20-03-2023, 08:22 PM
(This post was last modified: 23-06-2023, 05:38 AM by Geneliarasigan. Edited 9 times in total. Edited 9 times in total.)
Episode 89
டேய் சம்பத் அந்த பொண்ணு கூட வருவது யாருடா அது ? அந்த ஆள் காரில் வேறு இந்திய தேசிய கொடி வேறு இருக்கு .
தெரியல பலராம்,
டேய் இந்த பொண்ணுக்கு பெரிய இடத்தில் ஆள் ஏதாவது தெரியுமா ?சிக்கல் ஏதாவது வந்து தொலைக்க போகுது.
எனக்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியல பலராம் !
சரி வா போய் பார்ப்போம் .
ம் சொல்லுங்க இன்ஸ்பெக்டர் என்ன விசயம் என்று ஷெட்டி கேட்க,
சார் நீங்க யாரு என்று நான் தெரிஞ்சுக்கலாமா ?
என்னை உனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை இன்ஸ்பெக்டர்,ஏன் என்றால் நான் கர்நாடகாவில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர்.
எஸ் சார் என்று இன்ஸ்பெக்டர் பலராம் உடனே salute அடிக்க,
அப்பொழுது தான் ஸ்ருதிக்கு உண்மை தெரியவர ,கால்கள் தானே பின்வாங்கி அவனிடம் இடைவெளியை அதிகப்படுத்தியது.
இன்ஸ்பெக்டர் பலராம் ஷெட்டியை பார்த்து ,சார் இந்த பொண்ணு வேலை பார்த்த இவர் வீட்டில் இருந்து 40 பவுன் நகை திருடி கொண்டு வந்து விட்டது சார்.
அப்படியா இன்ஸ்பெக்டர் ,ஷெட்டி கேக்க
ஆமா சார்
சரி complaint எங்கே?
சார் அது வந்து,
சரி ஒரு பொண்ணை arrest செய்ய வேண்டும் என்றால் பெண் போலீஸ் இருக்கணும் ,அவங்க எங்கே?
அது வந்து சார் என்று பலராம் இழுக்க,
இங்கே பாருங்க இன்ஸ்பெக்டர் ,இந்த பொண்ணு அவள் காதலனால் ஏமாற்றப்பட்டு ,நேற்று அவன் இடம் இருந்து தப்பித்து என்னிடம் வந்து அடைக்கலம் கேட்டாள்.இந்த பெண் நினைத்து இருந்தால் என்னிடம் உள்ள பணம் அல்லது நகையை எளிதாக ஏமாற்றி எடுத்து சென்று இருக்க முடியும்.இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது.கண்டுபிடிப்பதும் கடினம்.
ஆனால் நான் செய்த சிறு உதவிக்கு கூட தன்னால் முடிந்த அளவு பிரதி உபகாரமாக எதாவது எனக்கு திருப்பி தர நினைக்கிறாள்.நானாக சாப்பிடுவதற்கு வாங்கி கொடுத்தால் மிக மிக தயக்கத்துடன் தான் ஏற்று கொள்கிறாள்.இந்த பெண் நிச்சயமாக திருடி இருக்க வாய்ப்பே இல்லை.நான் இந்த பெண்ணுக்கு முழு உத்திரவாதம் தருகிறேன். என்று ஷெட்டி கூற
ஷெட்டி கூறியவற்றை கேட்டு ,ஸ்ருதிக்கு கண்களில் நீர் கசிந்தது.
சாரு ,கற்பகத்தை பார்த்து ,அம்மா அந்த uncle யாரு?
ஒரு நிமிஷம் சாரு ,அவரை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு !என்று கற்பகம் யோசிக்க நினைவில் வரவில்லை.
இன்ஸ்பெக்டர் ஷெட்டியிடம் ,சார் எதுக்கும் ஸ்டேஷன் வரை மட்டும் வந்து ஒரு கையெழுத்து போட சொல்லுங்கள் .அது போதும்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன் இன்ஸ்பெக்டர்,இருங்க உங்கள் டிஜிபி கிட்ட ஃபோன் போட்டு தரேன்.
அய்யோ அதெல்லாம் வேண்டாம் சார்,வாடா சம்பத் கிளம்பலாம் .
டேய் என்னடா மச்சான், இப்படி அம்போ என்று விட்டிட்டு போற?
டேய் சம்பத் வாடா பேசாம கிளம்பி விடலாம் ,அந்தாளு டிஜிபி கிட்ட பேசுகிறேன் என்று சொல்றான். பொய் case என்று தெரிந்தால் அவ்வளவு தான் என் வேலைக்கே வேட்டு வந்து விடும் என்று கிளம்ப,
சம்பத் ,ஸ்ருதியை முறைத்து கொண்டே , இருடி இப்போ நீ தப்பி விடலாம்,உன்னை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் என்று முணுமுணுத்து கொண்டே சென்றான்.
