் கோவிலுக்குள் நுழைந்து அங்கும் இங்கும் தேடினான். நான் அவனுக்கு கால் செய்து "ஹே இங்க இருக்கேன் பாரு"

அவன் என் பக்கத்தில் வந்து அமர்ந்தான் உரிமையுடன் அவனுடைய தொடை என்னுடைய தொடையை இடித்துக் கொண்டு இருந்தது. நான் தள்ளி உக்கார நினைத்தேன் வேண்டாம் அதற்கும் இவன் ஹர்ட் ஆவான் என்று அப்படியே உட்கார்ந்தேன்.

கையில் இருந்த விபூதி, குங்குமத்தை அவனிடம் நீட்டினேன்

"ம்ம்ம்" எடுத்துக்கோ என தலையை ஆட்டினேன்

அவன் அதை பார்த்து என்னை பார்த்து எதுவும் பேசாமல் வெறுப்பாக தலையை வேறுபக்கம் திருப்பினான்

இவன் இன்னும் நம்ம மேல கோவமா தான் இருக்கானு நானே விபூதி, குங்குமத்தை அவன் நெற்றியில் பூசி விட்டேன்

அவன் முகத்தில் இப்போது தான் சந்தோஷம் தோன்றியது

"சார்க்கு இப்ப ஹாப்பியா? ரொம்ப கோவம் உடம்புக்கு ஆகாது சார்"

"நீங்க எனக்கு அக்கா தானே ஒரு தம்பி மாதிரி தானே உங்ககிட்ட உரிமை எடுத்து பழகுறேன்"

"யாரு இப்ப இல்லைனு சொன்னா?"

"பின்ன நம்ம ஏதோ வீட்டுக்கு தெரியாம மீட் பண்ற காதலர்கள் மாதிரி ஓவரா பண்றீங்க" என சொல்லி நாக்கை கடித்தான்.

நான் அவனை ஓரக்கண்ணால் முறைத்து பார்த்தேன்

"ஸாரி ஐ நோ, இதுலாம் உங்களுக்கு புதுசுனு அதான் ஒரு மாதிரி கூச்சப்படுறீங்க ட்ரை டு அடாப் தட் ஸ்வ்ட்சூவேசன் நந்தினி"

என்னை அவன் பேரை சொல்லி அழைக்க மறுபடியும் கோபத்துடன் அவனை பார்த்துக் கொண்டே என் நெற்றியில் மீது விழுந்த முடியை எடுத்து காதோரம் நகர்த்தினேன்

"ஓ ஊ னா முறைக்காதீங்க, நான் என்னோட அக்காவை பேரை சொல்லி கூப்பிடுவேன் தேவைபட்டால் வாடி போடினு கூட சொல்லுவேன்"

இதுவரை எனது கணவர் கூட என்னை அப்படி கூப்பிட்டதில்லை அந்த வார்த்தைக்கு ஏங்கி கொண்டு இருந்தவள் போல் நான் வெட்கத்தில் வந்த சிரிப்பை மறைத்து கோவத்தை கஷ்டப்பட்டு வர வைத்துக் கொண்டு

"சொல்லுவ சொல்லுவ அது வரை என் கை பூபறித்து கொண்டு இருக்குமா?" பக்கத்தில் இருந்த அவனுடைய தொடைய பிடித்து கிள்ளினேன்‌ "சொல்லுவியா? சொல்லுவியா?"

"ஆஆஆஆஆ அக்கா விடுங்க வலிக்குது"

"ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்" என தொடையை விடுவித்தேன்

"லூசாடி நீ ஜீன்ஸ்ல கிள்ளுனா எப்படி வலிக்கும் போடி நந்தினி" என சொல்லிவிட்டு ஓடினான்

இப்போது வெட்கத்தில் நான் சிரித்தே விட்டேன் அவன் அதை பார்க்கவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு ஜோடி "புதுசா கல்யாணம் ஆனவங்க போல"னு சொல்லி எங்களை பார்த்து சிரிக்கும் சத்தம் என் காதில் கேட்டது.

எனக்கு அதைக் கேட்டு ஷாக் ஆனது ஆனாலும் மனதில் ஏதோ ஒரு மூலைக்கு அது பிடித்து இருந்தது ஏனெனில் கல்யாணம் ஆன நாள் முதல் இப்போது வரை நான் என் கணவனுடன் இவ்வாறு இருந்ததில்லை ஆனால் அந்த ஏக்கம் கொஞ்ச கொஞ்சமாக ஆகாஷ் காட்டும் அன்பால் தொலைந்து கொண்டு இருப்பது புரிந்தது.

