Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
அத்தியாயம் 14 - இரு உடல்கள் ஒன்றாக இணைத்து

 
பரணி வீட்டில், அருண் இவ்வளவு விரைவில் திரும்பி வந்துவிட்டது சுசீலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் இன்னும் ஒரு வாரம் கழித்துதான் வருவான் என்று எதிர்பார்த்து இருந்தாள். வினோத்தை கொல்லும் அந்த நேரத்தில் அருணுக்கு ஏற்பட்ட காயம் எப்படி இப்போ இருக்கு என்று அக்கறையுடன் பார்க்க நினைத்தாள் அனால் அவன் முழு நீள கை ஷர்ட் அணிந்து இருந்ததால் அதை பார்க்க முடியவில்லை.
 
"நீ சீக்கிரம் திரும்பி வந்துட்ட? ஏதாவது பிரச்சனையா? எல்லாம் சரி தானே?” சுசீலா கவலையுடன் கேட்டாள்
 
"பிரச்னை இல்லை, நான் திரும்பி வராமல் அதிக நேரம் காணாமல் போனால் இப்போதைவிட அதிக சந்தேகத்தை எழுப்பும் என்று நினைத்தேன். அதுனால் தான் வந்துட்டேன்."
 
"எனக்கு மகிழ்ச்சி தான் பா, சுபா அவள் சித்தப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணினாள்."
 
“சுபா எப்படி இருக்கிறா? இப்போது அந்த தேவடியா பையன்  இறந்துவிட்டதால் அவளிடம் ஏதாவது மாற்றம் உண்டா? குறைந்தபட்சம் அவளுக்கு இப்போது கொஞ்சம் நிம்மதியாவது இருக்க? அருணின் குரலில் அண்ணனின் மகளின் நலனில் அவனின் அக்கறை தெரிந்தது.
 
அண்ணன் பரணியைப் போல், அருண் திருமணம் செய்து குடும்பம் நடத்த நினைத்ததில்லை. மரணம் தனது தொழிலில் எப்போதும் துணையாக ஒன்று, மேலும் ஒரு மனைவி மற்றும் குடும்பம் இருப்பது அவனை பலவீன நிலைக்கு தள்ளும். அது அவனுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும். இப்போது முப்பத்தைந்து வயதாகியும் அவனுக்கு எந்த பெண்ணுடன் நிரந்தரமான உறவை ஏற்படுத்த எண்ணம் இல்லை. உடலை விற்றக்கும் பெண்களுக்கு சில ஆயிரம் ரூபாயை எறிவதன் மூலம் அவனது பாலியல் தேவைகள் பூர்த்தியாகும். அவனுக்குஎன்று இருக்கும் ஒரே குடும்பம் அவன் அன்னான் குடும்பம். அவனுக்கு தன் அன்னான் மகள் சுபா மீது ரொம்ப பாசம் இருந்தது.
 
"அவள் இன்னும் தனக்கென ஒரு சோகமான உலகில் இருக்குற. அனால் இப்போது அவள் மனசோர்வில் இருந்து மெதுவாக வெளியே வருகிறாள் என்று சிறு சிறு அறிகுறி தெரியாது."
 
சுசீலா இப்படி கூறியும் அவள் மகளின் நலத்தில் அவளுக்கு கவலை இருப்பது அவள் முகத்தில் தெரிந்தது.
 
"நான் சீக்கிரமாக இங்கு வந்ததற்கு இது இன்னொரு காரணம். அவளுடைய நலனுக்காக அவள் ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்."
 
"அது சரியானது என்று நினைக்கிறிய? சுசீலா எச்சரிக்கையுடன் கேட்டாள். "என்ன நடந்தது என்று தெரியும்தானே, மருத்துவர் மூலம் போலீஸ் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டால் என்ன செய்வது?"
 
"கவலைப்பட தேவையில்லை, நான் இதை பற்றி விசாரித்தேன்," என்று அருண் அண்ணியிடம் கூறினான். “மருத்துவர்கள் தங்களுக்கும் தங்கள் பேஷன்  இடையில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்திருப்பார்கள். நோயாளியின் அனுமதி இல்லாமல் எதுவும் வெளிப்படாது."
 