இன்ஸ்பெக்டர் அகன்றதை பார்த்து ,கருணாகரன் தைரியமாக வந்து ஸ்ருதியை கைபிடித்து
வா ஸ்ருதி வீட்டில் உள்ளே போகலாம் என்று இழுக்க
நான் வர மாட்டேன் பெரியப்பா ,வந்தால் என்னை அந்த கிழவனுக்கு கட்டி வைத்து விடுவீர்கள் என்று அழ
ஷெட்டி ,சார் ஒரு நிமிசம் நான் பேசணும் என்று கூற,
ஐயா எங்க பொண்ணை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி,இது எங்க குடும்ப விஷயம்,நீங்க உங்க வேலையை பார்த்து கொண்டு போங்க,
ஸ்ருதி ,சார் பிளீஸ் என்னை காப்பாற்றுங்கள் ,இல்லை என்றால் என்னை அந்த கிழவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்று கெஞ்ச.
ஸ்ருதியின் மற்றொரு கையை ஷெட்டி இப்போது பிடிக்க,
கருணாகரன் அதிர்ச்சியுடன் ,சார் அவ கையை விடுங்க ,இல்லை என்றால் உங்க மரியாதை கெட்டு விடும்.
அப்பொழுது அங்கு வந்த கிழவன் குடும்பத்தார் ,சார் இது எங்க குடும்ப விசயம் நாங்க பேசி தீர்த்து கொள்கிறோம் .நீங்க வெளியே போங்க
இவர்கள் பேச்சில் நடுவில் வந்த கற்பகம் சார் அவளை வளர்த்த நானே சொல்றேன், என் பொண்ணை உங்க கூட கூட்டி போங்க ,இவங்க என் பொண்ணு வாழ்க்கையை நாசம் செய்து விடுவார்கள்.
ஏய் கற்பகம் உனக்கு ஒன்னும் தெரியாது,நீ உள்ளே போ என்று கன்னத்தில் அறைய
அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. கருணாகரன் கையை ஸ்ருதி உதறி ,
" பெரியப்பா என் அம்மா மேல கையை வைத்தீர்கள் என்றால் அவ்வளவு தான். இவ்வளவு நாள் நான் உங்களிடம் பொறுத்து பொறுத்து போனது எல்லாம் என் அம்மாவிற்காக மட்டுமே .நான் இப்பொழுது மேஜர் ,எனக்கு சுயமாக முடிவெடுக்கும் திறன் உண்டு. என்னை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது"
அம்மா ,நான் உங்களுக்காக பெருமாள் கோயிலில் காத்து இருக்கிறேன் .நீங்க வாங்க.
ஸ்ருதி ஷெட்டியை நோக்கி ,சார் எனக்கு ஒரு கடைசியாக ஒரு உதவி,என்னை ஒரு ladies hostel லில் மட்டும் சேர்த்து விட முடியுமா ?
சரி ,வா பெருமாள் கோயில் சென்று பேசி கொள்ளலாம்.
யாரும் இல்லாத இடத்தில் ஷெட்டி மற்றும் ஸ்ருதி சென்று அமர,
ஷெட்டி ஸ்ருதியிடம் ,உன்னை ஒரு ladies hostel லில் இப்பொழுது நான் சேர்த்து விட்டாலும் உன் பிரச்சினை தீராது. உன்னை பார்த்து கொண்ட சென்ற சம்பத் கண்களில் அப்பட்டமாக வெறி தெரிந்தது.கண்டிப்பாக வேறு ஒரு வழியில் வந்து உன்னை தொந்தரவு செய்வான்.உன் பெரியப்பா அங்கு வந்து தகராறு செய்தால் உன்னால் என்ன செய்ய முடியும்.அந்த கிழவன் வேறு பணபலம் உடையவனாக இருக்கிறான்.இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒரு வலிமையான பாதுகாப்பு உனக்கு தேவை.உன் பிரச்சினை தீர்வதற்கும் ,என் பிரச்சினை தீர்வதற்கும் ஒரே ஒரு வழி தான் உள்ளது .
அது என்ன வழி சார்?
அதற்கு நாம் ஒரு ஒப்பந்தம் போட்டு கொள்ளலாம்.அது உனக்கும் benefit,எனக்கும் benefit
ஷெட்டி கூறிய அந்த ஒப்பந்தத்தை கேட்டு ஸ்ருதி பயங்கர அதிர்ச்சி அடைந்தாள்.
ஷெட்டி அவளிடம் கூறியது என்ன?ஷெட்டி கூறிய அந்த ஒப்பந்தத்திற்கு ஸ்ருதி ஒப்பு கொள்வாளா?ஸ்ருதியினால் ஷெட்டிக்கு ஆக வேண்டிய காரியம் என்ன ? வரும் பகுதிகளில்.
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ
இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா