18-03-2023, 12:50 PM
(18-03-2023, 12:19 PM)Ananthakumar Wrote: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நான் ஒரு கதையை எழுதி பதிவு செய்த சாதாரண ஆசிரியர் மற்றும் ரசிகன் என்ற முறையில் ஒரு சில கருத்துக்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.
புதிதாக கதையை எழுதும் ஆசிரியர்கள் முடிந்த அளவுக்கு விமர்சனங்கள் வரவில்லை என்று தளர்ந்து போய் விடாமல் அடுத்தடுத்த சுவாரஸ்யமான கதைகளை எழுதினால் கண்டிப்பாக விமர்சனங்கள் வரும்.
ஒரு சில பெயர் குறிப்பிட விரும்பாத பெரிய கதாசிரியர்கள் கூட ஒரு சில நேரங்களில் தாங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் ஏதோ தங்கள் மனதில் நினைத்து கொண்டு மற்ற ஆசிரியர்களை நான் அவரை போல இல்லை என்று கூறி தரம் தாழ்த்தி விடுவது மனதிற்குள் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
அதேபோல தாங்கள் இந்த அளவுக்கு எதை மையமாக வைத்து பயணம் செய்து வந்தோம் என்பதை மறந்து ஒருசில நண்பர்களை மகிழ்ச்சி படுத்த தங்கள் கதைகளின் தரத்தை கூட மறைத்து கொண்டு மற்றவர்களை வருத்தம் கொள்ள வைப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
முதலில் ஆசிரியர் கதையை தீர்மானம் செய்து விட்டு கதையை எழுத ஆரம்பிக்கலாம்.அதில் வரும் சிறு சிறு தவறுகள் அல்லது எதிர் மறை விமர்சனங்களை முடிந்தால் அதே இடத்தில் அல்லது பெர்சனல் மெசேஜ் அனுப்பி விளக்கம் கொடுங்கள்.அதை விட்டு விட்டு கதையை இடையில் விட்டு விட்டு ஓடி ஒளிந்து கொள்ளும் கோழைகளாக இருக்காதீர்கள்.
அதேபோல கதையை படிக்கும் நண்பர்கள் ஒரு கதாசிரியர் எந்தவொரு ஊதியமும் இல்லாமல் உங்களுடைய கருத்துக்களை மட்டுமே மூலதனமாக வைத்து கதையை எழுதி பதிவு செய்வதை மனதில் வைத்து கொண்டு ஒரு சிறிய விமர்சனங்கள் அல்லது லைக்குகள் அல்லது கதையின் தரத்தை ரேட்டிங் செய்வது போன்ற சிறு சிறு ஊக்கத்தை கொடுப்பதின் மூலம் அவர்களுக்கும் எந்தவொரு வருத்தமும் ஏக்கமும் இல்லாமல் கதையை நல்ல முறையில் எழுதி முடிக்க உதவியாக இருக்கும்.
நான் என்னுடைய மனதில் தோன்றிய கருத்துக்களை மட்டுமே கூறி இருக்கிறேன்.நான் கூறிய கருத்துக்கள் யாருக்கும் வருத்தமாக இருந்தது என்றால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே.
This the a great suggestion Nanba.
I normally respect the author and his imagination and moreover his intention of spending his/her valuvable time just for entertaining us .
I always give some suggestion and only request them to consider (not forcing )
It is author wish to use it or not.
i am looking forward to read more stories and put comment