மீண்டும் கடவுள் முன் சென்றேன் "கடவுளே என்ன சத்திய சோதனை, இதுவரை இல்லாத மாதிரி என்னுடைய எண்ணங்கள் அலை பாய்வது ஏன்? நானும் அவனும் ஒரு அக்கா தம்பி மாதிரி தான் அப்படிதான் பழகுகிறோம் இருந்தும் எனக்குள் ஒரு சொல்ல முடியாத ஒரு வகை உணர்வு அவனை பார்க்கும் போதும், அவனுடன் பேசும் போதும், பழகும் போது என்னுள் ஏற்படுவதை உணர முடிகிறது. இது தான் அக்கா தம்பி பாசமா இல்லை வேற ஏதாவது ஒன்றா? என கடவுளிடம் புலம்பி கோவிலை விட்டு வெளியே வந்தேன் அப்போது அவன் பார்க்கிங்கில் கையை பின்னாடி கட்டி நின்று கொண்டு இருந்தான்.

பொய்யான கோவத்துடன் அவனை முறைத்துக் கொண்டே அவனை நோக்கி நடந்தேன்

பின்னால் வைத்திருந்த கையை முன்னாடி கொண்டு வந்தான் அதில் மல்லிகைப்பூ இருந்தது

எனக்கு அதை பார்த்து ஷாக் அப்படியே நின்றிருந்தேன்

"என்னக்கா பாக்குறீங்க கோவில் வந்துட்டு தலையில பூ இல்லாமல் போன எப்படி இந்த பூ வைச்சுக்கோங்க... ஆல்ரெடி நீங்க அழகு இந்த பூ உங்க அழகுக்கு அழகு சேர்க்கும்"

நான் எப்போதும் கோவில் சென்றால் பூ வாங்குவேன் ஆனால் இன்று நான் என்னுடைய மனப்போராட்டத்தினால் மறந்துவிட்டேன் ஆனால் இவன் இப்படி என்மேல் அக்கறை எடுத்து ஒவ்வொரு செயலும் என்னுடைய வீக் பாயிண்ட்லயே அடிப்பது போல இருந்தது.‌ எதுவும் பேசாமல் பூவை வாங்கி அவன் முன்னாடியே கையை பின்னாடி கொண்டு சென்று தலையில் பூ வைக்க கையை தூக்கினேன்

அப்போது என்னுடைய மார்பு அங்கங்களையும், விலகி இருந்த சேலையில் தெரிந்த எனது எலுமிச்சை பழ நிற இடுப்பையும் சில வினாடிகள் பார்த்து விட்டு தலையை திருப்பினான். நான் அதை கவனித்து விட்டு என்னுடைய சேலையை சரி செய்தேன்.

"அக்கா என்னைய தப்பா எடுத்துக்காதீங்க...‌ அக்காவை இப்படி பேரு சொல்லி கூப்பிடுறது வாடி, போடின்னு சொல்றது சண்டை போடுறது இதுலாம் சகஜம் எல்லாரு வீட்லயும் நடக்குறது தான், உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் அப்படி சொல்லல"

"ம்ம்ம்" (லூசு புடிக்கலைன்னு சொன்னேன்னா, நீயாவது என் மேல உரிமை எடுத்து அன்பு காட்டுறியே அது போதும் டா"

"என்னக்கா யோசிக்கீறீங்க?"

"ஒன்னுமில்லடா நேரம் ஆச்சு லஞ்ச் ரெடி பண்ணனும்"

"ஆமா உங்க வீட்டுல பத்து பேரு இருக்காங்க பிரீபேர் பண்றதுக்கு"

புரியாமல் அவனை பார்த்தேன்

"இப்ப நீங்க லஞ்ச் ரெடி பண்ணா யாரு சாப்படுவா?"

"நான் மட்டும் தான்"

அதுக்கு எதுக்கு லஞ்ச் ரெடி பண்ணிட்டு இன்னைக்கு என்னோட ட்ரீட் வாங்க ஹோட்டலுக்கு போகலாம்

"அது... அது வந்து"

"என்ன வந்து போயினு இன்னைக்கு லஞ்ச் என்னோட ட்ரீட் அவ்வளவுதான்"

"ம்ம்ம் சரி"

"குட் கேர்ள் நான் வண்டியை எடுத்துட்டு முன்னாடி போறேன் என்னைய பளோவ் பண்ணுங்க"

நான் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அவன் பின்னால் தொடர்ந்தேன்.‌ அவன் ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் வண்டியை நிறுத்தினான்.

"எதுக்கு டா உனக்கு வீண் செலவு, அதுவும் இவ்வளோ பெரிய ஹோட்டல்-ல"

"நான் டீரீட் வைக்க உங்களை தவிர வேற யாரு இருக்கா சும்மா வாங்க நந்தினி"

அதில் ஒரு பிரைவேட் ரூம் டேபிளில் நாங்கள் போயி அமர்ந்தோம். முதல் தடவை இந்த மாதிரி இடத்திற்கு வருவதனால் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டு இருந்தேன்"

அப்போது வெயிட்டர் மெனு கொண்டு வரவே

"இந்தாங்க அக்கா ஆர்டர் பண்ணுங்க"

"நான் எனக்கு பிடித்த சிலவற்றை ஆர்டர் பண்ணினேன் நான் ஆர்டர் பண்ணினேனோ அதையே அவனும் ஆர்டர் செய்தான்"

ஆர்டர் வரும் வரை அவனுடைய மார்க்ஸ், சேர போகும் காலேஜ் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்

ஆர்டர் செய்த உணவுகள் வரவே அவன் வெயிட்டரை போக சொல்லி விட்டு அவனே எனக்கு பரிமாறினான். இதுவரை நான் தான் என் வீட்டில் மற்றவர்களுக்கு பரிமாறி இருக்கிறேன் ஆனால் இப்போது எனக்காக ஒருவன் பரிமாறுவது எனக்கு பிடித்திருந்தது. நான் சாப்பிடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"அக்கா சாப்பிடுங்க"

"நீயும் உட்கார்ந்து சாப்பிடு டா"

நீண்ட நாள்களுக்கு பின் மனதார சாப்பிட்டதால் வயிரும் மனமும் நிறைந்திருந்தது

"பேசாம நீயே எனக்கு..." என சொல்ல வந்து வார்த்தைகளை முழங்கினேன்

"என்ன?"

"இல்ல நீயே எனக்கு தம்பியா பொறந்திருந்தா ரொம்ப நல்லா இருந்து இருக்கும்"

"இப்ப மட்டும் என்னக்கா நான் உங்க கூட பொறந்த தம்பி தான்"

"காலையிலயே சொல்லனும்னு நினைச்சேன். இந்த டிரஸ்ல நீ ரொம்ப நல்லா ஹெண்ட்சம்மா இருக்க ஆகாஷ்"

"தேங்யூ" என சொல்லி சிரித்தான்

"நீ எனக்கு பரிமாறிட்ட இதே மாதிரி என் கையால சமைச்சு உனக்கு ஒரு நாள் பரிமாறுவேன் டா"

"ஆங்க்க் நீங்க தானே தெருவுல இருக்குற கோவிலுக்கு கூட வரவே பயப்படுறீங்க இதுல உங்க வீட்ல விருந்தா" என கிண்டலடித்து சிரித்தான்

"போடா லூசு"

இருவரும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு விரைந்தோம். மணி மதியம் 2 ஆகி இருந்தது அப்படியே பெட்டில் படுத்துக்கொண்டு இன்னைக்கு நடந்ததை எண்ணி அப்படியே தூங்கினேன்

- தொடரும்

(கதை எப்படி போகுது? நல்லா போகுதா? இதே flowல போனா நல்லா இருக்குமா? இல்ல ஏதாவது மாற்றம் கொண்டு வரனுமா? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்)
[+] 5 users Like Nandhinii Aaryan's post
Like Reply


Messages In This Thread
RE: மகளிர் தினம் - by RARAA - 10-03-2023, 02:34 PM
RE: மகளிர் தினம் - by RARAA - 16-03-2023, 12:49 AM
RE: மகளிர் தினம் - by Nandhinii Aaryan - 21-03-2023, 03:21 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 28-03-2023, 11:16 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 14-04-2023, 07:34 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 10-05-2023, 07:26 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 12-05-2023, 10:12 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 19-05-2023, 10:26 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 26-05-2023, 09:08 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 03-06-2023, 11:55 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 13-06-2023, 09:24 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 28-06-2023, 09:31 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 30-06-2023, 06:44 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 16-09-2023, 05:08 PM
RE: மகளிர் தினம் - by jaksa - 15-10-2023, 04:37 PM



Users browsing this thread: 13 Guest(s)