"இருந்தாலும் இது கொலை குற்றம் சம்மந்தப்பட்டது. எப்படி டோக்ட்டர் இதை போலீசிடம் சொல்ல மாட்டார்? சுசீலாவுக்கு இன்னும் நம்பிக்கை இல்லை.
 
"நாம எல்லாவற்றையும் மருத்துவரிடம் சொல்ல வேண்டியதில்லை, அவள் கற்பழிக்கப்பட்டாள் என்று மட்டும் சொல்லுவோம்." அவனின் மிகவும் பாசமான அவன் அண்ணன் மகள் கற்பழிக்கப்பட்டாள் என்று சொல்லும் போது இன்றும் கூட அவன் இதயத்தில் ஒரு கத்தி சொருகியதுபோல ஒரு உணர்வு.
 
சுசீலாவின் சந்தேகம் இன்னும் தெளிவாகத் தெரிந்தது, ஆனால் அவள் மகள் தன் மனப்பிரச்னைகளில் இருந்து விடுபட வாய்ப்பு இருக்குது என்ற எண்ணத்தால் இதையும் முயற்சி செய்யலாமா என்று எண்ணம் வந்தது. "பாலியல் பலாத்காரம் நடந்ததை போலீசில் புகார் செய்ய மருத்துவர் சொல்ல மாட்டார்களா?"
 
"அநேகமாக அதைச் செய்ய தான் எங்களை செய்ய சொல்வார்கள், ஆனால் அது இன்னும் நம்மைப் முடிவு. கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்கள் முக்கால்வாசி அதை ரிப்போர்ட் செயதில்லை. காரணம் நம் சமூகத்தில் பெண்ணுக்கு இது ஒரு பெரிய களங்கம் என்று கருத்துறார்கள்.".
 
அருணுக்கு தெரியும் மிகவும் குறைவான சதவீத பெண்கள் தான் அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்று போலீசிடம் புகார் கொடுப்பார்கள். இதிலும் கோர்ட்டுக்கு சென்று அந்த ஆண்கள் தண்டனை பெறுவது அதைவிட குறைவு. சுபா, வினோத் கற்பழிச்ச முதல் பெண் அல்ல. சொல்லப்போனால் அவனும் அவன் அண்ணனும் கூட  சில பெண்களை கற்பழித்து இறுக்கர்கள். அனால் அந்த பெண்கள் மற்ற குற்ற குரூப் சேர்ந்த பெண்கள் அல்லது ஒழுக்கம் இல்லாத பெண்கள். அவர்களும் குற்ற செயலில் ஈடுபடும் பெண்கள். அந்த பெண்கள் இதையெல்லாம் தொழில் வரும் சங்கடங்கள் என்று அதை பெரிதாக எடுத்துக்கொள்பவர்கள் இல்லை. அனால் சுபா அப்படி பட்ட்டவள் இல்லை. 
 
"இன்னொரு விஷயம், நம்ம சொந்த ஊரில் நான் ஒரு வீடு வாங்கிக்கேன். அது உங்க பெயரில் ரேகிச்டேர் பண்ணுறேன் அண்ணி. உங்க அக்கௌன்ட் மற்றும் சுபா அக்கௌன்ட்டில் போதுமான பணம் போடுறேன். உங்கள் வாழ்நாள் பூராக வாழ்வதற்கு போதும் அந்தப்பணம். அது மட்டும் இல்லை, சுபா கல்யாணத்துக்கும் அது போதுமாக இருக்கும்."
 
சுசீலா அவள் கணவனனின் தம்பியை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
 
"நீங்களும், சுபாவும் இனிமேல் இங்கே இருக்க வேண்டாம் அண்ணி."
 
சுசீலாவால் அவள் கேட்டதை நம்பமுடியவில்லை. "உங்களுக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது, தம்பி. இப்போது நமக்கு இருக்கும் ஒரே சொந்தம் நீ மட்டும் தான். எப்படி தனியாக உன்னைவிட்டு போவது?" சுசீலா படபடவென்று கேள்விகள் கேட்டாள்.
 
"இல்லை அண்ணி, நீங்க இனியும் இங்கே இருப்பது நல்லதில்லை. சுபாவுக்கும் இதையெல்லாம் மறப்பதற்கு ஓர் மற்றம் தேவை. முடிந்தபோதெல்லாம் நான் உங்க இருவரையும் வந்து பார்க்குறேன்."
 
"அது சரி அனால் எப்படி இவ்வளவு பணம் உனக்கு கிடைத்தது."
 
சில நாட்களுக்கு முன்பு அந்த மர்ம மனிதனின் தொலைபேசி அழைப்பை அருண் நினைவு கூர்ந்தான். “நல்லபடியா காரியத்தை முடிச்சே. எந்த பிரச்சனையும் இல்லாமல் நீ வினோத்தை கொன்றதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்," என்று அந்த மர்ம நபர் கூறினார்.
 
பின்னர் அவர் அருணிடம் ஒரு இடத்தை பற்றி கூறி அந்த இடத்திற்கு வருமாறு கூறினார். அருண் மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த இடத்துக்கு சென்றான். ஏற்கனவே ஒரு கணிசமான தொகை பெற்றிருக்கான். இப்போது காரியம் முடிந்து பின்னர் எதுவும் டபிள் க்ரஸ் நடந்திரா கூடாது என்ற அச்சம். அவன் அங்கே யாரையும் சந்திக்கவில்லை, பார்க்கவில்லை அனால் அவனுக்காக ஒரு பெரிய சூட்கேஸ் அங்கே இருந்தது. அதை தொறந்து பார்க்க அவன் கற்பனை செய்யாத அளவுக்கு கட்டு காட்டாக பணம் இருந்தது. எல்லாம் இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள். ஒன்னு அருணுக்கு புரிந்தது. அவனை ஒன்னும் செய்யாமல் விட்டதற்கு எதிர்காலத்தில் அவனை தொடர்பு கொண்டு இது போன்ற வேறு வேலைகள் இருந்தால் அவன் மூலம் அதை செய்ய நினைப்பார்கள்.
 
"வினோத் கொன்றதற்கு ஏராளாமான பணம் கிடைத்தது. உண்மையில் நான் இதை இலவசமாக கூட செய்திருப்பேன். பார்க்க போனால் நம்மைவிட, வேற ஒருவர் வினோத் சாகவேண்டும் என்று ரொம்ப விரும்பி இறுக்கர்கள்."
 
அந்த நேரத்தில் தரணாவும் வஜேந்திரவும் டிசிபி பாலுடன் சந்தித்துக் கொண்டிருந்தனர். இதுவரையில் தங்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அவரிடம் ரிப்போர்ட் செய்தார்கள்.
 
"வினோத் கொல்லப்படுவதற்கு முன்பு கடைசியாக இருந்த இடத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம், மேலும் இந்த குற்றம் நடந்த நேரத்தை நிறுவியுள்ளோம்" என்று தரணா அவரிடம் கூறினார்.
 
"சோ, அவள் இடத்தை அவள் தோழிக்கு கொடுத்ததை தவிர பிரேமாவதிக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? என்று DCP பால் கேட்டார்.
 
"நான் அப்படித்தான் நினைக்கிறேன் சார் ஆனால் இப்போது லேகாஸ்ரீயின் கணவர் ராகேஷ் சந்தேகத்திற்குரியவராக மாறி இருக்கார்." என்று தரணா கூறினார்.
 
"யார், அந்த அரசியல்வாதியா?"
 
"ஆமாம், அவர் ஏதோ பல மாதங்களுக்கு முன்பு வினோத்தை அடிக்கடி சந்தித்திருக்கார். அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராகேஷ் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் அனைத்தையும் நாங்கள் பார்க்க ஆரம்பித்தோம், ”என்று சொல்லிவிட்டு தரணா நிறுத்தினார்.
 
"சரி, லிசென் பண்ணுறேன், மேலும் சொல்லு," என்று அவரது உயர் அதிகாரி, பால் கூறினார்.
 
"அப்படி பார்க்கும்போது ஒரு சம்பவம் நமக்கு ஸ்ட்ரைக் பண்ணியது."
 
"அது என்ன?" என்றார் DCP.
 
"அவரது கட்சியின் சக்திவாய்ந்த இளைஞர் தலைமைப் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதே நடந்த மிக முக்கியமான விஷயம்."
 
"அதனால்?" பால் கேட்டார்.
 
"விஷயம் என்னவென்றால், அவர் அந்த பதவிக்கு தேர்ந்து எடுப்பதில் முன்னிலையில் இல்லை, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவரது முக்கிய போட்டியாளருக்கு திடீரென அவரது மகன் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் டிஸ்ட்ரிபூஷேனில் ஈடுபட்டதாக ஒரு ஊழல் வெடித்தது, அது அவரது பதவிக்கான வாய்ப்புகளை முற்றிலுமாக அழித்தது. இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று எனக்கு தோன்றவில்லை," என்றார் தாரண.
 
"ஹ்ம்ம்...இந்த பிரச்சனையில் அவருக்கு இருந்த போட்டியாளரை மாட்டவைக்க தான் ராகேஷ் வினோத்தை ஹயேர் பண்ணி இருக்கார் என்று நீ நம்புறியா?"
 
"யெஸ் சார்."
 
“அப்படியானால் ராகேஷ்க்கு வினோத் மீது கோபம் ஏன் வரவேண்டும்? வினோத் அவன் விரும்பியதை தானே அவனுக்காக செய்தான்?"
 
“வினோத்தை அவன் மனைவி லேகா முதன்முதலில் அவன் அவள் கணவனுடன் இருந்தபோது பார்த்தாள். அவள் கணவன் இருந்தபோதும் அவன் எப்படி தைரியமாக தன் கண்களால் அவளை  ஸ்ட்ரிப் செய்வான் என்று அவள் எங்களிடம் சொன்னாள். அவளுடைய கணவரும் அதைக் கவனித்திருக்கலாம், அதனால் அவர்கள் இருவர் மீது ஒரு கண் வைத்திருந்திருக்கலாம்," என்று தாரண கூறி முடித்தார்.
 
"வினோத் அவருக்காக செய்ததற்கு ராகேஷ் நிறைய பணம் கொடுக்கலாம் .. அதற்காக மனைவி கற்பு பறிபோவதை அறிந்து சும்மா இருப்பாரா?" என்று வஜேந்திர நடுவில் சொன்னார்.
 
"ஐ சீ, வினோத் உடனான தனது மனைவியின் உறவை பற்றி அறிந்து, ராகேஷ் கூலி படை வைத்து வினோத்தை கொன்றிருக்கலாம் என்று சந்தேக படுறீங்களா?"
 
தாரண மற்றும் வஜேந்திர ஆமாம் என்று தலை அசைத்தார்கள். "நிச்சயமாக இதுதான் என்று சொல்ல முடியாது அனால் இதுவும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு," என்றார் தாரண.
 
"ராகேஷ் அவரது மனைவியை விவாகரத்து செய்வது இப்படி எளிதாக இருந்திருக்கும் இல்லையா?"
 
"ராகேஷ் இப்போது தான் பொலிடிக்சில் பெரிய முன்னேற்ற நிலைக்கு போயிருக்கார். பரவலாக சொல்லுறது போல வர போகும் எலெக்க்ஷேனில் அவர்கள் கூட்டணி வெற்றி பெற்றால் அவர் அநேகமாக ஒரு மந்திரி ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த நேரத்தில் விவாகரத்து.. ஸ்கேன்டெல் எதுவும் அவர் விரும்ப மாட்டார்."
 
"எனவே, அவருக்கும் ஒரு உள்நோக்கம் உள்ளது, அது பொறாமை கொண்ட கணவனாக மட்டுமல்ல. உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த கோணத்திலும் விசாரணையை தொடருங்கள், ”என்று டிசிபி பால் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்.
 
"இப்படி நடப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கு என்று மட்டும் தான் நான் விசாரிக்கிறேன் அனால் என் எண்ணம் என்னவென்றால் இது இன்டெர் கேங் போட்டியினால் ஏற்பட்ட கொலை என்று நினைக்கிறேன்," என்றார் ACP தாரண.
 
[+] 3 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காமம் ஏற்படுத்திய தாக்கம் - by game40it - 10-03-2023, 10:13 PM



Users browsing this thread: 6 Guest(s)